'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,059 டிசம்பர் 22, 2023 வெள்ளிக்கிழமை
"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும், திடநம்பிக்கையும் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது" (எபேசியர் - 3:12)
அன்பானவர்களே, வேதாகமம் ஒரு ஆவிக்குரிய புத்தகம். அதிலுள்ள அனைத்து காரியங்களும் நம்மை ஆவிக்குரிய முறையில் வளர்ச்சியடையவும் இறுதியில் நமது இலக்காகிய தேவனின் ராஜ்யத்தில் சேர்ந்து நித்திய நித்திய காலமாய் அவரோடுகூட வாழவும் நம்மைத் தயார்படுத்த எழுதப்பட்டுள்ளன. இந்த கண்ணோட்டத்திலேயே நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டும்.
இந்தத் தினசரி தியானத்தில் உலக ஆசீர்வாதத்தைப்பற்றி அதிகம் கூறாததால் ஆதவன் தியானம் பலருக்கு ரசிப்பதில்லை. ஆனால் அதற்காக நாம் சத்தியத்தைக் கூறாமலிருக்க முடியாது. ஆவிக்குரிய ஆசீர்வாதமே நிரந்தரம். அந்த ஆசீர்வாதத்தினை நமக்கு வழங்கவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்துத் தனது உயிரைக் கொடுத்தார். எனவே அன்பானவர்களே, வேதாகம அடிப்படையிலான சத்தியங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வமுடன் தொடர்ந்து இந்தத் தியானங்களை வாசிக்கும்படி வேண்டுகின்றேன்.
இன்றைய வசனம் நமக்குப் பிதாவாகிய தேவனோடு சேர்ந்திட வழி கூறுவதாக இருக்கின்றது. பிதாவாகிய தேவனை அடைய ஒரே வழி நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் என்பதை உறுதியுடன் கூறுகின்றது இந்த வசனம். ஆம், அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும், திடநம்பிக்கையும் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. கிறிஸ்துவை நாம் விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளும்போது முதலில் நமக்குத் தைரியம் ஏற்படுகின்றது. பின்னர் உறுதியான நம்பிக்கை ஏற்படுகின்றது. இந்த தைரியமும் உறுதியான விசுவாசமும் நம்மைப் பிதாவாகிய தேவனை அடைந்திடச் செய்கின்றது.
உலகத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள், துன்பங்கள் சவால்கள் இவற்றை மேற்கொள்ளவேண்டுமானால் ஆவிக்குரிய இந்தத் தைரியமும் திட விசுவாசமும் நமக்குத் தேவையாக இருக்கின்றது. இல்லையானால் நாம் உலகக் கவலைகளில் அமிழ்ந்து அழிந்துபோய்விடுவோம். நமது ஆவிக்குரிய வாழ்வும் சிறப்புற அமையாது.
கிறிஸ்துவை நாம் அறியாமலிருந்த பழைய நாட்களில் நாம் கிறிஸ்துவைச் சேராதவர்களாக இருந்தோம். அவரது சொத்துக்கு புறம்பானவர்களும், அன்னியர்களும், நம்பிக்கையில்லாதவர்களும் மெய்யான தேவனை வாழ்வில் பெறாதவர்களுமாக இருந்தோம் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்." ( எபேசியர் 2 : 12 )
இப்போது, அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும், திடநம்பிக்கையும் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. அதாவது மேற்கூறப்பட்டக் குறைகள் யாவும் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது நிவர்தியாகின்றன என்கின்றார்.
அவரைப் பற்றும் விசுவாசம் என்பது கிறிஸ்து ஒருவரே வழி, அவரே தேவ குமாரன் என்று விசுவாசிப்பது. எனவே அவரைத்தவிர நமக்கு வேறு யாரும் உதவிட முடியாது என்று அவரையே உறுதியாக பற்றிக்கொள்வது. பிதாவாகிய தேவனுக்கும் நமக்கும் இடையே மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்து ஒருவரே என்று உறுதியாக நம்பிச் செயல்படுவது. "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; ( 1 தீமோத்தேயு 2 : 5, 6 )
இப்படி நாம் அவரைப் பற்றும் விசுவாசத்தோடு இருப்போமானால் அவருக்குள் நமக்குத் தைரியமும், திடநம்பிக்கையும் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாகும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
WITH CONFIDENCE BY THE FAITH OF HIM
'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,059 Friday, December
22, 2023
"In whom we have boldness
and access with confidence by the faith of him." (Ephesians 3: 12)
Beloved, the Bible is a
spiritual book. Everything in it is written to prepare us to grow spiritually
and ultimately join God's kingdom as our destination to live with Him forever
and ever. It is from this perspective that we should read the Bible.
AATHAVAN Bible meditation is
not enjoyed by many people as it does not talk much about worldly blessings. But
for that we cannot be silent, but tell the truth. Spiritual blessings are
eternal. Christ Jesus came into the world and gave his life to give us that
blessing. So dear ones, I request you to continue reading these meditations
with interest to know the truths based on scriptures.
Today's verse tells us the
way to join God the Father. This verse affirms that the only way to reach God
the Father is through our Lord Jesus Christ. Yes, because of faith in him we
have courage and confidence in him to approach God. When we lay hold of Christ
by faith, we first have courage. Then there is firm belief. This courage and
steadfast faith enable us to approach God the Father.
We need this spiritual
courage and strong faith if we want to face the problems, sufferings and
challenges that arise in the world. Otherwise, we will drown in worldly cares
and perish. Our spiritual life will also be shattered.
In the old days when we did
not know Christ, we were unchristian. The apostle Paul says that we were
aliens, strangers, unbelievers, and those who did not receive the true God in
life. "That
at that time ye were without Christ, being aliens from the commonwealth of
Israel, and strangers from the covenants of promise, having no hope, and
without God in the world:" (Ephesians 2: 12)
Now, through faith in him,
we have boldness and confidence in him to draw near to God. In other words, he
says that all the above-mentioned defects are solved when we cling to Christ.
Faith in Him is believing
that Christ is the only way, the Son of God. So, clinging to Him firmly that no
one else can help us but Him. Believing that Jesus Christ is the Mediator
between us and God the Father. "For there is one God, and one mediator between God
and men, the man Christ Jesus;" (1 Timothy 2: 5)
If we have faith in Him like
this, then we will have courage, confidence, and the ability to join God in
Him.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment