Saturday, December 30, 2023

வெளிச்சமும் இரட்சிப்புமானவர் / LIGHT AND SALVATION

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,069      💚 ஜனவரி 01, 2024 💚திங்கள்கிழமை 💚 


"கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?" ( சங்கீதம் 27 : 1 )

புதிய ஆண்டில் அடியெடுத்துவைக்கும்  அனைவரையும் கர்த்தர்தாமே கூடஇருந்து வழிநடத்துவாராக என்று வாழ்த்துவதுடன் அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன்.. !!

தாவீது ராஜா கூறுவதுபோல இந்த ஆண்டை நாம் உறுதியான நம்பிக்கையான வார்த்தைகளைக்கூறி ஆரம்பிப்போம். "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?"  

கர்த்தர்தாமே நமது வெளிச்சமாக இருந்து நமது வாழ்வை இருள் சூழாதவாறு காத்துக்கொள்வார். மட்டுமல்ல, நமக்கு மிகப்பெரிய அரணாக இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வார். 

அவரையே நாம் நம்பி இருக்கும்போது அவர் நம்மைக் கைவிடாமல் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போது நம்மைத் தனது கூடாரத்தின் மறைவில் வைத்துக் காத்துக்கொள்வார். தாவீது இதனைத் தனது  நம்பிக்கை அறிக்கையாகக் கூறியதுபோல நாமும் கூறுவோம். "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." ( சங்கீதம் 27 : 5 )

ஆம் அன்பானவர்களே, கர்த்ததைத் தேடுபவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவுபடாது என்று வேதம் கூறுகின்றது. வெளிச்சமாக, அரணாக அவர் இருக்கும்போது நாம் நம்பிக்கையுடன் தாவீது கூறியதுபோல, "என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்." ( சங்கீதம் 27 : 10 ) என்று கூற முடியும். 

தாவீது இந்த வசனங்களைத் தனது அனுபவத்திலிருந்து கூறுகின்றார். ஆரம்பம்முதல் தாவீதின் வாழ்க்கை நெருக்கப்படும் ஒரு வாழ்க்கையாகவே இருந்தது. சவுலினாலும், சொந்த மகனாலும் எதிரி ராஜாக்களாலும் அவர் நெருக்கப்பட்டார். மட்டுமல்ல, சரீர பலவீனத்தினால் பாவத்திலும் விழுந்தார். ஆனால், தேவன் அவரை அப்படியே விட்டுவிடவில்லை. அவரைத் தனது வெளிச்சத்தினால் பிரகாசிக்கச் செய்தார்; அரணாக இருந்து பாதுகாத்தார். 

நாமும் கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ விரும்புகின்றவர்களாகவும், அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். கர்த்தருடைய வசனங்கள் அனைத்துமே மனித வாழ்க்கையுடன் தொடர்புடையன. எனவே, நமது வாழ்க்கை வசனத்துக்கு ஏற்றதாக, வசனத்துக்குக் கீழ்ப்படிவதாக இருக்கவேண்டியது அவசியம். 

நமது பழைய வாழ்கையினைப் பற்றி, நமது தவறுகள், பாவங்கள் பற்றிய கவலை நமக்கு வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு நமது பாவங்களை அறிக்கையிடும்போது அவர் அனைத்தையும் மன்னித்து நம்மை ஒளிரச் செய்வார். ஏனெனில், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று கிறிஸ்து இயேசுவை அப்போஸ்தலரான யோவான் நமக்கு அடையாளம் காட்டுகின்றார். எனவே நம்பிக்கையுடன் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புவித்து புதிய ஆண்டினைத் துவங்குவோம். 

"கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?" என்று முழக்கமிடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்                                                  
             LIGHT AND SALVATION

‘AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,069                                               💚January 01, 2024 💚Monday 💚

"The LORD is my light and my salvation; whom shall I fear? the LORD is the strength of my life; of whom shall I be afraid?" (Psalms 27: 1)

I wish and pray for all those who step into the new year that the Lord himself will be with them and guide them.. !!

As King David says, let us begin this year with words of firm hope. "The Lord is my light and my salvation, whom shall I fear? The Lord is the strength of my life, whom shall I fear?"

The Lord himself will be our light and keep our lives from darkness. Not only that, but He will protect us by being our biggest fortress.

When we trust in Him, He will not abandon us and keep us in the shelter of His tent when problems and sufferings come. As David said this as his statement of faith, so will we. "For in the time of trouble he shall hide me in his pavilion: in the secret of his tabernacle shall he hide me; he shall set me up upon a rock." (Psalms 27: 5)

Yes, dear ones, the scriptures say that those who seek the Lord do not lack any benefit. As David said, "Though my father and my mother forsake me, the Lord will take me up." (Psalm 27: 10)

David speaks these verses from his own experience. From the beginning David's life was a life of oppression. He was oppressed by Saul, his own son, and enemy kings. Not only that, he also fell into sin due to bodily weakness. But God did not leave him like that but, made him shine with his light; Protected as a fortress.

We should also be those who want to live a life worthy of God and surrender ourselves to Him. All the words of God are related to human life. Therefore, it is necessary that our life should be suitable to the verse and obey the verse.

We don't want to worry about our old life, our mistakes and sins. When we cling to the Lord Jesus Christ and confess our sins, He will forgive all and enlighten us. Because He is the true light. "That was the true Light, which lighteth every man that cometh into the world." (John 1: 9) Apostle John identifies Christ Jesus to us. So, let's begin the new year by entrusting ourselves to Christ with faith.

"The Lord is my light and my salvation, whom shall I fear? The Lord is the fortress of my life, whom shall I fear?" Let's chant that loudly with hope.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: