வளர்ச்சி / GROWTH

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,046               டிசம்பர் 09, 2023 சனிக்கிழமை

"நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

வளர்ச்சியே உயிருள்ளவர் என்பதற்கு அடையாளம். உயிருள்ள அனைத்துமே வளர்கின்றன. ஆனால், கல்,  மண், மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை வளர்வதில்லை. இதுபோல கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுதல் நமது முதல் படியாக இருந்தாலும் நாம் அப்படியே ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் இருப்போமானால் உயிரில்லாத பொருட்கள் போலவே இருப்போம். எனவே நாம் இருந்த நிலையிலேயே இருக்காமல் கிறிஸ்து அனுபவத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆவிக்குரிய வாழ்வைக்  கட்டடம் கட்டுவதற்கு  ஒப்பாக இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலரான பவுலும் கூறியுள்ளனர். அடித்தளமான (foundation) கிறிஸ்துதான் வேர்.  அந்த வேர் மண்ணில் உறுதியாகப் பற்றிப்பிடிக்கவேண்டும்.  அதன்மேல் நாம் கட்டிடத்தைக்கட்டி எழுப்பவேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். கட்டப்படும் வீடுகளை நாம் கவனித்தால் நாளுக்குநாள் அவற்றின் வளர்ச்சியில் வித்தியாசத்தை நாம் பார்க்க முடியும்.

எனவேதான், "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்." ( மத்தேயு 7 : 24 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து. கட்டப்படும் வீடு முக்கியமல்ல, அது எதன்மேல் காட்டப்படுகின்றது என்பதும் அதிக முக்கியமானது. 

கிறிஸ்து அனுபவத்தில் எப்படி நாம் கட்டப்பட்டு எழும்புவது என்பதையும் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். அதாவது, "நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." என்கின்றார். முதலாவதாக கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தில் நாம் உறுதிப்படவேண்டும். இரண்டாவது, "எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்" என்று  கூறியுள்ளபடி தேவனைத் துதித்து ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெறவேண்டும். 

"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்கிறார் சங்கீத ஆசிரியர்.  துன்பநேரத்திலும் வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நடக்கும்போது நாம் தேவனைத் துதிப்பது அவர்மேலுள்ள நமது விசுவாசத்தை நாம் அறிக்கைபண்ணுவதாகவும் உறுதிப்படுத்துவதாகவும்  இருக்கின்றது.  இப்படி நாம் தேவனைத்  துதிப்பது அவர்மேலுள்ள விசுவாசத்தில் நாம் வேர்கொள்ளச்  செய்யும். 

இன்றைய தியானம் முதலில் நாம் ஆவிக்குரிய வாழ்வில் தினமும் வளர்பவர்களாக இருக்கவேண்டும் எனவும்  அதற்கு முதலில் இயேசு கிறிஸ்து கூறியபடி அவரது வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்து கண் மலையின்மேல் வீட்டைக் கட்டுபவர்களாக இருக்கவேண்டும் என்றும்  இறுதியாக நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கூறுகின்றது. இக்கட்டான சூழ்நிலையிலும் தேவனுக்குத் துதிச்  செலுத்தி நமது விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கையிடவேண்டும்.   

ஆம் அன்பானவர்களே, "பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுள்ளேன்" என்றும் "இரட்சிக்கப்பட்டேன்" என்றும் கூறிக்கொள்வது பெரிதல்ல கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ச்சியடையவேண்டும். 

சில குழந்தைகளுக்கு எவ்வளவு ஊட்டச்சத்துக் கொடுத்தாலும் அவை உடல்வளர்ச்சி பெறுவதில்லை. சவலைக் குழந்தைகள் என்று அவற்றைக் கூறுவார்கள். கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் நாம் ஆவிக்குரிய மேலான அனுபவங்களைப்  பெறவில்லையானால் நாமும்  சவலைக் குழந்தைகள்தான். பரம மருத்துவரான கிறிஸ்துவிடம் மீண்டும் நம்மை ஒப்புக்கொடுப்பதே அதற்குத் தீர்வு.  எனவே,  அவர்மேல் கட்டப்பட்டவர்களாக அவருக்குள் நடந்து நாம்  போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவோமாக. 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        


                        GROWTH 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,046           December 09, 2023 Saturday

"As ye have therefore received Christ Jesus the Lord, so walk ye in him: Rooted and built up in him, and stablished in the faith, as ye have been taught, abounding therein with thanksgiving." (Colossians 2: 6, 7)

Growth is the sign of being alive. All living things grow. But things like stone, earth, and wood do not grow. In this way, believing and accepting Christ is our first step, but if we are not spiritually developed, we are like inanimate objects. Therefore, the apostle Paul says that we should not remain in the same state and grow in the experience of Christ.

Jesus Christ and the Apostle Paul compared the spiritual life to building. The root is Christ, the foundation. The root should be firmly attached to the soil. Apostle Paul says that we must build on it. If we observe houses being built, we can see the difference in their development day by day.

That is why, "Therefore whosoever heareth these sayings of mine, and doeth them, I will liken him unto a wise man, which built his house upon a rock:" (Matthew 7: 24) says Jesus Christ. It is not the house that is built those matters, but what it is displayed on is more important.

The apostle Paul also explains how we are built up in the experience of Christ. That is, “stablished in the faith, as ye have been taught, abounding therein with thanksgiving." First, we must be firm in our faith in Christ. The second is to grow spiritually by praising God as it says, "Give thanks for everything."

"Praise ye the LORD: for it is good to sing praises unto our God; for it is pleasant; and praise is comely." (Psalms 147: 1) says the psalmist. In times of suffering and negative things in life, when we praise God, we declare and affirm our faith in Him. Praising God in this way will make us rooted in faith in Him.

Today's meditation tells us that first we should be those who grow daily in spiritual life, then we should be those who live according to the words of Jesus Christ and build the house on the mountain and finally we should confirm our faith. Even in difficult situations, we should praise God and declare our faith publicly.

Yes beloved, it is not enough to say "I have the assurance of forgiveness of sins" and "I am saved" we must grow into Christ.

Some children do not thrive no matter how much nutrition are given. They are like sucking child which grows lean for want of mother’s milk. Even after many years of knowing Christ in our life, if we do not have higher spiritual experiences, we are also like these children. The solution is to rededicate ourselves to Christ, the Great Physician. Therefore, as we are built upon him and walk in him, as we have been taught, let us be established in the faith and abound in it with thanksgiving.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்