இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, December 15, 2023

அவர் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து / REALIZING HIS PRESENCE WITHIN US

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,053               டிசம்பர் 16, 2023 சனிக்கிழமை

"அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." ( யோவான் 1 : 11 )

இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் சில குடும்பங்களில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைக்குறித்தச்  செய்திகளை அறிகின்றோம். குழந்தைகளது முன்னேற்றத்துக்காக அயராது உழைக்கும் பெற்றோர்கள் கைவிடப்படும் நிலையில் அவர்களது மனது எவ்வளவு வேதனைப்படும் என்று எண்ணிப்பாருங்கள். அத்துடன் பெற்றோர்கள் கட்டிய வீட்டிலேயே அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிடும்போது எப்படியிருக்கும்? ஆம், கிறிஸ்துவையும் உலகம் அப்படிதான் ஏற்றுக்கொள்ளாமல் துரத்தியது. 

இந்த உலகைப் படைத்தவர் அவர்தான். இதனை நாம், "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 ) என்று வாசிக்கின்றோம். மேலும், "இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்." ( எபிரெயர் 1 : 2 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி அவரால் உண்டாக்கப்பட்ட அவருக்குச் சொந்தமான உலகத்தில் அவர் வந்தார். "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." 

இதற்குக் காரணம் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மனமில்லாமைதான். "நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 13 : 11 ) என்று  எரேமியா மூலம் கர்த்தர் கூறுகின்றார். 

அன்பானவர்களே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னுரிமைகொடுத்து அந்த விழாவுக்காக ஆயத்தம்பண்ணும் நாம் அவரை நமக்குள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவேண்டாமா? அவர் தனக்கு விழா எடுக்கவேண்டும், அந்த நாளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுக்கவேண்டும், புத்தாடைகள் அணிந்து மகிழவேண்டும், கறிவிருந்து உண்ணவேண்டும்   என்று எதிர்பார்க்கவில்லை. மாறாக, நமது  உள்ளங்களில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டுமென்றுதான்  அவர் எதிர்பார்க்கின்றார்.

அப்படி இடம்கொடுக்காமல் நாம் வாழும்போது தாயையும் தகப்பனையும் வீட்டைவிட்டுத் துரத்திவிட்டு கறி விருந்து சாப்பிடும் மகனைப்போலவே நாம் இருப்போம். நமது இருதயக் கதவைத் திறந்து அவரை உள்ளே அனுமதிக்காமல் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் அர்த்தமிழந்ததாகவே இருக்கும். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் கர்த்தராகிய ஆண்டவர். 

அவருக்குச் சொந்தமான நம்மைத் தேடிவந்த அவரை ஏற்றுக்கொள்வோம்; அவருக்குச் சொந்த மக்களாக வாழ்வோம். பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டுக்கு ஒருநாள் அல்ல; தினசரி அவர் நமது உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து அவரோடு வாழும் மேலான அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

 REALIZING HIS PRESENCE WITHIN US 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,053                      December 16, 2023 Saturday

"He came unto his own, and his own received him not." ( John 1 : 11 )

In this world we often hear news about children who abandon their parents in some families. Imagine the heartbreak of parents who work tirelessly for the betterment of their children when they are abandoned. Also, think of their condition when parents are thrown out of the house they built? Yes, Christ was rejected by the world in the same way.

He is the creator of this world. "He was in the world, and the world was made by him, and the world knew him not." (John 1: 10) we read. And, "Hath in these last days spoken unto us by his Son, whom he hath appointed heir of all things, by whom also he made the worlds;" (Hebrews 1: 2) Thus, he came into a world of his own, created by him. "He came into his own, and his own received him not."

This is due to unwillingness to listen to his words. "So have I caused to cleave unto me the whole house of Israel and the whole house of Judah, saith the LORD; that they might be unto me for a people, and for a name, and for a praise, and for a glory: but they would not hear." (Jeremiah 13: 11) says the Lord through Jeremiah.

Beloved, should we not prepare ourselves for the celebration of Christmas by prioritizing it and preparing for it? He did not expect to have a festival for himself, to hold contests and give gifts on that day, to enjoy wearing new clothes and to eat mutton curry. Rather, He expects us to give Him a place in our hearts.

When we live without such space, we will be like the son who chases his mother and father away from home and eats delicious mutton feast. The Christmas we celebrate without opening the door of our heart and letting him in will be meaningless.

"Behold, I stand at the door, and knock: if any man hear my voice, and open the door, I will come in to him, and will sup with him, and he with me." (Revelation 3: 20) says the Lord God.

Let us accept Him who sought us as His own; Let us live as His own people. Not one day a year, but to confess sins; Let us enjoy the greater experience of living with Him daily by realizing His presence within us.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: