இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, December 23, 2023

சரியாகத் தேடுவோம் / SEEK RIGHTLY

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,061              டிசம்பர் 24, 2023 ஞாயிற்றுகிழமை 

"யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்." ( மத்தேயு 2 : 2 )

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்குமுன்பே அவரது பிறப்பு பல தீர்க்கதரிசிகளால் முன்குறிக்கப்பட்டு, அவர்  பிறந்தபோது முதல்முதலில் வயல்வெளியில் ஆடுகள்  மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதுபோல, ஞானிகள், பரிசுத்தவான்கள் பலருக்கும் அவரது பிறப்பு அறிவிக்கப்பட்டது. அப்படிக் குறிப்பிட்ட நட்சத்திரம் தோன்றியதால்  அவரது பிறப்பை  அறிந்துகொண்ட கீழ்த்திசை ஞானிகள் அவரைக் சந்திக்கப் புறப்பட்டு வருகின்றனர். 

அவர்கள் முதலில் கண்ட நட்சத்திரம் அவரது பிறப்பை அவர்களுக்கு அறிவித்ததே தவிர அவர் எங்கு பிறந்துள்ளார் என்பதனை துல்லியமாக அறிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் யூதரின் ராஜா பிறந்துள்ளார் என அறிந்ததால் அவர் நிச்சயமாக ஒரு அரண்மனையில் ராஜகுமாரனாகப் தான் பிறந்திருப்பார் என எண்ணி ஏரோது ராஜாவின் அரண்மனைக்குச் சென்றுவிடுகின்றனர். ஆம், அவர்கள் இயேசு கிறிஸ்துவாகிய மேசியாவை உலக அரசராகவே எண்ணிக்கொண்டனர்.

அன்பானவர்களே, நாமும் இன்று பலவேளைகளில் அப்படிதான் கிறிஸ்துவை மதிப்பிடுகின்றோம். உலக ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே அவரைப் பார்க்கின்றோம். அவர் ராஜாதான். ஆனால் உலக ராஜாக்களைப் போன்றவரல்ல.  இதனையே இயேசு கிறிஸ்துத் தெளிவாகக் கூறினார், "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல," ( யோவான் 18 : 36 ) என்று. 

ஆனால் அன்று ஞானிகளது தவறை தேவன் அப்படியே விட்டுவிடவில்லை. அவர்களது ஆழ்மன எண்ணங்களை தேவன் உணர்த்திருந்ததால் அவர்களுக்கு வழிகாட்ட முதலில் கண்ட நட்சத்திரத்தை மீண்டும் அனுப்பினார்.  "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்." ( மத்தேயு 2 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரமே அதன் பின்பு அவர்களை வழிநடத்திச் சென்றது.

நம்மைக் கிறிஸ்துவை நோக்கி வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு இந்த நட்சத்திரத்தை நாம் ஒப்பிடலாம். இந்த நட்சத்திரம் எப்படி ஞானிகளை கிறிஸ்துவை நோக்கி வழி நடத்தியதோ அதேபோல நாம் கிறிஸ்துவை விட்டுத் தவறிச் சென்று விடாமல் பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவுக்கு நேராக நடத்துகின்றார். 

எனவேதான் இயேசு கிறிஸ்து, "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்று கூறினார். இந்தப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்று வாழ்வில் கிறிஸ்துவை நோக்கிச் செல்வதே கிறிஸ்தவ வாழ்வு. 

சிலர் கூறுவதுபோல, நமது வீட்டில் நட்சத்திர விளக்குகள் அலங்கரிப்பு செய்வது கிறிஸ்து இங்கு இருக்கிறார் என்பதற்கு அடையாளமல்ல. நமது வாழ்க்கை ஒளியாக மாறுவதே கிறிஸ்து நம்மிலும் நமது வீட்டிலும் இருக்கிறார் என்பதற்கு அடையாளம். கிறிஸ்துமஸ் மரத்தை  அலங்கரிப்பு செய்து வைப்பது  சிலர் கூறுவதுபோல சிலுவைமரத்தின் நினைவுகூரலுமல்ல. அலங்காரமான கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்து யாரும் சிலுவை மரத்தை நினைவுகூர்ந்து தியானிப்பதுமில்லை. 

இவை வெறும் பாரம்பரியங்கள். அவற்றைச் சில கிறிஸ்தவர்கள் பிற மதத்தினர் தங்கள் சடங்குகளை நியாயப்படுத்துவதுபோல நியாயப்படுத்துகின்றனர். அவற்றைச் செய்வது நமது ஆவிக்குரிய வாழ்வில் எந்த மாறுதலையும் கொண்டுவராது. ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவை உதவுவதுமில்லை. நமது விருப்பத்துக்கும் ஆசைக்காகவும்  செய்கின்றோம் அவ்வளவே.

எனவே அன்பானவர்களே, வழி தவறிச் சென்ற ஞானிகளைப்போல கிறிஸ்து இல்லாத இடத்தில்  அவரைத் தேடாமல் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். சத்திய ஆவியாகிய அவரே நம்மை நிறை உண்மையை நோக்கி வழிநடத்துவார்.  முற்றிலுமாக உலக காரியங்களுக்கும் வழிபாடுகளுக்கும் அலங்காரங்களும்  முன்னுரிமை கொடுக்காமல் நமது உள்ளத்தை அவருக்கு உடைமையாக்குவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                  SEEK RIGHTLY

'AATHAVAN' Bible Meditation - Number: - 1,061       December 24, 2023 Sunday

"Where is he that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him." (Matthew 2: 2)

Before Jesus Christ was born in this world, his birth was announced by many prophets, and when he was born, it was first announced to shepherds in the fields. Likewise, his birth was announced to many saints. As a particular star appeared, the wise men from east started their journey to meet him.

The star they first saw informed the birth of a king, but did not accurately announce where he was born. But because they knew that the king of the Jew was born, they thought he would be born in a palace, and they went to the palace of Herod. Yes, they considered Jesus Christ as the world king.

Dear people, we often value Christ today like this. We see him as a world king fulfilling our worldly desires. He is king indeed. But not like the kings of the world. This is what Jesus Christ clearly said, "My kingdom is not of this world" (John 18: 36)

But God did not leave the mistake of the wise on that day. Since God had realized their subconscious thoughts, he sent back the star that they first saw. "When they saw the star, they rejoiced with exceeding great joy." (Matthew 2: 10) it is said. The star then led them.

We can compare this star to the Holy Spirit who leads us to Christ. Just as this star led the wise towards Christ, the Holy Spirit treats us straight to Christ without letting us go wrong.

This is why Jesus Christ said, "Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come." (John 16: 13) The Christian life is to get this Holy Spirit and know Christ in life.

As some say, decorating our home with stars is not a sign that Christ is here in our home. The sign is that Christ is in us and in our home is to turn our life into a life of light. Decorating the Christmas tree is not the recall of the crucifixion, as some say. Looking at the ornamental Christmas tree, no one meditate on the cross.

These are just traditions. Some Christians justify them as other religions justify their rituals. Doing them will not bring any change in our spiritual life. They do not help for our spiritual life. That is, they are acts what we do for our will and desire.

So dear brothers and sisters, we should give ourselves to the guidance of the Holy Spirit, rather than seeking Christ anywhere else. He is the Spirit of Truth, who will lead us to the truth. We should make our hearts to him without giving priority to the worldly things and worship.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: