இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, December 19, 2023

நான் தனித்திரேன் / I AM NOT ALONE

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,057              டிசம்பர் 20, 2023 புதன்கிழமை

"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 )

இந்த உலக வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்காது. அதுபோல நம்மோடு இன்று இருக்கும் குடும்ப உறவினர்கள், நண்பர்கள்  எல்லோரும் எப்போதும் நம்மோடு இருப்பார்கள் என்று கூற முடியாது. தனித்துவிடப்படும் காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் வரும். இயேசு கிறிஸ்து தன்னைப்பற்றி கூறியதுபோல அவரைப் பின்பற்றும் நமக்கும் தனிமையின் காலம் ஒன்று  வரும். ஆனால் நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்வோமானால் நமது  தனிமை நம்மை வருத்தப்படுத்தாது. காரணம், "ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." என்று இயேசு கிறிஸ்து கூறியதுபோல நம்மோடும்  அவர் இருக்கின்றார். 

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை உலகத்தில் அனுப்பியதுபோல கிறிஸ்து நம்மை இந்த உலகத்தில் சீடத்துவ வாழ்வு வாழ அனுப்பியுள்ளார். எனவேதான்  "நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 ) என்று சீடர்களிடம் கூறினார். அவர் அனுப்பியதால் பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவைத் தனித்திருக்கவிடவில்லை. அதனையே இன்றைய வசனத்தில் அவர் கூறுகின்றார், "ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்" என்று. 

எனவே, பிதா இயேசுவை அனுப்பியதுபோல நம்மை இயேசு உலகத்தில் அனுப்பும்போது அவரும் எப்போதும் நம்முடன் கூடவே இருப்பார் என்பது உறுதி.  எனவே, இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கூறுகின்றார், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 )

அதாவது பிதா அவரோடுகூட இருந்ததால் இயேசு துன்பத்தை ஜெயித்து உலகத்தை ஜெயித்ததுபோல நாமும் துன்பங்களைக் கடந்து ஜெயிப்போம். எனவே திடன் கொள்ளுங்கள் என்கின்றார். இந்த உலகத்தில் தனது இறுதி நாட்களில் இயேசு மிகவும் நெருக்கப்பட்டார். அவரது சீடர்கள் அனைவரும் அவரைவிட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர் தனித்து விடப்பட்டார். ஆனால் பிதாவாகிய தேவன் அவரோடு இருந்ததை இயேசு உறுதியாக உணர்ந்திருந்தார். 

அன்பானவர்களே, நமக்கும் உலகத்தில் துன்பம் ஏற்படும்போது இப்படிப்பட்ட சூழநிலை ஏற்படலாம். நல்ல செழிப்பாக வாழும்போது ஆயிரம் உறவுகள் நம்மைச்சூழ்ந்து இருந்தாலும் வறுமைப்பட்ட நிலை வருமானால் எல்லோரும் நம்மைவிட்டு ஓடிவிடுவார்கள்.   நாம் தனித்திருக்கும் சூழல் வரலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும்போது எப்படி பிதாவாகிய தேவன் அவரைக் கைவிடாமல் அவரோடு இருந்தாரோ அதேபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருந்து நம்மை ஜெயிக்கவைப்பார். ஆம் அன்பானவர்களே, உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 
 
ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்து கூறியதுபோல நாமும் கூறவேண்டுமானால் அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம். அப்படி வாழ்வோமானால் அவர் நம்மோடு இருப்பார். உலக மக்களோடு மக்களாக  உலகத்துக்கு ஏற்ற வாழ்ந்துவிட்டு பிரச்சனை, துன்பம் வரும்போது மட்டும் தேவனைத் தேடுவதில் அர்த்தமில்லை. அவரோடு நம்மை இணைத்துக்கொண்டு வாழும்போது அவரும் நம்மோடு இருப்பார். அப்போதுதான் நாமும் உறுதியுடன், "ஆனாலும் நான் தனித்திரேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்." என்று கூறி வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். 

அவர் நம்மோடு இருப்பதை அவரோடு ஐக்கியமான உறவுகொண்டு உறுதிப்படுத்திக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                 I AM NOT ALONE

'AATHAAN' BIBLE MEDITATION No:- 1,057                        Wednesday, December 20, 2023

"Behold, the hour cometh, yea, is now come, that ye shall be scattered, every man to his own, and shall leave me alone: and yet I am not alone, because the Father is with me." (John 16: 32)

Life in this world is not always full of happiness. Likewise, it cannot be said that all the family relatives and friends who are with us today will always be with us. A period of isolation comes in everyone's life. As Jesus Christ said about himself, we who follow him will also have a period of loneliness. But if we live in Christ our loneliness will not grieve us. The reason is, “yet I am not alone, because the Father is with me." He is with us as Jesus Christ said.

Just as God the Father sent Jesus Christ into the world, Christ has sent us to live a life of discipleship in this world. Hence "As thou hast sent me into the world, even so have I also sent them into the world." (John 17: 18) He said to the disciples. God the Father did not leave Jesus Christ alone because he sent him. He says the same thing in today's verse, "Yet I am alone, and the Father is with me."

Therefore, it is certain that when Jesus sends us into the world as the Father sent Jesus, He will always be with us. Therefore, following today's meditation verse, Jesus says, "These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world." (John 16: 33)

That is, because the Father was with him, just as Jesus overcame suffering and overcame the world, we will also overcome suffering. So, he says, be strong. Jesus was very much pressed in his last days on this earth. All his disciples left him and fled. He was left alone. But Jesus was sure that God the Father was with him.

Beloved, we too can have such a situation when there is suffering in the world. When we live in good prosperity, we are surrounded by thousands of relations, but when poverty comes, everyone runs away from us. There may be a situation where we are alone. But when we live in Christ, as God the Father was with him without abandoning him, the Lord Jesus Christ will be with us and we will overcome adverse situations. Yea, beloved, ye have tribulation in the world, but be of good cheer; I have overcome the world, says the Lord Jesus Christ.

However, if we want to say that I am not alone, Jesus is with me, we must live a life that suits him. If we live like that, he will be with us. There is no point in seeking God when we live according to the world as worldly people and seeking Him only when there is trouble. When we live in union with Him, He will be with us. Only then can we say with conviction, "Yet I am not alone, and the Lord Jesus Christ is with me." You can succeed in life by saying that.

Let us confirm that He is with us by having a united relationship with Him.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: