தேவனின் வேதனையான கேள்வி / PAINFUL QUESTION OF GOD

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,042               டிசம்பர் 05, 2023 செவ்வாய்க்கிழமை

"என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?" ( எரேமியா 2 : 6 )

இந்த உலகத்தில் சில மனிதர்களுக்கு நாம் நன்மைகள், உதவிகள்  பல செய்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் முன்பு இருந்ததைவிட மேலான நிலைக்கு வரும்போது  நாம் செய்த உதவிகளை பலவேளைகளில் நினைத்துப்பார்ப்பதில்லை. மட்டுமல்ல, நம்மிடமுள்ள தொடர்பையும்கூட அறுத்துவிடுவார்கள். "இந்த ஆளுக்கு நாம் எவ்வளவோ உதவிகள் செய்துள்ளோமே, இவர் ஏன்  நம்மைப் புறக்கணிக்கின்றார்?" என  நாம் எண்ணிக்கொள்வோம் 

இதற்கு மனோதத்துவ காரணம் என்னவென்றால் அவர்களது பழைய தாழ்ந்த நிலைமை நமக்கு நன்குத் தெரியும். எனவே அவர்கள் இன்று நல்ல நிலைமைக்கு வந்தபிறகு நம்மைப் பார்க்கும்போது அவர்களது மனமே "இந்த ஆளால்தான் நீ இன்று இந்த நிலைமையில் இருக்கின்றாய் " என உணர்த்தும். அவர்கள் அதனை விரும்புவதில்லை. வாழ்வில் சுயமாக தங்கள் உயர்ந்ததுபோல எண்ணிக்கொள்கின்றனர். 

மனிதர்கள் தேவனிடமும் இதே மனநிலையில்தான் இருக்கின்றனர். இன்றைய தியான வசனத்தில் இதனையே ஒரு மனிதன் மனம் வருந்திக் கூறுவதுபோல தேவன் கூறுகின்றார், "என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?"

தேவன் இஸ்ரவேல் மக்களுக்குப் பல அதிசயங்கள் அற்புதங்கள் செய்து எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவர்களை பாலும் தேனும் வழியும் கானானுக்குள் கொண்டு வந்துசேர்ந்தார். அதனையே "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்," ( எரேமியா 2 : 5 ) என்று இன்றைய வசனத்தின் முந்தினவசனமாகக் கூறுகின்றார். 

நான் இன்னின்ன உதவிகள் செய்து உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்தேனே அப்படியிருக்க என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.

அன்பானவர்களே, இது எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரிடமும் தேவன் கேட்கும் கேள்வி. நமது வாழ்கையினை நினைத்துப் பார்ப்போம். தேவன் என்னென்ன நன்மைகளை நமக்குச் செய்துள்ளார், நமது பிள்ளைகளுக்கு அவர் என்னென்ன நன்மைகள் செய்துள்ளார், எத்தனை பெரிய வியாதிகளிலிருந்து நம்மை காத்து வழிநடத்தியுள்ளார் என்பதை நினைத்துப்பார்த்து அவருக்கு நன்றி சொல்வோம். 

மட்டுமல்ல,   இவ்வளவு நன்மைகள் செய்த தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா என்றும் சிந்தித்துப் பார்ப்போம். வெறுமனே சடங்குக்காக ஆலயம் வந்து செல்வதல்ல, நமது வாழ்வில் அவரை நாம் அறிய முயன்றுள்ளோமா? தேவனை அறிந்து அவருக்கேற்ற வாழ்க்கை நாம் வாழ்கின்றோமா என்பதை நாம் எண்ணிப் பார்ப்போம்.

தேவன் நமது வாழ்வில் எத்தனை நன்மைகள் செய்திருந்தபோதும் அதனை மறந்து அற்ப ஆதாயத்துக்காக தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு பணம், சொத்து, பதவி சுகங்களுக்காக அலைந்திருப்போமானால் அவர் நம்மிடமும் இன்றைய வசனத்தைப் போல கேட்பார், "மகனே, மகளே, என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டாய்?" 

தேவன் நமதுவாழ்வில் செய்த அனைத்து நன்மைகளுக்காக நன்றிகூறி அவருக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். இன்று ஒரு அன்பான தகப்பனாய், தாயாய் நம்மிடம் இப்படிக் கேட்கும் அவர் அடுத்து நியாயாதிபதியாய் வரும்போது அன்புள்ளவராக அல்ல; அதிகாரமுள்ளவராக வருவார். அப்போது நாம் அவரிடம் இந்த அன்பையல்ல, நீதியைத்தான் எதிர்பார்க்க முடியும். எனவே எச்சரிக்கையாய் இருந்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

      PAINFUL QUESTION OF GOD 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,042                         Tuesday, December 05, 2023

"Thus, saith the LORD, What iniquity have your fathers found in me, that they are gone far from me, and have walked after vanity, and are become vain?" (Jeremiah 2: 5)

Although we have done a lot of favors and help to some people in this world, they often do not think of the help we have done when they reach a higher level in life than they were before. Not only that, they will also cut off our communication. "We have helped this man so much, why does he ignore us?" we think like this.

The psychological reason for this is that; they were aware of their old inferiority. So, when they look at us after reaching a good position today, their mind will tell them “You are in this good position today because of this person". They don't like it. They consider they have raised in life because of their hard work.    

Humans are in the same state of mind with God. In today's meditation verse, God says this as a repentant man says, “What iniquity have they found in me, that they are gone far from me, and have walked after vanity, and are become vain?"

God performed many miracles for the people of Israel and rescued them from slavery in Egypt and brought them into Canaan, the nation of milk and honey.  "Neither said they, where is the LORD that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought, and of the shadow of death, through a land that no man passed through, and where no man dwelt?" (Jeremiah 2: 6)

What injustice have they found in me, that I have brought your fathers out of Egypt by doing so many favors, that they have turned away from me, and followed vanity, and become vain? Says the holy Lord.

Beloved, this is a question God asks of each of us, not just the Israelites who were rescued from Egypt. Let's think about our life. Let us think of what good things God has done for us, what good things He has done for our children, and how many great diseases He has protected us from and give thanks to Him.

Not only that, but let's think if we are grateful to God who has done so many good things. Are we trying to know Him in our lives and not just going to the temple for rituals? Let us consider whether we know God and live a life according to Him.

No matter how many benefits God has done in our lives, if we forget it and engage in things that are against God for small gains and wander for money, property, and position, He will ask us like today's verse, "Son, daughter, what injustice do you see in me that you are far away from me, following vanity, and become vain?"

Let us thank God for all the good things He has done in our lives and commit ourselves to Him to live a life that suits Him. He who asks us this as a loving father and mother today will not be beloved when he comes as a powerful judge. Then we can expect from him not this love, but justice. So, let's be cautious and decide to live a life that suits him.

God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்