Saturday, December 16, 2023

வேறே ஆண்டவன்மார் / OTHER LORDS

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,054               டிசம்பர் 17, 2023 ஞாயிற்றுக்கிழமை

"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

நாம் எவற்றுக்கெல்லாம் அடிமைகளாகியுள்ளோமோ அவையெல்லாம் நம்மை ஆண்டுகொள்கின்றன என்று பொருள்.  இப்படி மனிதர்களாகிய நம்மை பல்வேறு ஆண்டவன்மார்கள் ஆளுகின்றார்கள்.  பல்வேறுவகை பாவங்கள் நம்மை  ஆளுகின்றன. எனவேதான் இயேசு கிறிஸ்து, "பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கின்றான்"  (யோவான் 8:34)  என்று கூறினார்.

இதுபோலவே மனிதர்கள், பணம், பதவி, புகழ் இவைகளுக்கு அடிமையாகி அவற்றை அடைந்திட பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றனர். இவை பல மனிதர்களை ஆளுகை செய்கின்றன.  அவர்களது குணங்களை முற்றிலும் மாற்றிவிடுகின்றன. 

தேவனை மேன்மையாக எண்ணாமல் மேற்படி பாவங்களையும் பாவத்தைத் தூண்டும் செயல்களையும் செய்து இதுவரை உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆளும்படி வாழ்ந்துவிட்டோம்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்று ஏசாயா இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  

இப்படி தேவனைத் தவிர மற்றவை நம்மை ஆளும் காரணம் படைத்த தேவனை ஆராதிக்காமல் படைக்கப்பட்டப் பொருட்களின்மேல் நாட்டம் கொள்வதும் அவற்றை வணங்குவதும் தான் என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல்.  "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்." ( ரோமர் 1 : 25 )

இப்படி மெய்யான தேவனை அறியும் அறிவைப்  பற்றிக்கொண்டிருக்க மனமில்லாதபடியால் தகாதவைகளை மனிதர்கள் செய்கின்றனர் என்கின்றார். "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) அதாவது அவர்களை தேவனே கேடான சிந்தைக்குக் கையளித்துவிடுகின்றார். எனவே தேவனை நாம் அறிய மனதில்லாமல் இருக்கும்போது இந்தக் கேடான சிந்தைகளே நம்மை ஆளுகின்றன. 

தேவனையல்லாமல் வேறு ஆண்டவன்மார் நம்மை ஆளும்போது நமது குணம் எப்படியிருக்கும் என்பதையும் அப்போஸ்தலரான பவுல் பட்டியலிட்டுக் கூறுகின்றார்:-

"அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்." ( ரோமர் 1 : 29 - 31 )

அன்பானவர்களே, வேறு ஆண்டவன்மார்களுக்கு இடம்கொடுக்கும்போது  நாம் எவ்வளவு கேடுகெட்டவர்கள் ஆகிவிடுகின்றோம் பாருங்கள்!! எனவே, "ஆண்டவரே, வேறு ஆண்டவன்மார்கள் எங்களை ஆண்டபோது நாங்கள் இப்படிப்பட்ட குணங்களுள்ளவர்களாக இருந்தோம், இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்."  என்று மனப்பூர்வமாக அவரிடம் அறிக்கையிட்டு வேண்டுவோம். அப்போது, அவரே நம்மை முற்றிலும் ஆண்டு நடத்துவார்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                 OTHER LORDS 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,054                           Sunday, December 17, 2023

"O LORD our God, other lords beside thee have had dominion over us: but by thee only will we make mention of thy name." (Isaiah 26: 13)

It means that whatever we are enslaved to, they dominate us. As such, we humans are ruled by various lords. Different types of sins rule us. That is why Jesus Christ said, "Whoever commits sin is the slave of sin." (John 8:34)

Similarly, people are addicted to money, position and fame and use various tricks to achieve them. These rule many people. They completely change their qualities.

We many times have done the above sins and various actions without considering God as superior, so far we have lived to be ruled by other lords other than you; Isaiah says in today's verse that, we will depend on you alone and proclaim your name.

Apostle Paul says that worshipping other Gods than our Lord is the reason for this; instead of worshiping the created God, worshiping the created things. "Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever." (Romans 1: 25)

He says that people do inappropriate things because they do not have the heart to grasp the knowledge of knowing the true God.

"And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;" (Romans 1: 28) That is, God gives them over to evil thoughts. So, when we do not have the heart to know God, these evil thoughts rule us.

The Apostle Paul also lists what our character will be like when we are ruled by lords other than God: -

"Being filled with all unrighteousness, fornication, wickedness, covetousness, maliciousness; full of envy, murder, debate, deceit, malignity; whisperers, Backbiters, haters of God, despiteful, proud, boasters, inventors of evil things, disobedient to parents, without understanding, covenant breakers, without natural affection, implacable, unmerciful:" (Romans 1: 29 - 31)

Beloved, see how wicked we become when we give place to other lords!! Therefore, "Lord, we were of such qualities when other lords ruled over us, now we depend on You alone and proclaim Your name." Let's sincerely report to him. Then, He Himself will guide us completely.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: