மனித முயற்சியல்ல... / NOT HUMAN EFFORT

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,049              டிசம்பர் 12, 2023 செவ்வாய்க்கிழமை

"கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா." ( சங்கீதம் 127 : 1, 2 )

மனித முயற்சி அற்பமானது என்பதை உணர்த்துகின்றது  இன்றைய தியான வசனம். விருதா என்பது வீண் என்பதைக் குறிக்கின்றது. என்னதான் நாம் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியின் வெற்றி கர்த்தரது கரத்திலேயே இருக்கின்றது. நாம் கண்டிப்பாக உழைக்கவேண்டும். நமது பாதுகாப்புக்காக சில காரியங்களைச் செய்யவேண்டும். ஆனால் அப்படிச் செய்யும்போது கர்த்தரது கிருபையைச் சார்ந்துகொள்ளவேண்டும். இல்லையானால் நமது முயற்சிகள் வீணானவையே. 

ஒரு பயிரை நாம் பயிரிட்டு, நீர் பாய்ச்சிப் பராமரிக்கலாம், ஆனால் அது விளைச்சலைக்  கொடுப்பது தேவனின்  கரத்தில்தான் இருக்கின்றது. உலக காரியங்களிலும், ஆவிக்குரிய காரியங்களிலும் ஊழிய காரியங்களிலும் இதுதான் உண்மை. நாம் எனும் மேன்மைபாராட்டல் தேவையில்லாதது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்." ( 1 கொரிந்தியர் 3 : 6 ) என்று கூறியுள்ளார். 

இன்றைய வசனத்துக்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களைக் கூறலாம் என எண்ணுகின்றேன். எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் மிக வசதியானவர். அவர் புதிதாக வீடு கட்ட அஸ்திபாரம் போட்டார். ஆனால் கைநிறைய பணமிருந்தும் அவரால் கட்டிடப் பணியைத் தொடர முடியாமல் தடைகள் வந்துகொண்டே இருந்தன. குடும்பத்தில் பிரச்சனைகள். பிறகு, வாஸ்து பார்த்தார், ஜோசியம் பார்த்தார், அவர்கள் கூறிய பரிகாரங்களைச் செய்தார். ஆனால் கட்டடம் மட்டும் கட்டி முடிந்தபாடில்லை.

இதுபோல நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களை எடுத்துக்கொள்வோம். சீக்கியர்களால் அவரது உயிருக்கு அபாயமிருந்ததால் நான்கடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றாலும் துப்பாக்கியேந்திய கறுப்புப்பூனை படை வீரர்கள்  அவரோடு சென்றனர். ஆனால் அப்படியிருந்தும் உயிருக்குப் பாதுகாப்பில்லாமல்   உடனிருந்த பாதுகாப்பு வீரனே அவரைச் சுட்டுக்கொன்றான். ஆம், கர்த்தர் காவாராகில் எத்தனைக் காவலர்கள் இருந்தாலும் அது வீண்.

ஆம் அன்பானவர்களே, கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா என்பது எப்போதும் நமது நினைவில் இருக்கவேண்டியது அவசியம். நமது ஆவிக்குரிய வாழ்விலும் இதுவே உண்மை. நமது சுய முயற்சியால் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையை வெற்றியாக வாழ முடியாது. தேவனது கிருபையினைச் சார்ந்து வாழும்போதே நாம் வெற்றிபெற முடியும். 

அதற்காக நாம் சும்மா இருக்கமுடியாது. எல்லாமே கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று இருப்பது அறிவீனம். நாம் நமது பங்கு கடமைகளை தேவனுக்கேற்பச் செய்வோமானால் அவரது கிருபையினால் நாம் நமது செயலுக்கு ஏற்ற பலனைப் பெற முடியும்.  நமது சுய பலத்தையோ பொருளாதார வசதிகளையோ வைத்துக்கொண்டு எதனையும் நாம் சாதித்துவிட முடியாது. 

எந்தச் செயலைச் செய்யும்போதும் நமது சுய பலத்தையோ திறமையையோ மட்டும் நம்பாமல், கர்த்தரது கிருபைக்காக வேண்டி செயல்படுவோம். அப்போது கர்த்தர் நமது முயற்சிகளை ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                             NOT HUMAN EFFORT 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,049                        Tuesday, December 12, 2023

"Except the LORD build the house, they labour in vain that build it: except the LORD keep the city, the watchman waketh but in vain." (Psalms 127: 1)

Today's meditation verse shows that human effort is insignificant or mear vain. Whatever we try, the success of that effort is in the hand of God. We must work hard. We have to do some things for our safety. But in doing so, we must depend on God's grace. Otherwise, our efforts will be in vain.

We can plant, water and tend a crop, but it is in God's hands to produce it. This is true in worldly affairs, spiritual affairs, and ministry affairs. There is no need for self-praise. This is what the apostle Paul said, "I have planted, Apollos watered; but God gave the increase.' (1 Corinthians 3: 6)

I think two incidents can be mentioned as examples of today's verse. One person I know is very rich. He laid the foundation for a new house. But even with a handful of money, he could not continue the construction work and obstacles kept coming. There were problems in the family. Then, he saw Vastu Shastra, invited astrologers and fortune-telling people, and did the remedies they suggested. But the building was never completed.

Similarly, take the example of our former Prime Minister Mrs. Indira Gandhi. She was provided four-fold protection as her life was in danger from the Sikhs. Wherever she went, armed Black Cat soldiers accompanied her. But even so, the security guard who was there with her shot her dead.

Yes, beloved, except the LORD build the house, they labour in vain that build it: except the LORD keep the city, the watchman waketh but in vain. The same is true in our spiritual life. We cannot live a successful spiritual life by our own efforts. We can only succeed when we depend on the grace of God.

We cannot be idle for that. It is foolish to think that God will take care of everything. If we do our part according to God's grace, we can get the fruits of our actions. We cannot achieve anything by our own strength or economic means.

While doing any work, we should not only rely on our own strength or ability, but pray for God's grace. Then the Lord will bless our efforts.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்