இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, April 17, 2024

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,166      💚 ஏப்ரல் 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக் குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுதுநான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என்  ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும்  நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி  பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல்  என்று மக்கள் நினைத்திருந்தனர்ஆனால் அவர்கள் தேவனுடையவாக்குக்குச் செவிகொடுக்கவில்லைஅதாவது அவர்கள்  கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன்  விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும்  விட்டுவிட்டனர்பலியிடுவது சம்பந்தமான கட்டளையை  நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும்  பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்ல,பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான்  தொடர்கின்றதுபல ஊழியர்கள் வறட்டுத்தனமான  போதனைகளை  போதிக்கின்றனரேத் தவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர்தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம்அன்புஇரக்கம்நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான்  வலியுறுத்தப்படுகின்றது.

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு  கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று  கற்றுக்கொள்ள அல்லமாறாக பரிசுத்த ஆவியானவர்  உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள்உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்கற்றுத்தருவார் என்று பொருள்

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து  இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்;  ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிறரை அன்பு செய்வதற்கும் கொடுப்பீர்கள் என்று பொருள். ஆவிக்குரிய சபைகள் என்று  தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளில் காணிகைக் கொடுக்காதவர்களை சபிப்பதும் சாபங்களைக் கூறும் வசனங்களை அவர்களுக்கு எச்சரிக்கையாகக் கூறுவதும் உண்டு. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை உணர்ந்திருந்தால் இப்படிச் செய்யமாட்டார்கள். 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள்  தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது  தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பதுஇதற்கு  முரணான வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ  ஜனமாக இருக்கத் தடையானவைகள்.

ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே  விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம்தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: