'ஆதவன்' ஆகஸ்ட் 27, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,296
"அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4 : 19) / "We love him, because he first loved us." (1 John 4: 19) தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747. 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India
Monday, August 19, 2024
அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை
Saturday, August 17, 2024
தாய் குழந்தையைச் சேர்த்துக்கொள்வதுபோல
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 26, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,295
கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படாமலும் அவரை வெட்கப்படுத்தாமலும்
'ஆதவன்' ஆகஸ்ட் 25, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,294
"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லுூக்கா 9 : 26 )
என்னை மட்டாய்த் தாண்டியும்
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 24, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,293
Friday, August 16, 2024
தேவனது பார்வைக்கு மறைவானது ஏதுமில்லை
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 23, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,292
Thursday, August 15, 2024
தேவனுடைய ராஜ்யம் நமக்குள்
'ஆதவன்' ஆகஸ்ட் 22, 2024. வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,291
"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )
Wednesday, August 14, 2024
போலிகளைப் புறக்கணிப்போம்
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 21, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,290
"பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 4, 5 )
இன்றைய தியான வசனம் நாம் எப்படிப்பட்ட ஊழியர்களை நமக்கு வழிகாட்டிகளாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.
நம்மைக்குறித்து பரலோகத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நாம் வாழும்போது பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகின்றது. "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15 : 7 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?
அந்த "நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார்.
Tuesday, August 13, 2024
புத்தியீனமான தர்க்கங்களை விட்டு விலகுவோம்.
'ஆதவன்' ஆகஸ்ட் 20, 2025. செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,289
இடுக்கமான வாசல்
'ஆதவன்' ஆகஸ்ட் 19, 2025. திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,288
"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )
Sunday, August 11, 2024
Deaf and Dumb
“Thus, I was as a man that heareth not, and in whose mouth are no reproofs. For in thee, O LORD, do I hope: thou wilt hear, O Lord my God.”( Psalms 38 : 14, 15 )
This verse is taken from a psalm called a psalm of remembrance by David. If we look at why David sang this song, many people tried to take his life. Especially Saul, Saul's commanders, and David's own son were waiting to kill David like this.
But I am like a deaf and dumb person who does not care about any of these things, says David. The reason is because David believed that the Lord would answer them. Therefore, says David, I am like a man who is deaf and has no words in his mouth. That is, it can be said that this is an expression of David's faith in God.
And in the two verses preceding these verses, he says, “They also that seek after my life lay snares for me: and they that seek my hurt speak mischievous things, and imagine deceits all the day long. But I, as a deaf man, heard not; and I was as a dumb man who did not open his mouth. (Psalms 38: 12, 13)
Yes, beloved, if we remain silent when some act against us, the world may call us cowards and helpless, but as David says, if we remain deaf and dumb and wait on the Lord, the Lord will answer for us. Then the response of the Lord to the enemies will be very severe.
The Israelites were afraid of Pharaoh's forces trying to destroy the Israelites. Then Moses said to them, “Fear ye not, stand still, and see the salvation of the LORD, which he will shew to you today: for the Egyptians whom ye have seen today, ye shall see them again no more for ever. The LORD shall fight for you, and ye shall hold your peace”. (Exodus 14: 13, 14) Similarly, we read in the scriptures that Pharaoh's destruction was very severe.
The same thing happens in our lives. Yes, dear ones, this is the truth that I have experienced and known. “Dearly beloved, avenge not yourselves, but rather give place unto wrath: for it is written, Vengeance is mine; I will repay, saith the Lord.” (Romans 12: 19) the apostle Paul says.
“For we know him that hath said, Vengeance belongeth unto me, I will recompense, saith the Lord. And again, The Lord shall judge his people.” (Hebrews 10: 30) So when some people act against us, let us remain mute and deaf and wait for the Lord to answer.
Bro. M. Geo Prakash
கண்ணீர் சிந்தாதே, உன் செயல்களுக்கு பலன் உண்டு
'ஆதவன்' ஆகஸ்ட் 18, 2025. ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,287
"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்". (எரேமியா 31:16)
ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் உண்டு. ஆம், சில வேளைகளில் நாம் எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் நெருக்கடிகளும் பாடுகளும் நம்மைத் துரத்துவதுண்டு. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள், "அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." (யோபு 1:1) என்று வாசிக்கின்றோம்.
ஆனால் யோபு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார். '..ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது." ( யோபு 6 : 3, 4 ) என்று அவர் புலம்பினார். அவரது நண்பர்கள் யோபுவின் துன்பத்துக்குக் காரணம் அவர்தான்; அவரது பாவம்தான் என்று அவர்மேல் பழிசுமத்தினார்கள். ஆனால், இறுதியில் அவரது நண்பர்களைத் தேவன் கடிந்துகொண்டதை நாம் வாசிக்கின்றோம்.
ஆம், ஆவிக்குரிய வாழ்வில் வரும் சில துன்பங்கள் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதவை. ஆனால் தேவன் நமது கண்ணீரைப் பார்க்கின்றார். அதனை அவர் புறக்கணிப்பதில்லை. எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டபோது "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. எசேக்கியா தேவனுக்காக வைராக்கியம்கொண்டு பல நல்ல செயல்களைச் செய்தவர்தான்.
இதுபோலவே இன்று நாம் ஆவிக்குரிய வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் துன்பங்கள் வருமானால் நம்மைப்பார்த்தும் தேவன் சொல்கின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு".
நேர்மையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் தேவன் புறக்கணிப்பதில்லை. பிளவை நோய் முற்றியதால் ஏசாயா தேவ அறிவிப்புப் பெற்று எசேக்கியா ராஜாவிடம் "நீர் உயிர் பிழைக்கமாட்டீர், எனவே உமது வீட்டின் காரியங்களை ஒழுங்குபடுத்தும்" என்று கூறினார். ஆனால், "ஏசாயா பெரிய தீர்க்கதரிசியல்லவா? அவரே கூறிவிட்டாரே இனி நான் பிழைக்கமாட்டேன்" என்று எசேக்கியா எண்ணவில்லை; மனம் தளரவில்லை.
நமது தேவனிடம் இரக்கங்கள் உண்டு எனபதனை உணர்ந்திருந்த எசேக்கியா தேவனை நோக்கிக் கண்ணீருடன் விண்ணப்பித்தார். எசேக்கியாவின் நற்செயல்களை அறிந்திருந்த தேவன், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்." ( 2 இராஜாக்கள் 20 : 5, 6 ) என்று வாக்களித்து அதனை நிறைவேற்றினார்.
ஆம் அன்பானவர்களே, "அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
Friday, August 09, 2024
புதிய ஏற்பாட்டுக்கால கண்டுபிடிப்புகள் சில
கப்பர்நாகூமில் உள்ள ஜெப ஆலயம்
இயேசு பேசி அற்புதம் செய்த முதல் நூற்றாண்டு யூத ஜெப ஆலயத்தின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. ஜெப ஆலயம் அவருடைய பொது ஊழியத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் சர் சார்லஸ் வாரன் என்பவரால் இந்த தளம் முதலில் கண்டறியப்பட்டது. மேலும் ஆராய்ச்சி அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டில், ஒரு கட்டுமானக் குழு ஜெருசலேமுக்கு அருகே நீர் பூங்காவைக் கட்டிக்கொண்டிருந்தது, அவர்களின் புல்டோசர் தோண்டியபோது முதல் நூற்றாண்டு கல்லறையின் கூரை கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, ஆராய்ந்துபார்த்ததில் "காய்பாவின் மகன் ஜோசப்" என்று பொறிக்கப்பட்ட ஒரு அலங்கரிக்கப்பட்ட எலும்பு உட்பட பலவிதமான எலும்புக்கூடுகள் (முதல் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட எலும்புப் பெட்டிகள்) கண்டுபிடிக்கப்பட்டன. 60 வயது முதியவரின் எலும்புகள் உட்பட ஆறு பேரின் எலும்புகள் உள்ளே இருந்தன, அவை கயபாவின் எச்சங்கள் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள்.
