'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,047 டிசம்பர் 10, 2023 ஞாயிற்றுக்கிழமை
"தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்."( 2 கொரிந்தியர் 5 : 19 )
மனிதர்கள் இயல்பிலேயே பாவ நாட்டமுடையவர்கள். காரணம், ஆதிப்பெற்றோரின் பாவ குணம் நாம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் தேவன் இந்தப் பாவ மனிதர்களை மீட்பதற்காகவே தனது குமாரனை உலகிற்கு அனுப்பினார். நமது பாவங்களை அவர் எண்ணினால் நாம் அவரிடம் சேரமுடியாது. நாம் பரிசுத்தமாகவேண்டும், அவரோடு நித்திய காலமாக வாழவேண்டும் என்பதற்காக அவர் பாவ மன்னிப்பு எனும் ஒப்புரவை ஏற்படுத்தினார்.
எனவே, அவருடைய இரத்தத்தால் நாம் பாவங்கள் நீங்கி சுத்திகரிக்கப்படுகின்றோம். இதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை போதனை. இதனையே அப்போஸ்தலரான பவுல், ஒப்புரவாகுதலின் உபதேசம் என்று கூறுகின்றார்.
தேவன் அப்போஸ்தலரான பவுலை முதல்முதல் சந்தித்தபோது மக்களிடம் பாவ மன்னிப்பைப் போதிக்கவே கட்டளைக்கொடுத்தார். "அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )
தேவனுடைய கட்டளைப்படி அப்போஸ்தலரான பவுல் இதனையே முக்கிய போதனையாகப் போதித்து வந்தார். "ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் (பாவ மன்னிப்பு பெறுங்கள்) என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 20 ) என்கின்றார். ஸ்தானாபதிகள் (பிரதிநிதிகள்) எனும் வார்த்தை ஆங்கிலத்தில் representative or ambassador (அனுப்பப்பட்டவர்) என்பதைக் குறிக்கும். ஆதாவது நாங்கள் கிறிஸ்துவினால் பாவ மன்னிப்பின் நற்செய்தியினை மக்களுக்குச் சொல்லும்படி அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் என்கின்றார்.
ஆனால் இந்த ஒப்புரவின் உபதேசம் இன்று மறைக்கப்பட்டு செழிப்பின் உப(தேசம் அல்லது ஆசீர்வாத உபதேசம் மேலோங்கியுள்ளது. உலக ஆசீர்வாதங்களைக் கொடுப்பதற்கு இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரிக்கத் தேவையில்லை எனும் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இன்று ஊழியர்கள் பலரும் மக்களை இருளிலே நடமாடவைத்துள்ளனர்.
அன்பானவர்களே, ஒரு மிருகத்தைப்போல அடிபட்டுத் தனது சுய இரத்தத்தால் கிறிஸ்து உருவாக்கிய மீட்பினை மறுதலித்து உலக ஆசீர்வாதங்களுக்காக அவரைத் தேடினால் நிச்சயமாக நாம் ஆசீர்வாதம் பெற முடியாது. காரணம், ஒரு மிருகத்தைப்போல அவர் நமக்காகக் கொல்லப்பட்டார். ஆசீர்வாத உபதேசம் செய்வதும் உலக ஆசீர்வாதத்துக்காக அவரைத் தேடுவதும் அவரது பரிசுத்த இரத்தத்தை அவமதிக்கும் செயலாகும்.
"ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 ) என்று வாசிக்கின்றோம்.
ஒப்புரவின் போதனைத்தான் மெய்யான கிறிஸ்தவ போதனை. அவரைப்போல நிந்தைகளையும் நமது பாவங்களையும் சுமந்து நகர வாசலுக்குப் புறம்பே கொல்லப்பட்ட பலியாடாகிய அவரிடம் செல்லவேண்டியதே நாம் செய்யவேண்டியது. "ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 13 )
நமது பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் நம்மைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை ஒப்படைத்த கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம். பாவ மன்னிப்பைப் பெற்று அவரை மகிமைப்படுத்தி வாழ்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
RECONCILIATION
'AATHAVAN' BIBLE MEDITATION- No:- 1,047 Sunday, December 10,
2023
"To
wit, that God was in Christ, reconciling the world unto himself, not imputing
their trespasses unto them; and hath committed unto us the word of
reconciliation." (2 Corinthians 5: 19)
Humans are naturally prone
to sin. The reason is that we all have the sinful nature of Adam and Eve. But
God sent his Son into the world to redeem us. If he counts our sins, we cannot reach
him or stand before him. He made the forgiveness of sins so that we can be holy
and live with Him for eternity.
Therefore, we are cleansed
from our sins by His blood. This is the basic teaching of Christianity. This is
what the apostle Paul calls the word of reconciliation.
When God met the apostle
Paul for the first time, he commanded him to preach the forgiveness of sins. "To
open their eyes, and to turn them from darkness to light, and from the power of
Satan unto God, that they may receive forgiveness of sins, and inheritance
among them which are sanctified by faith that is in me." (Acts 26: 18)
According to God's command,
the apostle Paul used to teach this as the main teaching. "Now
then we are ambassadors for Christ, as though God did beseech you by us: we
pray you in Christ's stead, be ye reconciled to God." (2 Corinthians 5: 20)
he says.
That means we are representatives sent by Christ to tell the people the good
news of forgiveness of sins.
But this has been hidden
today and the teaching of prosperity or blessing has prevailed. Many Christian
pastors and evangelists today have made people walk in darkness without even have
the basic understanding that Jesus Christ did not need to come to the world to
suffer and die to give worldly blessings.
Beloved, if we reject
Christ's redemption made by His own blood, beaten like a beast and killed, and
seek Him for worldly blessings, surely, we cannot be blessed. Because he was
slain for us like an animal. To preach blessings and seek Him for worldly
blessings is an act of dishonor to His holy blood.
"For
the bodies of those beasts, whose blood is brought into the sanctuary by the
high priest for sin, are burned without the camp. Wherefore Jesus also, that he
might sanctify the people with his own blood, suffered without the gate." (Hebrews
13: 11, 12) we
read.
The teaching of redemption through
the blood of Jesus is the true Christian teaching. All we have to do is to go
to him, who was slain outside the city gates, bearing our reproaches and our
sins like him. "Let us go forth therefore unto him without
the camp, bearing his reproach." (Hebrews 13: 13)
Let us not count our sins,
but let us live in gratitude to Christ who has made us conformable to himself
in Christ and entrusted us with reconciliation through grace. Let us receive
forgiveness of sins and live to glorify Him.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment