Saturday, December 09, 2023

நான் செவிடனல்ல / I AM NOT DEAF

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,048              டிசம்பர் 11, 2023 திங்கள்கிழமை

".........மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ?" ( ஏசாயா 50 : 2 )

மனிதர்கள் பொதுவாக மற்றவர்களைக் குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பொதுவாக யாரும் ஒரு தவறோ, பிரச்னைகளோ ஏற்படும்போது தன்னிடம் என்ன குறை இருந்தது என்றும் அந்தப் பிரச்சனை ஏற்பட மூலகாரணம் என்ன என்றும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. மாறாக, பிரச்சனைக்கு மற்றவர்களையே காரணமாகக் கூறுவார்கள். இப்படித் தனது தோல்விக்கும் பிரச்சனைகளுக்கும் நாம்  மற்றவர்களையே குறைகூறிக்கொண்டிருப்போமானால் நாம் அந்தப் பிரச்சனைகளிலிருந்து வெளிவர முடியாது.  

இதுபோலவே மனிதர்கள் பலரும் தேவ காரியங்களிலும் கடவுளை குறைகூறுபவர்களாகவும், அவரைக் குற்றம் சாட்டுபவர்களுமாகவே  இருக்கின்றனர். தங்களது பக்தி முயற்சிகளையும் தங்கள் ஆலயங்களுக்குச் செய்தவற்றையும் நினைத்துத் தங்களைத்   தாங்களே குறையில்லாதவர்களாக  நியாயப்படுத்திக்கொள்கின்றனர்.  "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன்; காணிக்கைகள் செலுத்துகிறேன், எத்தனைக் கோவில்களுக்குச் சென்று காணிக்கைகள் செலுத்தியுள்ளேன்......." என்பதுபோல பல எண்ணங்களை மனதில் நினைத்து, தேவன் தனக்கு பதில் செய்யவில்லை என்று குறைகூறுகின்றனர்.   

இத்தகைய மனிதர்களைப் பார்த்துத் தேவன் கேட்கின்றார்,  ".........மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ?" என்று.  அதாவது, உனது ஜெபத்துக்குப் பதிலளிக்க என்னால் முடியாது என்று எண்ணுகின்றாயா? என்கின்றார். மட்டுமல்ல, அப்படிக் குறைகூறும் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதுபோலக் கூறுகின்றார், "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை." ( ஏசாயா 59 : 1 ) என்று. அதாவது, நான் உடல் ஊனமானவனோ குருடனோ அல்ல என்கிறார் தேவன். 

ஆம், அன்பானவர்களே, நாம் தேவனைக் குறைகூறுவதைவிட்டு நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். ஆலயங்களுக்குக் கொடுப்பதைவிட, நமது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதையே தேவன் பார்க்கின்றார்.  எனவேதான் இப்படித் தேவனைக் குறைகூறும் மனிதர்களைப்பார்த்து தீர்க்கத்தரிசி ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59 : 2 ) 

ஆம், எனது கரம் மீட்கக்கூடாதபடிக்கு குறுகிப்போகவுமில்லை விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமலுமில்லை என்கிறார் பரிசுத்தரான கர்த்தர்.

இரண்டு வீடுகளுக்கு நடுவே ஆளுயர மதில் சுவர் கட்டப்பட்டிருக்குமானால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. அதுபோல மனிதர்களது பாவங்களும் அக்கிரமங்களும் மதிலாக எழும்பி தேவனுக்கும் மனிதர்களுக்கும்  நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; மனிதர்களது பாவங்களே அவர் மனிதர்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை மறைக்கிறது என்கின்றார் கர்த்தர். 

நமது ஜெபங்களுக்குத் தேவன் பதிலளிக்கத் தாமதமானால்  ஒன்றில் நாம் அவரது சித்தம் நிறைவேறிடக் காத்திருக்கவேண்டும் என்று பொருள்.  இல்லையானால் இன்றைய தியானத்தில் நாம் பார்த்தபடி தேவனுக்கு எதிராக நாம் பாவம் செய்துள்ளோமா, தேவனோடு நமது உறவு எப்படியுள்ளது என்பதனை சீர்தூக்கிப் பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.  

நமது செயல்பாடுகளும் பாவங்களும் தேவனது முகத்தை நமக்கு மறைக்காதபடி பார்த்துக்கொள்வோம். ஆம், தேவனது கரங்கள் குறுகிப்போகவுமில்லை அவரது செவிகள் மந்தமாகிப்போகவுமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                  I AM NOT DEAF

'AATHAVAN' BIBLE MEDITATION - No: - 1,048       
Monday, December 11, 2023

"Is my hand shortened at all, that it cannot redeem? or have I no power to deliver?" (Isaiah 50: 2)

Humans generally have a habit of criticizing others. Generally, when a mistake or problem occurs, no one investigates what was wrong with them and what is the root cause of the problem. Instead, they blame others for the problem. If we blame others for our failures and problems like this, we will not be able to come out of those problems.

In the same way, many people are critics and accusers of God in the affairs of God. They justify themselves as blameless because of their pious efforts and what they have done for their temples. They complain that God does not answer them, thinking many thoughts like "I pray so much; I offer offerings; how many temples I visit and offer offerings...".

Looking at such people, God asks, "Is my hand shortened at all, that it cannot redeem? or have I no power to deliver?" I mean, you think I can't answer your prayer?  Not only that, but he looks at such complaining men and says, "Behold, the LORD's hand is not shortened, that it cannot save; neither his ear heavy, that it cannot hear:" (Isaiah 59: 1) That is, I am not physically disabled or blind, says God.

Yes, beloved, we need to stop criticizing God and examine ourselves. Rather than giving to churches, God sees how our personal lives are. That is why God says through the prophet Isaiah, "But your iniquities have separated between you and your God, and your sins have hid his face from you, that he will not hear." (Isaiah 59: 2)

Yea, my hands are not shortened, that I should not save, neither shall I have strength to deliver, saith the Lord God.

If a partition wall of six feet hight is built between two houses, they cannot see each other. In the same way, the sins and iniquities of men rise up as a wall and create a separation between God and men; The sins of men hide His face so that He cannot listen to men, says the Lord.

God's delay in answering our prayers means that we must wait for His will to be done. If not, as we have seen in today's meditation, have we sinned against God, we should look at our relationship with God and correct ourselves.

Let us make sure that our activities and sins do not hide the face of God from us. Yea, LORD's hand is not shortened, that it cannot save; neither his ear deaf, that it cannot hear:"

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: