Wednesday, December 13, 2023

குமாரனை உடையவன் / HE THAT HATH THE SON

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,052               டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

மனிதன் நிலைவாழ்வு எனும் நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவன் ஆகவேண்டும் என்பதே தேவனது விருப்பம்.  ஆதியில் ஏதேனில் ஆண்டவர் ஜீவ விருட்சம் நன்மை தீமை அறியும் விருட்சம் எனும் இரு மரங்களை வளரச் செய்திருந்தார். "தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் தேவன் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ணக்கூடாது ( ஆதியாகமம் 3 : 3 ) என்று கட்டளை கொடுத்தாரேத்  தவிர ஜீவவிருட்சத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. 

ஆனால் மனிதனுக்குத் தேவனது கட்டளைக்குக் கீழ்படிவதைவிட சாத்தானின் நயவசனிப்பான பேச்சுக்குக் கீழ்ப்படிவதே இன்பமாக இருந்தது. அவனுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப்பற்றிய அக்கறையில்லை. தேவனால் விலக்கப்பட்ட நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை தேவ கட்டளையை மீறி உண்டான். எனவே தேவன் மனிதனை ஏதேனிலிருந்து துரத்தினார். மட்டுமல்ல, தேவனுக்குக் கீழ்படியாதவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனியை உண்ணத் தகுதியில்லாததால் அதனை பாவம் செய்த மனிதன் உண்ணக்கூடாது எனத் தடை செய்தார். ஆம், "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 )

ஆனால் தேவன் மனிதர்களை அப்படியே விட்டுவிடவில்லை. ஆதாமின் மீறுதலிலிருந்து மனிதர்களை விடுவித்து நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்கத் தேவன் சித்தம் கொண்டார். எனவேதான் ஜீவன் தரும் கனியாகச் சிலுவையில் தொங்கித் தன்னை விசுவாசிப்போருக்கு நித்தியஜீவனை அளிக்க முன்வந்தார்.  பிதாவிடம் சேர்வதே நித்திய ஜீவன். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 )

மேலும், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவையும் பிதாவாகிய தேவனையும் ஆராதிப்பது நித்திய ஜீவன் என்று இயேசு கிறிஸ்து கூறவில்லை. மாறாக, அவர்களை அறிவதே நித்தியஜீவன் என்று கூறுகின்றார்.  

இதயபூர்வமாக அவரை அறிந்து, அவர் நமது இருதயத்தில் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். வெறுமனே சில சடங்குகள் செய்வதால் அவர் நமது இருதயத்தில் வந்துவிடமாட்டார். ஆராதனைகள் செய்வதால் அவரை இருதயத்தில் பெற முடியாது. முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தை நாம் பெறவேண்டும். அப்போது அவர் நமது உள்ளே வருவது நமக்குத் தெரியும். அப்படி குமாரனாகிய அவரை அறிந்து நாம் நமக்குள் அவரைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் குமாரனை உடையவர்களாகின்றோம். அப்படி குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

"உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  5 : 13 ) என்கின்றார் அப்போஸ்தலரான யோவான். ஆம் அன்பானவர்களே, வேறு யாருக்கோ அவர் இதனை எழுதியதாகக் கூறவில்லை.  மாறாக "தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." என்கின்றார். இதிலிருந்து அவரை விசுவாசிப்பது என்பது வேறு அவரை இருதயத்தில் உடையவர்களாக வாழ்வது வேறு என்பது புரிகின்றதல்லவா? 

வெறும் விசுவாசிகளாக அல்ல; குமாரனாகிய அவரை  உடையவர்களாக வாழ முயலுவோம். அதற்கு முதலில் நமது பாவங்களை அவரிடம் மனப்பூரவமாக அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

             HE THAT HATH THE SON

'AATHAVAN BIBLE MEDITATION No: - 1,052                                 Friday, December 15, 2023


"He that hath the Son hath life; and he that hath not the Son of God hath not life." (1 John 5: 12)

It is God's will that man should be worthy of everlasting life. In the beginning, God made two trees grow in Eden, the tree of life, the tree of knowledge of good and evil. "And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of knowledge of good and evil.' (Genesis 2: 9)

But God did not say anything about the tree of life except that he commanded not to eat from the tree of the knowledge of good and evil (Genesis 3:3).

But it was more pleasing to man to obey Satan's persuasive speech than to obey God's command. He does not care about the fruit of the tree of life. He ate the fruit of the tree of knowledge of good and evil, forbidden by God, disobeyed God's command. So, God drove man out of Eden. Not only that, because the one who disobeys God does not deserve to eat the fruit of the tree of life, He forbade that the man who has sinned should not eat it. Yes, "So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life." (Genesis 3: 24)

But God did not leave people like that for ever. God willed to redeem men from Adam's transgression and qualify them for eternal life. That is why He offered to give eternal life to those who believed in Him by hanging on the cross as the fruit of life. Eternal life is to be joined to the Father. That is why Jesus Christ said, "I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me." (John 14:6)

And, "And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent." (John 17: 3) said Jesus Christ. Yes beloved, Jesus Christ did not say that worshiping Jesus Christ and God the Father is eternal life. On the contrary, he says that knowing them is eternal life.

We must know Him by heart and confirm His presence in our hearts. He will not come into our hearts simply by doing some rituals. You cannot get Him in your heart by doing prayers. We must first confess our sins to Him and experience being washed by His blood. Then we will have the assurance that He is coming into us. When we know Him as the Son and receive Him in ourselves, we become Sons. So, he who has the Son has life, but he who does not have the Son of God does not have life.

"These things have I written unto you that believe on the name of the Son of God; that ye may know that ye have eternal life, and that ye may believe on the name of the Son of God." (1 John 5: 13) says the apostle John. Yes, dear ones, he never told that it is written for anyone else. Rather he says, "I have written these things to you who believe in the name of the Son of God." Hence, is it not clear from this that believing in Him is different from living with Him in the heart?

Not just as believers; Let us try to live as possessors of Him, the Son. First of all, we should sincerely confess our sins to Him and ask for His forgiveness.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: