பெருமை / PRIDE

 ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,043                 டிசம்பர் 06, 2023 புதன்கிழமை

"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 17, 18 )

பெருமை அல்லது மேன்மைபாராட்டல் என்பது தேவன் வெறுக்கும் முக்கியமான ஒரு பாவம். ஆதியில் தேவதூதர்கள் தங்கள் பெருமையினால்தான் விழுந்து நரகத்தில் தள்ளப்பட்டனர். (எசேக்கியேல் 28) எனவேதான் "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) மற்றும் (யாக்கோபு 4:6) என்று நாம் வாசிக்கின்றோம்.  

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்பதால் பெருமையுள்ளவர்களது ஜெபங்களையும்  தேவன் கேட்பதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை உணர்வதில்லை. அற்ப பெருமைபேசி மற்றவர்களை அவமதிக்கின்றனர். மேலும் பெருமைக்கு அளவே கிடையாது. பெருமைக்கு அடிமையானவர்கள் மதுபோதையில் இருபவர்களைப்போல மாறிவிடுகின்றனர். ஓர்  ஆலயத்தில் நான் கண்டக்காட்சி, ஆலயத்திற்கு மின்விசிறி அன்பளிப்பாக அளித்த நபர் அந்த மின்விசிறியின் இறக்கைகளில் ஒன்றில் தனது பெயரையும், இன்னொன்றில் தனது மனைவி பெயரையும் மூன்றாவது இறக்கையில் தனது இரு குழந்தைகளில் பெயரையும் எழுதி  வைத்துள்ளார்.  மனிதர்களது அற்ப பெருமைக்கு இது ஒரு உதாரணம். 

மக்களுக்குப்  பெருமை தங்களது அறிவைக்குறித்தும், உடல் பலத்தைக்குறித்தும், செல்வச் செழிப்பைக்குறித்தும் அழகைக்குறித்தும் இப்படி பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஏற்படுகின்றது. ஆனால் இவை வீணானவை என்று எவரும் எண்ணுவதில்லை. திடீரெனெ இவை நம்மைவிட்டுப் போய்விடலாம். எனவேதான் எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் கூறுகின்றார்:-  

"ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 23, 24 )

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல்  கூறுகின்றார்.  "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." என்று. அதாவது இப்படிப் பெருமைபேசும் மனிதர்கள் உத்தமர்களாக இருக்கமுடியாது. கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து கர்த்தரால் புகழப்படுவோமானால் அப்போது நாம் உத்தமர்கள். மேலும், நாம் மேன்மை பாராட்டவேண்டுமானால், வானத்தையும் பூமியையும் சர்வலோகத்தையும் படைத்து ஆண்டுவரும் கர்த்தரை அறிந்திருப்பதைக்குறித்தே மேன்மைபாராட்ட வேண்டும் என்கின்றார்.  "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்." 

எனவே அன்பானவர்களே, நமது வாழ்க்கையில் பெருமை ஏற்பட்டுவிடாமல் கவனமாக வாழ்வோம். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்எனும் வார்த்தைகளின்படி, நாம் தாழ்மையாய் வாழும்போது தென் கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தாழ்மையினையும் தேவன் அவரை எப்படி உயர்த்தினார் என்பதனையும் பிலிப்பியர் 4 : 6 முதல்  11 வரையிலான வசனங்களை வாசித்து உணர்ந்துகொள்வோம்.  எவ்வளவு உயர்வு வாழ்க்கையில் வந்தாலும் தாழ்மையுடன் வாழ்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

                            PRIDE 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,043                       Wednesday, December 06, 2023

"But he that glorieth, let him glory in the Lord. For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth." ( 2 Corinthians 10 : 17, 18 )

Pride or conceit is a major sin that God hates. In the beginning, the angels fell and were cast into hell because of their pride. (Ezekiel 28) That is why we read, "Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble." (1 Peter 5: 5) and (James 4:6)

God does not listen to the prayers of the proud because God opposes the proud. But most people don't realize this. They boast and insult others. And pride knows no bounds. People addicted to pride become like drunkards. I saw a scene in a temple where a person who donated a fan to the temple wrote his name on one of the wings of the fan, his wife's name on the other and the names of his two children on the third wing. This is an example of human pride.

People are proud of their knowledge, physical strength, wealth and beauty based on various aspects. But no one thinks that these are in vain. Suddenly these may leave us. That is why God says through the prophet Jeremiah: -

"Thus saith the LORD, Let not the wise man glory in his wisdom, neither let the mighty man glory in his might, let not the rich man glory in his riches: But let him that glorieth glory in this, that he understandeth and knoweth me, that I am the LORD which exercise lovingkindness, judgment, and righteousness, in the earth: for in these things I delight, saith the LORD." (Jeremiah 9: 23, 24)

This is what the apostle Paul says in today's meditation verse. “For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth." This means that such proud people cannot be honest. If we live a life worthy of God and be glorified by God, then we are righteous. Also, if we want to be praised, we should be praised for knowing the Lord who created the heavens, the earth and the universe. "He that glorifies, let him glorify in the Lord."

So dear ones, let us live carefully so that pride does not arise in our lives. According to the words God opposes the proud and gives grace to the humble, when we live humbly, grace surrounds us. Let us understand the humility of the Lord Jesus Christ and how God exalted him by reading the verses from Philippians 4:6 to 11. No matter how high we come in life, let us live with humility.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்