Saturday, December 23, 2023

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை / GLORY TO GOD IN THE HIGHEST

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,062              டிசம்பர் 25, 2023 திங்கள்கிழமை 

"உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக." ( லுூக்கா 2 : 14 )

இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாகப் பிறந்ததை முதன்முதலில் அறிந்தவர்கள் மேய்ப்பர்கள்தான். விண்ணுலகின் தேவதூதன் அவர்களுக்குத் தோன்றி இயேசுவின் பிறப்பை அறிவித்தான். அதனைத் தொடர்ந்து  திரளான தூதர்கள் தோன்றி, "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்." 

தூதர்களது செய்தியால் பயந்த மேய்ப்பர்களுக்குத் தூதன், "பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்." ( லுூக்கா 2 : 10, 11 ) என்று அறிவித்தான். 

இப்படி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விண்ணகம் மண்ணகம் இரண்டையுமே மகிழ்ச்சியுறச் செய்தது. விண்ணகம் ஏன் மகிழ்ந்தது? காரணம் மனிதனாகப் பிறந்த இயேசு ஆதியில் தேவனோடு வார்த்தையாக விண்ணகத்திலிருந்தவர். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என்று வாசிக்கின்றோம். அந்த வார்த்தை தேவ சித்தத்தை நிறைவேற்றிட பூமியில் மனிதனாகப் பிறந்தது. எனவே விண்ணகத்தில் மகிழ்ச்சியுண்டானது. 

மண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாகக்  காரணத்தைத் தேவ தூதனே, "பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்று கூறினான். அதாவது கிறிஸ்துவின் பிறப்பு பூமியில் சமாதானத்தைக் கொண்டுவந்தது.   பாவத்தால் அமைதியிழந்து மனச்சமாதானமில்லாமல் அலையும் மக்களுக்குச் சமாதானம் உண்டானது. இரண்டாவது மனிதர்கள்மேல் பிரியம், அதாவது அன்பு உண்டானது. அளவிடமுடியாத அவரது அன்புதான் (கிருபை) நமக்குப் பாவத்திலிருந்து விடுதலை தருகின்றது.  

ஆம் அன்பானவர்களே, ஆதியில் வார்த்தையாக தேவனோடிருந்த கிறிஸ்து நம்மைப்போல இரத்தமும் சதையுமுள்ள மனிதனானார். "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நோக்கத்தோடேயே பிறக்கின்றது. அதுபோல கிறிஸ்துவும் ஒரு நோக்கத்தோடுதான் பிறந்தார். அந்த நோக்கம் வித்தியாசமான நோக்கம். ஆம், அவர் சாகவேண்டும் எனும் நோக்கத்தோடேயே உலகினில் பிறந்தார். அவரது இறுதி இலக்கே பிதாவின் சித்தப்படி உலக மீட்புக்காகத் தனது உயிரைக் கொடுப்பதுதான். இப்படித் துணிந்து அவர் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்ததால் உன்னதத்தில் மகிழ்ச்சி உண்டானது. 

எனவே அவரது மீட்புக் திட்டத்தில் நாமும் இணைந்து நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது உன்னத மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆம், பாவிகள் மனம்திரும்பும்போது விண்ணகம் மகிழும் என்று இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார். மட்டுமல்ல, பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகும். தேவனுக்கு மகிமையும் பூமியில் சமாதானமும் உண்டாக நம்மை அவருக்குக் கையளிப்போம். கிறிஸ்துப் பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாக்குவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        
     
     GLORY TO GOD IN THE HIGHEST 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,062                                  Monday, December 25, 2023

"Glory to God in the highest, and on earth peace, good will toward men." (Luke 2: 14)

Shepherds were the first to know that Jesus Christ was born as a human being. An angel from heaven appeared to them and announced the birth of Jesus. Then many angels appeared and praised God, saying, "Glory to God in the highest, and peace on earth, and good will to men."

The angel said to the shepherds who were frightened by the news of the angels, "And the angel said unto them, Fear not: for, behold, I bring you good tidings of great joy, which shall be to all people. For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord." (Luke 2: 10,11)

Thus, the birth of Jesus Christ made both heaven and earth happy. Why was the heaven happy? The reason is that Jesus, who was born as a man, was in heaven as a word of God in the beginning. "In the beginning was the Word, and the Word was with God, and the Word was God." (John 1: 1) we read. That Word was born as a man on earth to fulfill God's will. So happy in heaven.

God's messenger said that the reason for happiness on earth is, "There will be peace on earth and love among men." That means the birth of Christ brought peace on earth. Peace came to the people who wandered restlessly because of sin. The second is love for humans. It is His immeasurable love (grace) that frees us from sin.

Yes, beloved, Christ, who was in the beginning with God as the Word, became a man of flesh and blood like us. "And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth." (John 1: 14) we read.

Every child born on this earth is born with a purpose. Likewise, Christ was born with a purpose. That purpose is a different purpose. Yes, he was born into the world with the intention of dying. His goal was to give his life for the redemption of the world according to the Father's will. As he bravely volunteered to sacrifice his life like this, there was joy in the nobility.

So joy increases when we join in His redemptive plan and have our sins forgiven. Yes, Jesus Christ himself said that heaven rejoices when sinners repent. Not only that, there will be peace on earth and love among men. Let us give ourselves to Him that there may be glory to God and peace on earth. Let's make Christmas meaningful.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: