இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, December 02, 2023

கிறிஸ்துவைப்போல / TO BE LIKE CHRIST

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,041               டிசம்பர் 04, 2023 திங்கள்கிழமை                                       

"சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?" ( மத்தேயு 10 : 25 )

எந்தச் சூழ்நிலையிலும்  நாம் நம்மைக்குறித்து பிறர் என்ன எண்ணுகின்றார்கள், பேசுகின்றார்கள் என்பதைக் கவனிக்காமல் நமது இலக்கை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் மூலம் இயேசு கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகின்றார். 

நமது இலக்கும் முன்மாதிரியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதானே தவிர கிறிஸ்தவ சபைகளல்ல. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சபைப் பிரிவுகள் உலகினில் இருந்தாலும் மெய்யான சத்தியம் ஒன்றுதான். அதுவே இயேசு கிறிஸ்து போதித்ததும் அவரது சீடர்கள் எழுதிவைத்துள்ளவைகளும். இன்று இந்தப் போதனைகளையும் ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் சிலச்சில மாற்றங்கள்செய்து போதித்துத் தாங்களே கிறிஸ்து உருவாக்கிப் போதித்த மெய்யான போதனைகளின்படி நடப்பவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.  

மட்டுமல்ல, இவர்கள் தங்கள் போதிக்கும் சத்தியங்களுக்கு மாற்றாக கூறுபவர்களை "அந்திக் கிறிஸ்துவின்  போதனை செய்பவர்கள்"  என்றும், "வஞ்சிக்கிற அசுத்த ஆவிபிடித்தவர்கள்" என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  அன்பானவர்களே, இந்த உலகினில் ஒரு காரியத்தில் பிரச்னை இருக்கின்றது என்றால் நாம் சட்டப் புத்தகத்தை ஆய்வுசெய்து உண்மை என்ன, எது நியாயம் என்று வரையறுக்கின்றோம். அதுபோலவே, நாம் நமது போதனைகளுக்கு பிரச்னை வரும்போது வேதாகமத்தைத்தான் ஆதாரமாகக் கொள்ள முடியம். 

வேதாகம அடிப்படையிலான மெய்யான போதனைகளைச்  செய்பவர்களை  அந்திகிறிஸ்து போதனை செய்பவர்கள் என்று கூறும்போது அவர்கள் கவலைப்படக்கூடாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் அவரையே பல யூதர்களும் யூத குருக்களும் பிசாசுகளின் தலைவனாகிய  பெயல்செபூல் மூலம் பிசாசுகளைத் துரத்துகின்றவன் என்றுதான் கூறினார்கள்.

எனவே இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?" ஆம், அன்பானவர்களே, நமது எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அப்படிச் சொன்னவர்கள் வேலைக்காரராகிய  நம்மையும் அப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை. எனவே, "அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை." ( மத்தேயு 10 : 26 ) என்று இன்றைய வசனத்தைத் தொடர்ந்து அவர் கூறுகின்றார். 

அதாவது சத்தியம் என்ன என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் ஒருநாள் வெளியரங்கமாக்கப்படும். அப்போது  யார் அந்திக்கிறிஸ்து என்றும் யார் பெயல்செபூல் என்பதும் வெளியரங்கமாக்கப்படும். 

நாம் சீடத்துவ வாழ்க்கை வாழவும் அவருக்குப் பணி செய்யவும்  கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே கிறிஸ்து கூறுவதுபோல சீஷர்களாகிய  நாம்  நமது போதகரைப் போலவும்  அவருக்கு வேலைசெய்யும்  வேலைக்காரர்களாகிய நாம் நமது  எஜமானைப்போலவும் இருப்பது போதும். அதற்கு நாம் அவரையும் அவரது போதனைகளையும் தெளிவாக அறிந்திருப்பது அவசியம். எனவே,  அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு வேதாகமத்தைத் திறந்த மனதுடன் படிப்போம்; ஆவியானவரின் உதவியுடன் விளக்கங்களைப் பெறுவோம். இறுதிநாளில் தேவனுக்குமுன் நாம் தைரியமுடையவர்களாய் நிற்க அதுவே நம்மைத் தகுதியாக்கும்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்        

            TO BE LIKE CHRIST

‘AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,041                                     Monday, December 04, 2023

"It is enough for the disciple that he be as his master, and the servant as his lord. If they have called the master of the house Beelzebub, how much more shall they call them of his household?" (Matthew 10: 25)

Through today's meditation verse, Jesus Christ advises us that in any situation we should travel towards our goal without paying attention to what others think and say about us.

Our goal and role model is the Lord Jesus Christ and not the Christian churches. Although there are thousands of Christian denominations in the world, the truth is one. That is what Jesus Christ taught and what his disciples wrote down. Today, every Christian church teaches these teachings with some modifications and claims that they are following the true teachings created and taught by Christ.

Not only that, they accuse others teaching truths as "teachings of the Antichrist" and "deceiving unclean spirits". Beloved, when there is a problem with something in this world, we examine the law book and define what is truth and what is justice. Likewise, when we have a problem with our teachings, we can refer to the Scriptures.

Jesus Christ says that those who do true teachings based on the Scriptures should not be worried when they say that they are those who teach the Antichrist gospel. Because many Jews and Jewish priests at that time said that Jesus was one who was demon possessed Beelzebub, the leader of devils.

So, Jesus Christ says, "If the master of the house is called Beelzebub, is it not more certain that he also calls the house?" Yes, beloved, it is no wonder that those who said so to our Master, Jesus Christ, should say the same to us as servants. Therefore, "Fear them not therefore: for there is nothing covered, that shall not be revealed; and hid, that shall not be known." (Matthew 10: 26) He says following today's verse.

That is, what the truth will be revealed one day by the Lord Jesus Christ. Then it will be revealed who is the Antichrist and who is Beelzebub. 

We are called by Christ to live a life of discipleship and serve Him. So as Christ says, it is enough for us as disciples to be like our Master and as his servants to be like our master. For that we need to know Him and His teachings clearly. Therefore, let us read the Bible with an open mind with the intention of knowing Him; We receive explanations with the help of the Spirit. That will qualify us to stand boldly before God on the last day.

God’s Message :- ✍️ Bro. M. Geo Prakash

No comments: