Tuesday, December 12, 2023

நாம் தொலைந்த ஒரு ரூபாய் நாணயம் / WE ARE LOST ONE RUPEE COIN

ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,050                டிசம்பர் 13, 2023 புதன்கிழமை

"மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15 : 7 )

தேவனுடைய பார்வைக்கும் மனிதர்களது பார்வைக்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் விளக்குகின்றார். 

நம்மிடம் பர்சில் பத்தாயிரம் ரூபாய் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதேநேரம் நமது சட்டைப்பையிலுள்ள ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்து தொலைந்துபோய்விட்டது என்று வைத்துகொள்வோம். நாம் என்ன செய்வோம்? அதனைத் தேடி அலைவோமா? பெரும்பாலும் அந்த ஒரு ரூபாயை நாம் மனதில் எண்ணவே மாட்டோம். 

ஆனால் தேவன் அப்படியல்ல; அவருக்கு ஏற்கெனவே தன்னிடமுள்ள பத்தாயிரம் ரூபாய்  மகிழ்ச்சியைத் தராது. மாறாக, தொலைந்துபோன அந்த ஒரு ருபாய் நாணயத்துக்காக மனம் வருந்தியவராகவே இருக்கின்றார். தொலைந்த அந்த ஒரு ரூபாய் நாணயம் கிடைத்துவிடும்போது ஏற்கெனவே தன்னிடமுள்ள பத்தாயிரம் பணம் தரும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைகின்றார்.  இதுவே தேவ மனநிலை. 

தேவனது இந்த மனநிலையினை நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. இயேசு கிறிஸ்து கூறிய இந்த உவமை அவர் மனிதர்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதனை விளக்குவதாக உள்ளது. 

நாம் ஏற்கெனவே மேலே பார்த்த ஒரு ரூபாய் உதாரணத்தைப்போல தேவன் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவரது இரண்டாம் வருகை தாமதிக்கின்றது என்கிறார் அப்போஸ்தலரான பேதுரு.  "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

உடனேயே அவர் வருவதாக இருந்தால் பலர் பரலோகத்துக்குத் தகுதியில்லாமல் நரக அக்கினிக்குச் செல்லவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் மனம்திரும்ப அவகாசம்கொடுத்து தனது வருகையைத் தாமதிக்கின்றார். 

அன்பானவர்களே, இப்படி அன்புள்ள தேவனாக அவர் இருக்கும்போது நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ எவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்!!! ஆம், நாம் தான் தேவன் தேடும் அந்த ஒரே பாவி என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் இன்னும் அவருக்கு ஏற்புடையவர்களாக வாழவேண்டும் எனும் ஆவல் நம் உள்ளத்தில் உருவாகும். 

நீதிமான்களைப்பற்றி கவலையில்லை. யாரெல்லாம் நீதியுள்ள வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றும் நாம் பார்க்கத் தேவையில்லை. பாவிகளாகிய நம்மைக் காணும்போது அவர் மகிழ்ச்சியடைகின்றாரா என்பதுதான் முக்கியம். உடைந்த உள்ளத்தோடு நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். அப்போது பாவியாகிய நாம், தொலைந்துபோன அந்த ஒரு ரூபாய் நாணயமான நாம் அவருக்கும் முழு பரலோகத்துக்கும்  மகிழ்ச்சியைக் கொடுக்கிறவர்களாக இருப்போம்.  

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

      WE ARE LOST ONE RUPEE COIN 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,050                                  Wednesday, December 13, 2023

"I say unto you, that likewise joy shall be in heaven over one sinner that repenteth, more than over ninety and nine just persons, which need no repentance." (Luke 15: 7)

In today's verse, Jesus Christ explains the great difference between the vision of God and the vision of men.

Suppose we have ten thousand rupees in our purse. But at the same time suppose one rupee coin in our pocket falls down and gets lost. What shall we do? Shall we search for it? Most of the time we don't even think about that one rupee.

But God is not like that; The ten thousand rupees he already has will not make him happy. On the contrary, he is worried for that one-rupee coin that was lost. When the lost one-rupee coin is found, he is happier than the happiness of ten thousand money which he already has. This is the state of God.

We cannot understand this attitude of God. This parable told by Jesus Christ is to explain how much he loves people.

The apostle Peter says that God's second coming is delayed because God gives importance to men, as we have already seen above. "The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance." (2 Peter 3: 9)

He is delaying His second coming to give them time to repent because if He were to come immediately many would be unworthy of heaven and go to hellfire.

Beloved, when He is such a loving God, how concerned we should be to live a life worthy of Him!!! Yes, it is necessary for each of us to have the idea that we are the only sinner that God is looking for. Only then will the desire to live more acceptable to Him develop in our hearts.

Don't worry about the righteous. We don't need to see who is living a righteous life. What matters is whether He is pleased to see us sinners. Let us confess our sins to Him with a broken heart. Then we sinners, that lost one-rupee coin, will be a joy to him and to entire heaven.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: