பூரண அன்பு / PERFECT LOVE

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,056              டிசம்பர் 19, 2023 செவ்வாய்க்கிழமை






"பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" ( மாற்கு 5 : 36 )



இன்றைய வசனம் ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனாகிய  யவீரு என்பவனைப்பார்த்து இயேசு கிறிஸ்து கூறியது.  மரணத்துக்கு ஏதுவாக இருக்கும் தனது மகளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் உதவி வேண்டி அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்தவன்தான் யவீரு. ஆனால் இயேசு கிறிஸ்து அவனோடு செல்லும்போது இடையில் தடங்கலாக, இரத்தப்போக்கு  நோயுற்ற ஒரு பெண் வந்து  விடுகின்றாள். அவளோடு பேசிக்கொண்டு இயேசு காலதாமதம் பண்ணவே யவீரு மனம்கலங்கி நிற்கின்றான். அப்போது அவனைப்பார்த்து இயேசு "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்று நமது வாழ்விலும் சில இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போது நாமும் தேவனது காலதாமதமான பதிலைக்கண்டு  யவீரைபோலக் கலங்கிவிடுகின்றோம்.  நமது ஜெபத்துக்குத் தேவன் பதில் தருவாரா எனக் குழம்புகின்றோம். ஆனால் கர்த்தர் சொல்கிறார், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு." 

அப்போஸ்தரான யோவான் இயேசு கிறிஸ்துவின் அன்பான சீடன். இயேசுவைக்குறித்து முற்றிலும் அறிந்தவர். அவர் நமக்கு ஒரு தெளிவைக் கூறுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) அதாவது, விசுவாசியான நமக்குள் பயம் ஏற்படுகின்றது என்றால் நாம் இன்னும் கிறிஸ்துவிடமுள்ள அன்பில் முழுமையடையவில்லை என்று பொருள் என்கின்றார். எனவேதான் பயம் ஏற்படுகின்றது. பயமானது நமக்கு வேதனையைத் தருவதாக உள்ளது.  

இதனைக் கூறும்போது நான் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகின்றது. கணவனைக் கொலைசெய்ய முயன்ற மனைவி உணவில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டாள். ஆனால் பின்னர் மருத்துவர்கள் உதவியால் எப்படியோ அவன் உயிர் பிழைத்துவிட்டான். அவன் காவல்துறையினரிடம் கூறும்போது, "சார், ஒவ்வொருநாளும் மரணபயத்தில்தான் நான் அவளுடன் வாழ்ந்தேன். அவள் என்னைக் கொலைசெய்துவிடுவாள் என்று பயந்து இரவில் சரியாகத் தூங்கியதுகூட இல்லை." அன்பானவர்களே, இந்த மனிதன் இப்படிக் கூறுவதற்குக்  காரணம் என்ன? அன்பில்லாத வாழ்க்கை. யோவான் கூறுவதுபோல பூரண அன்பு இருந்திருக்குமானால் ஏன் இந்த பயமும் கொலை முயற்சியும்? 

ஆம், அன்பற்ற குடும்பத்தில் பயமும் சந்தேகமும் எழுவதுபோல தேவனிடமுள்ள அன்பில் நாம்  குறைவுபடும்போது சந்தேகமும்  நிம்மதிக் குறைவு ஏற்படுகின்றது. நமது தேவன் நம்மை நமது கருவிலேயே கண்டு நம்மை உருவாக்கி நடத்திவருபவர். நமது தேவைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால் தேவன் சிலவேளைகளில் நமது ஜெபங்களுக்குப் பதில்தர தாமதிக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் இருக்கும். நமது விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக, நம்மை ஆவிக்குரிய வாழ்வில் பலப்படுத்துவதற்காகவும்  அல்லது நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தைவிட மேலான ஒன்றை நமது  வாழ்வில் தருவதற்காகவும்   தேவன் தாமதிக்கலாம்.   

தேவனது காலங்களையும் வேளைகளையும் நாம் முற்றிலும் அறியமுடியாது. ஆனால்,  "அவர் சகலத்தையும் அதனதன் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்." ( பிரசங்கி 3 : 11 ) என்று வாசிக்கின்றோம். ஆம், அவர் அனைத்தையும் நேர்த்தியாய்ச் செய்கின்றவர். 

எனவே அவர்மேலுள்ள நமது அன்பு குறைந்திடாமல் காத்துக்கொள்வோம். அவர்மேலுள்ள அன்பு அதிகரிக்க அதிகரிக்க நமது விசுவாசமும் உறுதிப்படும். பயமானது நம்மைவிட்டு அகலும். "பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல"  

கிறிஸ்துவின்மேலுள்ள அன்பில் பலப்பட்டு பயப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருப்போம்.  

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                   PERFECT LOVE

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,056                           Tuesday, December 19, 2023

"Be not afraid, only believe." (Mark 5: 36)

Today's verse is spoken by Jesus Christ to Jairus, one of the leaders of the synagogue. Jairus came to Jesus Christ for rescuing his dying daughter and asked Jesus to come to his home. But as Jesus Christ walks with him, a certain woman who had an issue of blood for twelve years interrupted. Jairus was upset because Jesus is spending time with her. He was worried about his dying daughter. Then Jesus looks at him and says, "Be not afraid, only believe." 

Beloved, when some difficult situations occur in our lives today, we too get confused like Jairus because of God's delayed response. We are confused whether God will answer our prayers. But the Lord says, "Fear not, be of faith."

Apostle John was a beloved disciple of Jesus Christ. He is fully aware of Jesus. He gives us a clarification, "There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love." (1 John 4: 18) That is, if fear arises in us as believers, it means that we are not yet perfect in our love for Christ. That is why fear arises. Fear causes us pain.

While saying this, I remind a news I read. The wife tried to kill her husband and poisoned his food. But later with the help of doctors somehow, he survived. He told the police, "Sir, I lived with her in fear of death every day. I didn't even sleep well at night because I was afraid, she would kill me." Beloved, what causes this man to say this? A life without love. If there was perfect love as John says then why this fear and attempted murder?

Yes, just as fear and doubt arise in an unloving family, when we fall short in our love for God, doubt and peace also fall. Our God saw us in mother’s womb and created us will sustain us. He knows all our needs. But there is a reason why God is sometimes slow to answer our prayers. God may delay to strengthen our faith, to strengthen us in our spiritual life, or to give us something better than we expect.

We cannot know God's times and seasons completely. But, "He hath made everything beautiful in his time: also, he hath set the world in their heart, so that no man can find out the work that God maketh from the beginning to the end." (Ecclesiastes 3: 11) we read. Yes, He is the perfecter of all things.

So, let's keep our love for him not diminishing. As our love for Him increases, so will our faith. Fear will leave us. "Fear is painful, and he who fears is not perfected in love."

Let us be strong in our love for Christ and be faithful without fear.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்