விதைப்பதையே அறுப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,162      💚 ஏப்ரல் 15, 2024 💚 திங்கள்கிழமை 💚

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாதுஇது நாம் எல்லோரும் அறிந்ததே. நாம் விதைப்பதையே அறுப்போம். இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இயற்கையிலிருந்து இந்தச் சத்தியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும்ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன்ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார்அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு  அவலமான நிலையில் இருந்தார்ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும்தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை  அப்புறப்படுத்தினர் அதிகாரிகள்அப்போது ஒரு முரட்டு அதிகாரிகோபத்துடன்,"பிச்சைக்கார பயலேஇங்கிருந்து ஓடுடா.." என்றும்,கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த  முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார்சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானதுஇதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித  முறைமையில் சொல்லிக்கொண்டனர்

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்துநியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு

மேலும் மாம்சத்துக்கென்று விதைத்தல் என்பது நமது  உலகக் காரியங்களுக்காகவே நமது உழைப்பைச் செலவழித்துக் கொண்டிருப்பதைக்  குறிக்கும்.  அதாவது, எந்தவித ஆவிக்குரிய சிந்தனையோ செயல்பாடோ இல்லாமல் முழுக்க முழுக்க நமது இவ்வுலக வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிக்கும்.  இப்படி வாழும் மனிதர்கள் நித்திய ஜீவனை இழந்து தங்கள் ஆத்துமாவையும்  இழப்பார்கள்.  

இதற்கு மாறாக, "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா நித்திய வாழ்வு ஒன்று இருக்கின்றது.  வேதாகமம் அதற்கு வழிகாட்டுகின்றது. இயேசு கிறிஸ்துவும், "நானே வழி" என்று கூறி தன்னைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். எனவே அவரது கட்டளைகளின்படி நடப்பதே ஆவிக்கென்று விதைத்தல்.  எனவே அன்பானவர்களேநாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும்  முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும்  உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும்குறுகிய உலக ஆசைகளுக்காகப்  பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  இந்தச் சிந்தனை இல்லாததால் இன்று துன்மார்க்கமான பதவி, பணவெறிகொண்டு கொலைகளும் பல்வேறு அவலட்சணமான காரியங்களும், அற்பத்தனமான அரசியல் செயல்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அதாவது இவர்கள் கடவுளைத் தங்களைப்போன்ற ஒரு அற்பத்தனமானவராக எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர். 

எனவே அன்பானவர்களே, நாம் எச்சரிக்கையாகச் செயல்படுவோம்.  மாம்சத்திற்கென்று விதைத்து அழிவை அடைந்திடாமல் ஆவிக்கென்று விதைத்து ஆவியினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள முயலுவோம். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...