Friday, December 22, 2023

ஒளி அனுபவம் / LIGHT EXPERIENCE

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,060               டிசம்பர் 23, 2023 சனிக்கிழமை 


"ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்". ( யோவான் 11 : 9, 10 )

இரவில் சாலைகளிலுள்ள மின்சார விளக்குகள் எரியாவிட்டால் நாம் தடுமாறுகின்றோம். எனவே சிலர் மின்விளக்குகள் எரியாவிட்டால் கையில் டார்ச் லைட் எடுத்துச் செல்வார்கள். சாலை விளக்குகளைக்கூட சரியாகப் பராமரிக்காத அரசு  என அரசாங்கத்தையும் அரசு அதிகாரிகளையும் திட்டுவார்கள் ஆனால் பகல் நேரங்களில் நாம்   யாரும் மின்விளக்குகளைப் பற்றி எண்ணுவதில்லை. காரணம் பகலில் நமக்குக் கண் தெளிவாகத் தெரியும். காரணம் ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்.

அன்பானவர்களே, இதுவே ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நடக்கின்றது. ஒளியாகிய கிறிஸ்துவை நாம் பெறாமல் இருப்போமானால் மின்விளக்குகள் இல்லாதச் சாலையில் நடக்கிறவர்கள்போல இருப்போம். சாலையிலுள்ள பள்ளங்கள், கற்கள், முட்கள் போன்றவை நமக்குத் தடங்கல் ஏற்படுத்தி இடறச் செய்வதைப்போல நாம் இடறி நமது ஆவிக்குரிய வாழ்வில் தடுமாற்றத்தைச் சந்திப்போம்.  

எந்த மின் தட்டுப்பாடோ தடங்கலோ இல்லாமல் நமக்கு ஆவிக்குரிய வாழ்வைத்  தொடர ஒளிதருபவர்தான் கர்த்தராகிய இயேசு  கிறிஸ்து. எனவேதான் அவர் கூறினார், "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்." ( யோவான் 8 : 12 ) அவரைப் பின்பற்றும்போது நாம் இடறாமல் இருப்பதைத் தவிர, நாமே அவரைப்போல ஒளிகொடுக்கிறவர்களாக மாறிவிடுகின்றோம். அந்த ஒளி நாம் சரியான பாதையில் நடக்கவும் மற்றவர்களுக்கு ஒளிகாட்டவும் உதவுகின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்து,  "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" ( மத்தேயு 5 : 14 ) என்றும் கூறினார். 

அதுபோல இருளில் நடக்கின்றவர்களைப் பற்றிக் கூறும்போது இயேசு,  "ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்". என்கின்றார்.  டார்ச் விளக்குபோல நம்மிடம் ஒளி இருக்குமானால் நாம் இடறமாட்டோம். அன்பானவர்களே, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாழ்வில் பெற்றுக்கொண்டவர்களாக இருப்போமானால்  பகலின் பிள்ளைகளாக இருப்போம், நாம் இடறமாட்டோம்.  இருளின் செயல்களையும் செய்யமாட்டோம்.
 
"நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 5 )

எனவே அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய வாழ்வில் இடறலில்லாமல் நடந்து வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தவேண்டுமானால் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வது அவசியமாயிருக்கிறது. கிறிஸ்து அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்வது அவசியமாயிருக்கிறது. 

நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மெய்யான மனம்திரும்புதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமானால் கிறிஸ்துவின் ஒளி நம்மில் ஒளிரும். இந்த அனுபவத்தைப் பெறாமல் இருந்துகொண்டு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுகிறோம் என்று கூறி நமது வீட்டையும் ஆலயங்களையும் ஒளியால் அலங்கரிப்பது நம்மில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. 
 
"நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" ( யோவான் 9 : 5 ) என்கிறார் கிறிஸ்து. அந்த ஒளியை நமக்குள் தங்கி நடப்போம். அப்போது நாம் பகலின் பிள்ளைகளாக இருப்போம். பகலிலே நடந்தால் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்

                  LIGHT EXPERIENCE 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,060                         December 23, 2023 Saturday

"If any man walk in the day, he stumbleth not, because he seeth the light of this world. But if a man walk in the night, he stumbleth, because there is no light in him." ( John 11 : 9, 10 )

If the electric lights on the roads are not lit at night, we stumble. So, some carry a torchlight in their hand if the streetlights don't work. They criticize the government and the government officials for not maintaining even the street lights properly but none of us think about the electric lights during the day time. Because our eyes can see clearly during the day. For if a man walks in the day, he seeth the light of this world, and shall not stumble.

Beloved, this is also happening in the spiritual life. If we do not receive Christ, who is the light, we will be like those walking on a street without electric lights. We stumble in our spiritual life just as potholes, stones, thorns in the road cause us to stumble.

Lord Jesus Christ is the one who gives us light to continue our spiritual life without any power shortage or interruption. That is why he said, "I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life." (John 8: 12) When we follow Him, not only we do not stumble, but also we become like Him who gives light. That light helps us to walk on the right path and shine light on others. That is why Jesus Christ said, "Ye are the light of the world. " (Matthew 5: 14)

Likewise, Jesus said about those who walk in darkness, "If a man walks in the night, he stumbles because he has no light." If we have light like a torch we will not stumble. Beloved, if we receive the Lord Jesus Christ into our lives, we will be children of the day and we will not stumble. Also, we will not do the works of darkness.

"Ye are all the children of light, and the children of the day: we are not of the night, nor of darkness." (1 Thessalonians‍ 5: 5)

Therefore, beloved, if we want to walk without stumbling in our spiritual life and lead a successful spiritual life, it is necessary to receive Christ. It is necessary that we receive the Christ experience.

The light of Christ will shine in us if we confess our sins to Him and commit ourselves to true repentance. Decorating our homes and churches with light while claiming to celebrate Christ's birth without having this experience will not bring any change in us.

Christ says, "As long as I am in the world, I am the light of the world." (John 9: 5)

Let us walk with that light within us. Then we will be children of the day. If we walk in the day we will not stumble because we see the light of this world, Jesus.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: