Tuesday, December 26, 2023

வசனமே நியாயந்தீர்க்கும் / THE WORDS SHALL JUDGE

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,064               டிசம்பர் 27, 2023 புதன்கிழமை 

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. நாம் கூறுவதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். காரணம்,  தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. எனவே கிறிஸ்துவின் வசனத்தைப் புறக்கணிக்கின்றவன் துணிந்து தனது மனச்சாட்சிக்கு எதிராகச் செயல்படுபவனாக இருக்கிறான். இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுதி  நியாயத் தீர்ப்பில் தப்பிட  முடியாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. என்னை ஏன் வணக்கவில்லை என்று அவர் கேட்கமாட்டார், மாறாக அவரது வசனத்தின்படி வாழ்ந்தோமா என்பதே நியாயத் தீர்ப்பின் அடிப்படை. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                    

          THE WORDS SHALL JUDGE 

‘AATHAVAN' BIBLE MEDITATION  No:- 1,064                                 Wednesday, December 27, 2023

"He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him; the word that I have spoken the same shall judge him in the last day." (John 12:48)

It is their personal choice to accept Christ or not. But it is the duty of Christians to proclaim Christ to everyone. Because Jesus Christ himself said this as a commandment before going to heaven. "Then he said to them: Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; and he that believeth not shall be demned." (Mark 16: 15, 16) we read.

Our only duty is to preach. That's what Christians do, they don't proselytize. Some Christian workers who claim to be doing ministry and have no knowledge or experience in the scriptures make a mistake in this. We cannot bring anyone to Christ by force unless we sow the words of the Lord Jesus. It is their choice “He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him; the word that I have spoken the same shall judge him in the last day” also applies to Christians who claim to have accepted Christ and live a life contrary to God’s words and call themselves Christians. Are our lives according to the Word of Christ? We are also obliged to investigate.

This is what Jesus Christ says in today's meditation verse. That means you sow my words. Whoever does not accept it will be judged by my verse. Because God's words have life and power. It penetrates the soul of man and pierces his soul, his thought, his action, his body. Therefore, he who ignores the word of Christ dares to act against his conscience. We read this in the Epistle to the Hebrews: -

“For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and spirit, and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart.” ( Hebrews 4 : 12 )

No matter what religion one belongs to, the conscience is the same. That is the sign that all are made by the same God. Therefore, no man can escape the final judgment.

This is what the apostle Paul says, “Which shew the work of the law written in their hearts, their conscience also bearing witness, and their thoughts the mean while accusing or else excusing one another;” ( Romans 2 : 15 ) Yes, the laws of the Lord are written in the hearts of all men.

The Word of God is righteous and transcends religions. Therefore, Jesus Christ says that the word I said will judge him on the last day. He will not ask, “why you have not worshipped me?” but the basis of judgment is whether we have lived according to His Word. This is why we preach the gospel to everyone.

We cannot live righteously when we reject Christ and do not believe His words. His verse alone has the power to guide us on the right path.

God’s Message :- Bro. M. Geo Prakash            

No comments: