Sunday, December 17, 2023

மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வோம் / SHALL REAP IN JOY

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,055              டிசம்பர் 18, 2023 திங்கள்கிழமை

"அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்." ( சங்கீதம் 126 : 6 )

கிராமத்து விவசாயிகளோடு பல ஆண்டுகள் பழகியதால் விவசாயிகளின் வாழ்க்கைப்பற்றி பல விஷயங்கள் தெரியும்படி கர்த்தர் கிருபை செய்தார். விவசாயிகளின் வாழ்க்கை பருவகாலத்தோடு அதிகம்தொடர்புள்ளது. நகரவாசிகள் காலையில் எழுந்து அவசர அவசரமாக அலுவலகம் செல்வதுபோல அல்ல அவர்களது வாழ்க்கை.  மாதம் முடிந்தால் நகரவாசிக்குக்  கையில் சம்பளம் கிடைப்பதுபோல விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும் ஆக்டோபர் மாதத்துக்குமுன்னே  விவசாயத் தயாரிப்பு வேலைகளை அவர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். கையில் பணமில்லாவிட்டால் இருக்கும் சிறு தங்க நகைகளை அடகுவைத்தோ கடன் வாங்கியோத்  தயாராக இருப்பார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததல்ல.   காரணம் வீட்டுச் செலவுகளையும் விவசாயச் செலவுகளையும் கவனிக்கவேண்டும். நிலத்தை உழுது பண்படுத்தி, உரமிட்டு  விவசாயம் செய்யத்  தயாரிக்கவேண்டும். மழை வந்ததும் விதைக்கவேண்டும். அப்போது அவனுக்குக் கையில் வேறு எதுவும் இருக்காது. கடவுளைநம்பி கடன்பெற்ற பணத்தில் விதைகளை வாங்கி விதைக்கச் செல்கின்றான். இதனையே, "அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நமது வாழ்க்கையினை இந்த வசனத்தோடு பொருத்திப்பார்ப்போம். தேவனை நம்பி நாம் பலச் செயல்களைச் செய்கின்றோம். நமது இதயமாகிய நிலத்தைப் பண்படுத்துகின்றோம்.   "எனது வாழ்க்கையின் துன்பங்கள் முடிவுறாதா" என்று ஏங்குகின்றோம். நம்மைப்பார்த்து ஆண்டவர் கூறுகின்றார், "விவசாயி, தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே மகிழ்ச்சியுடன் வருவதைப்போல நீயும் குறிப்பிட்டக் காலத்துக்குப்பின் மகிழ்ச்சியடைவாய்." என்கிறார் கர்த்தர்.  

இப்படி நமது வாழ்வில் கர்த்தர் அதிசயம்செய்து நம்மை மகிழ்ச்சியுறச் செய்யும்போது நமக்கு அது நிஜமா கனவா என்றுகூடத் தெரியாது. இதனையே இன்றைய தியான வசன சங்கீதத்தின் முதல் வசனமாக வாசிக்கின்றோம். "சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்." ( சங்கீதம் 126 : 1 ) ஆம் , நாம் நமக்கு நடந்த மாறுதல்களை நம்பமுடியாமல் கனவு காண்கிறவர்களைப்போல இருப்போம். அத்தகையப் பெரிய  அதிசயத்தை தேவன் நமது வாழ்வில் செய்வேன் என்கின்றார்.  

நமது வாழ்க்கை எப்போதும் கண்ணீரின் வாழ்க்கையாக இருக்கப்போவதில்லை. இதனை வாசிக்கும்போது விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். நமது கண்ணீர் கெம்பீர அக்களிப்பாக மாறும். அந்த விவசாயிகளே நமக்கு முன்னுதாரணம். "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்." ( சங்கீதம் 126 : 5 ) இது நிச்சயம் என்கிறார் கர்த்தர்.

ஏற்றம் - இறக்கம், பள்ளம் - மேடு, இரவு - பகல், இருள் - வெளிச்சம் போலத் துன்பங்களைத் தொடர்ந்த இன்பம் உண்டு என்கிறார் தேவனாகிய கர்த்தர்.  ஆனால் காத்திருக்கவேண்டியது அவசியம். விவசாயி விதைத்த மறுநாளில் பயிர் விளைவதில்லை. மாறாக அவன் பயிர் வளரக் காத்திருக்கின்றான், நீர் பாய்ச்சுகின்றான், உரமிடுகின்றான், களையெடுக்கின்றான் அதுபோல நாமும் நமது வாழ்க்கையில் தேவனுக்கேற்ற நமது பொறுப்புகளைச் செய்து அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து காத்துக் கொண்டிருக்கவேண்டும். 

அப்போது நமது காத்திருப்புக்குப் பலன் கிடைக்கும். கனவா நிஜமா என நாமே திகைக்கும்வண்ணம் மேலான காரியத்தை நமது வாழ்வில் தேவன் செய்வார். அப்போது நாமும், "கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்." ( சங்கீதம் 126 : 3 ) என்று சங்கீதக்காரனைப்போல மகிழ்ச்சியுடன் அறிக்கையிடலாம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        
 
                 SHALL REAP IN JOY

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,055                                Monday, December 18, 2023

"He that goeth forth and weepeth, bearing precious seed, shall doubtless come again with rejoicing, bringing his sheaves with him." (Psalms 126: 6)

The Lord blessed me to know many things about the life of the farmers because of many years of association with the village farmers. Farmers' life is closely related to the seasons. Their life is not like that of city dwellers who wake up in the morning and rush to the office. At the end of the month, farmers do not get a salary like a city dweller.

The farmers will start the agricultural related works early before October when the northeast monsoon starts in Tamil Nadu. If they don't have money in hand, they will pawn or borrow money pledging their available small gold jewellery. Their life is not full of happiness. The reason is that; they have to look at household expenses and agricultural expenses. The land should be ploughed, fertilized and prepared for agriculture. The farmer will have nothing else but faith. Believing in God, he buys seeds with the borrowed money and goes to sow them. This is what today's verse says, “He that goeth forth and weepeth, bearing precious seed".

Beloved, let us align our lives with this verse. We do many things by trusting in God. Cultivating the land that is our heart. We yearn that "the miseries of my life will never end". The Lord says to us, "As the farmer, carrying the seed with weeping and return with joy which he has reaped, you too will be happy after a certain period of time." says the Lord.

In this way, when the Lord works wonders in our lives and makes us happy, we do not even know whether it is real or a dream. We read this as the first verse of today's hymn. "When the LORD turned again the captivity of Zion, we were like them that dream." (Psalms 126: 1) Yes, we will be like dreamers who cannot believe the changes that have happened to us. God says he will do such a great miracle in our lives.

Our life is not always going to be a life of tears. Report with faith as you read this. Our tears will turn into happiness. Those farmers are our example. "They that sow in tears shall reap in joy." (Psalms 126: 5) This is certain, says the Lord.

Like ups and downs, pits and hills, night and day, darkness and light, there is pleasure that follows sufferings, says the Lord God. But the wait is worth it. The farmer does not produce the crop the day after he sows it. On the contrary, he waits for the crop to grow, waters, fertilizes, and weeds. Similarly, we should do our responsibilities towards God in our lives and obey his words.

Then our wait will be worth it. Whether it is a dream or a reality, God will do things in our lives beyond what we can imagine. Then we also say, "The LORD hath done great things for us; whereof we are glad." (Psalms 126: 3) and may happily report like the psalmist.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: