இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 06, 2023

கீழ்ப்படியாமை / DISOBEDIENCE

 ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,045              டிசம்பர் 08, 2023 வெள்ளிக்கிழமை

"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 32 : 27, 28 )

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் நாட்களில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்ற வந்தான். அப்போது எரேமியா தீர்க்கத்தரிசி மூலம் கார்த்தருடைய வார்த்தை வெளிப்பட்டது.  நிச்சயமாக எருசலேம் பிடிபடும் என்று தேவன் கூறினார். 

இன்றைய வசனத்தை நாம் வாசிக்கும்போது, "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" என்று தேவன் கேட்கிறார். ஆம் அவரால் எல்லாம் கூடும். தனது மக்களது நகரமான எருசலேமை விடுவிக்க அவரால் கூடும் ஆனால் அப்படி விடுவிக்காமல் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையில்  ஒப்புக்கொடுக்கிறேன் என்கின்றார். 

இதற்குக் காரணம் என்ன? இஸ்ரவேல் மக்கள் தேவனது வார்த்தையின்படி வாக்களித்த நாட்டைச் சுதந்தரித்துக் கொண்டார்களேத்  தவிர தேவனது குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. தங்கள் தவறான பாவ வழியிலேயே நடந்தார்கள். இதனையே நாம்,  "அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்.' ( எரேமியா 32 : 23 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் நம்மை கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு அவருக்கு விரோதமான வாழ்கையினைத் தொடருவோமானால் தேவன் நம்மை இதுபோல கைவிட்டுவிடுவார். நம்பிக்கைத்தரும் விடுதலையின் வசனங்களை நாம் கூறிக்கூறி ஜெபிக்கலாம். ஆனால் அவர் கூறுவார், "நீ ஜெபிப்பதுபோல என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை ...ஆனால் உன்னை நான் விடுவிக்கமாட்டேன்." 

"கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான்" என்று கர்த்தர் கூறிய வார்த்தைகள் தேவனால் கைவிடப்பட்ட நிலையினை எடுத்துக்கூறுகின்றது. 

ஒரு அடிமைத்தனத்திலிருந்து இன்னொரு அடிமைத்தனத்துக்கு அவர்கள் கடந்து சென்றார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆனது மகிழ்ச்சியே ஆனாலும் அந்த மகிழ்சியில் நிலைத்திருக்க முடியாமல் பாபிலோனிற்கு அடிமையானார்கள். நமக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  

உலக இச்சைகளுக்கும், பாவ நாட்டங்களுக்கும் இடம்தராமல் அவரில் நிலைத்திருக்கும்போது,  "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" எனும் வார்த்தையின்படி அதிசயமான காரியங்களை நமது வாழ்வில் செய்வார்.  

அப்படி நாம் வாழாது போனால், "கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார்." என்றபடி நம்மை கேட்டிற்கு ஒப்புக்கொடுத்துவிடுவார். 

"ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்." ( 1 யோவான்  2 : 24 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                  DISOBEDIENCE 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,045                                 Friday, December 08, 2023

"Behold, I am the LORD, the God of all flesh: is there anything too hard for me? Therefore, thus saith the LORD; Behold, I will give this city into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and he shall take it:" (Jeremiah 32: 27, 28)

During the days of Zedekiah, king of Judah, Nebuchadnezzar, king of Babylon, came to conquer Jerusalem. Then the word of God was revealed through the prophet Jeremiah. God said that surely Jerusalem would be captured.

As we read today's verse, "Behold, I am the Lord, the God of all flesh; is there anything too hard for me?" God asks. Yes, he can do everything. He said that he would be able to free the city of his people, Jerusalem, but he would not deliver it from the hands of Nebuchadnezzar, the king of Babylon.

What is the reason for this? The people of Israel did not listen to the voice of God even though they inherited the promised land according to God's word. They walked in their wrong sinful ways. This is what we read, "And they came in, and possessed it; but they obeyed not thy voice, neither walked in thy law; they have done nothing of all that thou commandedst them to do: therefore, thou hast caused all this evil to come upon them:" (Jeremiah 32: 23)

Beloved, if we claim to be saved by Christ and continue to live contrary to Him, God will abandon us like this. We can recite and pray the verses of faith and deliverance. But He will say, "There is nothing miraculous that I can do as you pray...but I will not deliver you."

The Lord's words, "I will give into the hand of the Chaldeans, and into the hand of Nebuchadnezzar the king of Babylon, and he shall take it," indicate the state of abandonment by God.

They passed from one slavery to another. Yes. Freedom from slavery in Egypt was a joy, but they could not remain in that joy and became slaves to Babylon. This should be a warning to us.

When he abides in him without giving place to worldly lusts and sinful inclinations, as he said "Behold, I am the LORD, the God of all flesh: is there anything too hard for me?” He will do miraculous things in our lives according to the Word.

If we don't live like that, "I will deliver it into the hand of the Chaldeans and into the hand of Nebuchadnezzar king of Babylon, and he will take it," says the Lord. He will hand us over to destruction.

"Let that therefore abide in you, which ye have heard from the beginning. If that which ye have heard from the beginning shall remain in you, ye also shall continue in the Son, and in the Father." (1 John 2: 24) says the Lord Jesus Christ.

God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash

No comments: