சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது / ALL THINGS WORK TOGETHER FOR GOOD

 🌿 'ஆதவன்' தியான எண்:- 1,004  🌿                                  🌹அக்டோபர் 28, 2023 சனிக்கிழமை 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

ஆவிக்குரிய வாழ்வில் நம்மைத் திடப்படுத்த அப்போஸ்தலரான பவுல் கூறும் இன்றைய வசனம் உதவியாக இருக்கின்றது. அதாவது, நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் சிலவேளைகளில் நமக்குத் துன்பங்களும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் நாம் மனம் தளர்ந்து போய்விடக்கூடாது. காரணம், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.

நமது வாழ்வில் பின்னாளில் நடக்க இருப்பவை பற்றி நமக்குத் தெரியாது. நம்மைக்குறித்தச் சில காரியங்களை தேவன் மறைவாகவே வைத்திருக்கின்றார். எனவே நாம் துன்பப்படும்போது இந்தத் துன்பத்தின் பின்னால் மிகப்பெரிய ஆசீர்வாதம் நமக்கு உண்டு என்பதை நாம் உணரவேண்டும். இன்றைய வசனம் கூறுவதன்படி அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களாக நாம் இருந்தால் போதும். 

தேவனிடம் அன்புகூருதல் என்பது பாவத்துக்கு விலகி வாழ்வதுதான். இன்றைய தியான வசனத்துக்கு மிகச் சரியான உதாரணம் யோசேப்பு. உடன்பிறந்தவர்களால் பகைக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டு, அடிமையாக இருந்த நாட்டில் ஆபாண்டமாய்ப் பொய்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைக் கைதியாகி இப்படிப் பல்வேறு தொடர் சோதனைகள் அவன் வாழ்வில்.  இவை அனைத்தும் தேவன் அவன்மேல் அன்புகூர்ந்து அவனை எகிப்துக்கு பிரதம மந்திரியாக மாற்றிடச் செய்தச் செயல்கள். அவனும் தேவனுக்குப் பயந்து பாவச் சூழ்நிலைவந்தபோதும் அதற்கு விலகித் தன்னைப்  பரிசுத்தமாய்க்  காத்துக்கொண்டான். 

யோசேப்புப் பிரதம மந்திரியானபின்  தன்னைக் கொடுமைப்படுத்தி அடிமையாக விற்பனைசெய்த சகோதரர்களைச் சந்தித்தபோது கூறுகின்றான்.  "பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுவதற்கும் அதிபதியாகவும் வைத்தார்." ( ஆதியாகமம் 45 : 7, 8 ) 

துன்பத்தின்வழியில் அவனை நடத்தி அவனை உயர்த்தி மக்களையும் காப்பது தேவனது முன்திட்டம்.    ஆம் அன்பானவர்களே, தான் கொடுமைகளை அனுபவித்தபோது யோசேப்புக்கு பின்னாளில் நடக்கப்போவது தெரியாது. ஆனாலும் அவன் தேவனுக்குமுன் உண்மையுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்தான். 

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதை தெசலோனிக்கேய சபை மக்களுக்கு அறிவிக்க அப்போஸ்தலரான பவுல் தனது உடன் ஊழியனான தீமோத்தேயுவை அந்தச் சபைக்கு அனுப்புகின்றார். அப்போது,   "உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 2 ) என எழுதுகின்றார்.

அன்பானவர்களே, எனவே துன்பங்களைக் கண்டு சோர்ந்துபோக வேண்டாம். தேவனிடத்தில் அன்புகூரும்போது நமக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்       

ALL THINGS WORK TOGETHER FOR GOOD  

'AATHAVAN ' Meditation No:- 1,004                        🌹October 28, 2023 Saturday🌹

"And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose." (Romans 8: 28)

Today's verse by the apostle Paul is helpful to strengthen us in spiritual life. That is, even if we live a life that is right for God, sometimes we experience sufferings and crises. We should not lose heart in such situations. The reason is that all things work together for good to those who love God.

We do not know what will happen later in our life. God keeps some things secret about us. So, when we suffer, we must realize that behind this suffering we have a great blessing. As today's verse says, it is enough if we are those who love God as those who are called according to His purpose.

To love God is to live away from sin. A perfect example of today's meditation verse is Joseph. He was hated by his siblings, sold as a slave, falsely accused, and imprisoned in a country where he was a slave. All these are the deeds that God did as He loved him and already decided to make him the prime minister of Egypt. He also feared God and kept himself holy even when sinful situations came.

After he became prime minister of Egypt, Joseph says to his brothers who tortured him and sold him as a slave. "And God sent me before you to preserve you a posterity in the earth, and to save your lives by a great deliverance. So now it was not you that sent me hither, but God: and he hath made me a father to Pharaoh, and lord of all his house, and a ruler throughout all the land of Egypt." (Genesis 45: 7,8)

It is God's plan to lead him through suffering and lift him up and protect the people. Yes, dear ones, Joseph did not know what was going to happen later when he was suffering. Yet he lived a faithful life before God.

The apostle Paul sends his fellow worker Timothy to the church in Thessalonica to tell them that all things are working together for good for those who love God, who are called according to his purpose. So he writes, "And sent Timotheus, our brother, and minister of God, and our fellow labourer in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith:”(1 Thessalonians‍ 3 : 2 )

Beloved, therefore do not be weary of suffering. When we love God, everything happens for our good.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash                       

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்