நற்செய்திகளின்படி இயேசுவின் விசாரணைக்கு தலைமை தாங்கிய தலைமைக் குரு கயபா ஆவார் (மத் 26:3, 57; லூக்கா 3:2; யோவான் 11:49). பழங்கால வரலாற்றாசிரியரான ஜோசஃபஸ், கயபாஸின் முழுப் பெயர் ஜோசப் கயபாஸ் என்றும், கி.பி. 18-36 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார் என்றும் பதிவு செய்கிறார். ஏரோதின் பல மகன்கள் ஏரோது (அதாவது. ஹெரோட் ஆன்டிபாஸ், ஹெரோட் ஆர்கெலாஸ், முதலியன) என்று அழைக்கப்பட்டதைப் போலவே, அவர் தனது குடும்பப்பெயர் / குடும்பப் பெயரான காய்பாஸ் மூலம் பரவலாக அறியப்பட்டதாகத் தெரிகிறது.
இது இயேசுவின் விசாரணையில் முக்கிய பங்கு வகித்த பிரதான ஆசாரியரின் எலும்புக்கூடு என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அவரது எலும்புக்கூடு மற்றும் உடல் எச்சங்கள் புதிய ஏற்பாட்டில் ஒரு முக்கிய நபரின் இருப்பை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகளை வழங்குகின்றன. கயபாவின் எலும்புக்கூடு தற்போது ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிலோவாம் குளம்
சிலோம் பழைய ஏற்பாட்டுக் காலத்தைச் காலத்தைச் சார்ந்தது (ஏசா 8:6 & 22:9-11), மேலும் குருடனாகப் பிறந்த ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதைப் பற்றிய நன்கு அறியப்பட்ட செய்தியின் இருப்பிடமும் இதுவாகும். (யோவான் 9:1-12) இது 2004 இல் ஜெருசலேமில் இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எலி ஷுக்ரோனால் கண்டுபிடிக்கப்பட்டது, தொழிலாளர்கள் கழிவுநீர் பாதையை நிறுவும் போது இதனைக் கண்டுபிடித்தனர்.
Thursday, August 08, 2024
கிதியோன் பெயர் பொறித்த மட்பாண்டஓடு
கிர்பெட் எர்-ராயின் இந்த ஆஸ்ட்ராகான் எழுத்து ஜெருபால் (Jerubbaal) என்ற பெயரைக் கொண்டுள்ளது, விவிலிய நியாயாதிபதி கிதியோனுக்கு வழங்கப்பட்ட அதே புனைப்பெயர். (புகைப்படம்: Dafna Gazit / இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம்)
பழங்கால நகரமான லாச்சிஷுக்கு அருகில் அமைந்துள்ள கிர்பத் எர்-ராயில் யெருபாகால் (ஜெருபால்) என்ற பெயரைக் கொண்ட ஒரு ஆஸ்ட்ராகான் எழுத்து கொண்ட மட்பாண்ட ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெருபாகால் என்பது பாகாலின் பலிபீடத்தை அழித்தபின் கிதியோனுக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் (நியாயாதிபதிகள் 6:32). ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே தொல்பொருள் அடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கரிம மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் இவை வேதாகமம் கூறும் காலத்துக்கு ஒத்தவையாக உள்ளன. யெருபாகால் என்ற பெயர் வேதாகமத்தில் கிதியோனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொல்பொருள் சூழலில் முதல் கண்டுபிடிப்பு ஆகும். பெயரின் தனித்தன்மை மற்றும் அரிதான தன்மை காரணமாக, சில அறிஞர்கள் இது கிதியோனைக் குறிப்பதாக நம்புகின்றனர். மற்றவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது, இது வேதாகமம் விவரிக்கும் காலத்தில் யெருபாகால் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.