நீரை வாஞ்சித்துக் கதறும் மான் / DEER PANTETH AFTER THE WATER

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,058              டிசம்பர் 21, 2023 வியாழக்கிழமை


"மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் - 42:1)

தேவனை தங்களது உலக ஆசை இச்சைகளை நிறைவேற்றிடத் தேடுவோருக்கும் உண்மையயான ஆத்தும சிந்தையோடு  தேடுவோருக்கும்   மிகுந்த வேறுபாடு உண்டு. உலக ஆசைகளை நிறைவேற்றிட தேவனைத் தேடுபவர்கள் தங்களது சுய விருப்பங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லிச்சொல்லி அவைகள் நிறைவேறவேண்டுமென்றே ஜெபிக்கின்றவர்களாக இருப்பார்கள். அதாவது இவர்கள் வெறும் பக்தர்கள். தேவனிடம் பக்தியைமட்டும் காண்பித்து அதற்குக் கைமாறாக உலக தேவைகளைப் பெற எண்ணுபவர்கள்.

எனவே, உலக ஆசைகளை நிறைவேற்ற விரும்பி தேவனை தேடுபவர்கள் மேம்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவனது வல்லமை மகத்துவங்களோ, தேவனிடம்  மேலான அன்புறவோ அத்தகைய மனிதர்களிடம் இருக்காது. தேவனோடுகூட இதர புனிதர்களையும் கூடுமானால் வேறு தெய்வங்களையும் வேண்டுபவர்களாக இருப்பார்கள். ஆத்தும தாகம் என்பதை தேவனைத்  தேடுபவர்களிடம்  மட்டுமே காண முடியும்.

வெயிலில் நடந்து களைப்படைந்த   மனிதன் ஒரு குவளைத்  தண்ணீர் கிடைத்திடாதா என ஏங்குவதுபோல ஆத்தும  தாகங்கொண்டவன் தேவனைத் தாகங்கொண்டுத் தேடுவான்.

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களிடம் இத்தகைய தாகம் இருந்தது. ஜீவ ஊற்றாகிய தேவனிடமிருந்து ஜீவ தண்ணீர் இருதயத்தில் பாய்ந்து நிரப்பிட வேண்டும் என்பதே அவர்களது நெஞ்சத்தின் பெரு விருப்பமாக இருந்தது. தேவன் இத்தகைய மன விருப்பத்துடன் மனிதர்கள் தன்னைத் தேடவேண்டுமேன்றே விரும்புகிறார். 

தாவீது ராஜா இத்தகைய இறை அனுபவத்தைக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ராஜாவாக இருந்தபோதும் அந்த ராஜ பதவியோ செல்வமோ அவருக்கு ஆத்தும திருப்தியைத் தரவில்லை. தேவ ஐக்கியமே அவரது தாகமாக இருந்தது. எனவேதான் அவர் ஆத்மார்த்த அன்புடன் கூறுகிறார்:

"மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் - 42:1)

டிஸ்கவரி தொலைக்காட்சி சானலில் கோடைகாலத்தில் தண்ணீரைத்தேடி அலையும் மிருகங்களைக் காட்டுவார்கள். நீங்கள் அதைப் பார்த்திருக்கலாம். அவை பல நூறு கிலோமீட்டர்கள் வெய்யிலில் கடந்து தங்கள் குட்டிகளுடன் நீரைத்தேடி அலையும். வழியில் கொடிய விலங்குகளால் ஆபத்தும் தண்ணீரைக் கண்டு குடித்துத் தாக்கம் தீர்க்கப் போகும்போது முதலைகளால் ஆபத்தும் அவைகளுக்கு உண்டு.   ஆம், அவை நீரோடையை வாஞ்சித்துக் கதறும். அத்தகைய உணர்வில் சிறிதளவாவது நமக்குத் தேவனைத் தேடுவதில் உண்டுமா? 

தாவீது அத்தகைய உணர்வுடன் தேவனைத் தேடினார். எனவேதான் ஆத்தும தாகம்கொண்ட அவரால் எழுதப்பட்ட சங்கீதங்கள் இன்று சுமார் நாலாயிரம் ஆண்டுகாலங்கள் கடந்தபின்னரும் நமது இருதயத்தை ஊடுருவிப்பாய்கின்றன.   

நாம் தேவனைத் தேடுகிறோமா தேவனிடமிருந்து வரும் பொருள் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோமா? தேவனையேத் தேடுவோமெனில் அவர் இருதயத்தில் சுரக்கும்  ஜீவத்தண்ணீரால் நம்மைத் திருப்தியாக்குவார். இல்லையானால் நாம் வெறும் உலக மதங்களைப் பின்பற்றும் மனிதர்களைப்போல வெறும் பக்தர்களாகவே இருப்போம். தேவனைத் தேடும்போதுதான் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டதுபோல நாம் சீடத்துவ வாழ்வு வாழ்பவர்களாக வாழ முயல முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

     DEER PANTETH AFTER THE WATER 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,058                                     Thursday, December 21, 2023

“As the deer panteth after the water brooks, so panteth my soul after thee, O God”. ( Psalms 42 : 1 )

There is a great difference between those who seek God to fulfill their worldly desires and those who seek God with a true soul mind. Those who seek God to fulfill their worldly desires are the ones who take their own desires and needs and pray for them to be fulfilled. That means they are just devotees. Those who only show devotion to God and want to get worldly needs in return.

Therefore, those who want to fulfill worldly desires and seek God will be narrow minded. Such people will not know the greatness of God's power or love for God. If their desires are to be fulfilled, they will be ready to worship other saints along with God, and they will pray to other gods. Soul thirst can only be found in those who seek God.

Just as a man tired of walking in the sun yearns for a glass of water, so the soul-thirsty man thirsts for God.

Saints mentioned in the scriptures had such a thirst. The great desire of their hearts was that the water of life should flow into their hearts from God, the source of life. God wants people to seek Him with such willingness.

King David had such a divine experience. Even though he was a great king, neither his royal position nor wealth gave him soul satisfaction. God's union was his thirst. That is why he says with soulful love:

“As the deer panteth after the water brooks, so panteth my soul after thee, O God”.

Discovery TV channel shows animals wandering in search of water in summer. You may have seen it. They travel hundreds of kilometres inland to find water with their young. There is danger from dangerous animals on the way and from crocodiles when they see water and drink to relieve the effects. Yes, they cry out for a stream. Do we have even a little of that feeling in our search for God?

David sought God with such passion. That is why the psalms written by him with a thirst for soul penetrate our hearts even after the passage of about four thousand years.

Are we seeking God or are we seeking material blessings from God? If we seek God, He will satisfy us with the water of life secreted in our hearts. Otherwise, we will be mere devotees like people who follow worldly religions. Only when we seek God can we try to live the life of discipleship as Jesus Christ mentioned.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்