Monday, December 25, 2023

சிமிர்னா சபை / CHURCH OF SMYRNA

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,063              டிசம்பர் 26, 2023 செவ்வாய்க்கிழமை 

"நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 10 )

இந்த உலகத்தில் நாம் பல்வேறு கிறிஸ்தவ சபைப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பதுபோல ஆவிக்குரிய வாழ்விலும் நமது நடத்தைகளுக்கேற்ப  நாம் பல்வேறு தரங்களில் இருக்கின்றோம்.  இன்றைய தியான வசனம்  சிமிர்னா சபைக்குக் கூறப்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்தச் சிமிர்னா சபைக்குரியவர்கள் என்பதை ஆவியானவர் இங்குக் கூறுகின்றார். 

இற்றைய தியானம், கிறிஸ்தவ பாரம்பரிய சபைகளிலிருந்து ஆவிக்குரிய வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு எதிராக சிலர் கூறும் அவதூறுக்கு பதில் தருகின்றது. ஆம் அன்பானவர்களே, பிறர் நம்மைக் குற்றம் சாட்டுவதைக்குறித்து கவலைப்படாமல்  நமது ஆவிக்குரிய நம்பிக்கையில் விசுவாசத்தோடு வாழவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

யாரெல்லாம் சிமிர்னா சபை மக்கள் என்பது இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தைப் பார்த்தால் புரியும். "உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 9 ) என்று கூறுகின்றார். 

அதாவது, "உனது செயல்களை அறிந்திருக்கிறேன். ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மக்கள் உன்னை விமரிசிப்பதால் உன்னை நீ ஏழை என்று  எண்ணிக்கொள்கின்றாய் ஆனால் உண்மையில் நீ செல்வந்தன். நாங்கள்தான் உண்மையான யூதர்கள், நீ அப்படியல்ல (அதாவது நாங்கள்தான் மெய்யான ஆவிக்குரிய மக்கள் நீ அப்படியல்ல) என்று உன்னைப் பழித்துப் பேசும் மக்களை நான் அறிவேன். கவலைப்படாதே, அப்படி உன்னைப் பழித்துக் கூறுபவர்கள்தான்  சாத்தானின் கூட்டத்தார்"  என்கிறார் ஆண்டவர்.

மேற்கூறிய அனுபவத்தால் துன்பப்படுகின்றவர்கள்தான் இந்தச் சிமிர்னா சபைக்குரியவர்கள்.   அதாவது அவர்கள் உண்மையான ஆவிக்குரிய மக்கள். ஆனால் பிறரால் தூஷிக்கப்படுகின்றவர்கள். எனவே, உன் துன்பங்களைக்குறித்து நீ படுகின்ற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இது பிசாசு கொஞ்சகாலம் உங்களை சோதிக்கும் சோதனைதான். பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள் (அதாவது சிலநாட்கள் உபாத்திரவப்படுவீர்கள்). ஆகிலும் நீ மரணபரியந்தம் உன் நம்பிக்கையில் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.என்கிறார் ஆண்டவர். 

அன்பானவர்களே, உங்களது  ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, உங்களைக் குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து கவலைப்படவேண்டாம். இத்தகைய ஆவிக்குரிய துன்பத்தை அனுபவிக்கின்றவர்களாக நீங்கள் இருந்தால் அதனைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு நீங்கள் கொண்ட நம்பிக்கையில் உறுதியோடு வாழவேண்டும் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது, "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 11 ) ஆம், இப்படி ஆவிக்குரிய துன்பத்தைச் சகித்து உண்மையாய் வாழும்போது இரண்டாம் மரணம் எனும் நரக அக்கினி உங்களைச் சேதப்படுத்துவதில்லை. 

"பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதாவது, இந்தத் துன்பங்கள் சில நாட்கள்தான். இதனைச் சகித்து வாழும்போது வெற்றிவாகை உங்களுக்கு உரிமையாகும். நமது ஆவிக்குரிய நம்பிக்கையில் தொடர்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

         CHURCH OF SMYRNA

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,063                       Tuesday, December 26, 2023

"Fear none of those things which thou shalt suffer: behold, the devil shall cast some of you into prison, that ye may be tried; and ye shall have tribulation ten days: be thou faithful unto death, and I will give thee a crown of life." (Revelation 2: 10)

Just as in this world we belong to different denominations of the Christian Church, we are also in different ranks according to our conduct in the spiritual life. Today's meditation verse is addressed to the congregation of Smyrna. Here the Spirit tells us who belong to this church of Smyrna.

This meditation responds to the slander some say against those who want to live a spiritual life from traditional Christian churches. Yes beloved, today's verse instructs us to live faithfully in our spiritual faith without worrying about what others accuse us of.

Who are the people of Smyrna can be understood by looking at the previous verse of today's verse. "I know thy works, and tribulation, and poverty, (but thou art rich) and I know the blasphemy of them which say they are Jews, and are not, but are the synagogue of Satan." (Revelation 2: 9)

That is, "I know your works. You think you are poor because the people who call themselves spiritual are criticizing you, but in reality you are rich. I know people who speak against you saying that we are true Jews and you are not (we are true spiritual people and you are not). Don't worry, it is Satan's people are those who accuse you," says the Lord.

Those who suffer from the above experience belong to this Smyrna church. That means they are true spiritual people. But those who are slandered by others. Therefore, do not be afraid of the sufferings you suffer. This is a test that the devil will tempt you for a while. You will be afflicted for ten days (i.e. you will be afflicted for some days). But be true to your faith even unto death, and I will give you the crown of life, says the Lord.

Beloved, do not worry about your spiritual life and your accusers. If you are experiencing such spiritual suffering, the Lord Jesus Christ says that you should endure it patiently and live firmly in your faith.

Today's verse continues, "He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; He that overcometh shall not be hurt of the second death." (Revelation 2: 11) Yes, when you endure spiritual suffering and live faithfully, the fire of hell called the second death will not damage you.

"Ten days thou shalt be afflicted. But thou shalt be faithful unto death, and I will give thee a crown of life." Says the Lord Jesus Christ. I mean, these sufferings are only for a few days. As long as you live with it, victory is your right. Let us continue in our spiritual faith.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: