இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 27, 2023

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் / RESIST THE DEVIL

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,065              டிசம்பர் 28, 2023 வியாழக்கிழமை 


"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )

இந்த உலகத்தில் பிசாசுகளைப் பற்றிய பயம் மனிதர்களுக்கு ஆதிகாலமுதல் இருந்து வருகின்றது. பலரும் பிசாசு கருப்பாக அருவெறுப்பானத் தோற்றத்தில் இருப்பான் என்று எண்ணிக்கொள்வதுடன் இரவில்தான் அவன் வருவான் என்றும் எண்ணிக்கொள்கின்றனர்.   அதுபோல பிசாசுக்கள் நம்மைப் பயமுறுத்துபவை என்றும் மனிதர்கள் எண்ணுகின்றனர். இவை இரண்டுமே வேத அடிப்படையில்லாதவை.

பிசாசு பூரண அழகுள்ளவன் என்று வேதம் கூறுகின்றது.  தேவனோடு பரலோகத்தில் இருந்தவைதான் பிசாசுகள். "நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது......." ( எசேக்கியேல் 28 : 12, 13 ) என்று வாசிக்கின்றோம். 

தங்களது கீழ்படியாமையால் நரகத்துக்குத் தள்ளப்பட்டவை அவை.  மேலும் நம்மைப் பயமுறுத்துவது அவைகளின் நோக்கமல்ல, மாறாக அவை இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மனிதர்களது ஆத்துமாவை பாவத்துக்குநேராக கொண்டுசெல்பவை. எனவே அவை நமது ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்க நம்மோடு போராடுகின்றன. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்று எழுதுகின்றார்.

இந்தப் பிசாசுகளை எதிர்த்துநிற்க சிலர் செய்வதுபோல தாயத்துகளையும் மணிக்கட்டில் பல்வேறு மந்திரித்தக் கயிறுகளையும் கட்டுவது கிறிஸ்தவ போதனையல்ல. இன்றைய வசனம் கூறுவதுபோல, தேவனுக்குப் பயந்த கீழ்ப்படியும் குணம் நமக்கு வேண்டும். எனவேதான் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு எதிரியை நாம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டுமானால் நம்மிடம் அதற்கான ஆயுதங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவன் நம்மைக் கண்டு பயந்து ஓடுவான். அந்த ஆயுதங்கள் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல், "சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6 : 14 - 17 ) என்று கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, நம்மைப் பயமுறுத்துவதோ, இருளில் நம்மைத் துரட்டுவதோ பிசாசு எனும் சாத்தானின் நோக்கமல்ல; மாறாக நமது ஆத்துமாவை அழிப்பதே அவனது நோக்கம். எனவே, தேவனுக்குக் கீழ்படிதலுள்ள வாழ்க்கை வாழ்ந்து, அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆயுதங்களைத் தரித்துக்கொள்வதே நாம் செய்யவேண்டியது. அப்படியிருந்து நாம்  பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                

               RESIST THE DEVIL

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,065                        Thursday, December 28, 2023

"Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you." (James 4: 7)

The fear of devils in this world has been with humans since the beginning of time. Many believe that the devil is black and hideous in appearance and that he comes only at night. Similarly, humans also think that devils scare us. Both of these are unscriptural.

The Bible says that the devil is perfectly beautiful. Devils are those who were in heaven with God. "Thus saith the Lord GOD; Thou sealest up the sum, full of wisdom, and perfect in beauty. Thou hast been in Eden the garden of God; every precious stone was thy covering, the sardius, topaz, and the diamond, the beryl, the onyx, and the jasper, the sapphire, the emerald, and the carbuncle, and gold: the workmanship of thy tabrets and of thy pipes was prepared in thee in the day that thou wast created." ( Ezekiel 28 : 12,13 )

They were cast into hell for their disobedience. And their purpose is not to frighten us, but rather to lead men's souls to sin so that they may not receive the heavenly pleasures which they have lost. So, they fight with us to spoil our spiritual life.

This is what the apostle Paul said, "For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places." (Ephesians 6: 12)

It is not Christian teaching to tie amulets and various enchanted cords on the wrist to resist these demons, as some do. As today's verse says, we need God-fearing obedience. Therefore, obey God; Resist the devil and he will flee from you.

Also, if we are to fight an enemy, we must have the appropriate weapons. Only then will he run away in fear of us. What are those weapons, the apostle Paul said, "Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness; And your feet shod with the preparation of the gospel of peace; Above all, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked. And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God: (Ephesians 6: 14 - 17)

Yes, beloved, it is not Satan's purpose to frighten us or chase us in the dark; Instead his purpose is to destroy our souls. Therefore, what we have to do is live a life of obedience to God and put on the armor that the Apostle Paul says. So, when we resist the devil, he will flee from us.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: