Monday, January 01, 2024

உன் வாலிபப் பிராயத்திலே ../ IN THY YOUTH ...

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,070     💚 ஜனவரி 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚 

"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.," ( பிரசங்கி 12 : 1 )

பொதுவாக மனிதர்கள் தங்களது வயது முதிர்ந்த காலதில்தான் பக்தி காரியங்களிலும் தேவனைத் தேடுவதிலும் அதிக ஆர்வத்தைக் காட்டுவார்கள்.  உடலிலே பலமிருக்கும்போது குடும்பத்துக்காக உழைத்து சொத்து சுகங்கள் சேர்த்துவைத்துவிட்டு பலம் குறைந்த இறுதி நாட்களில் தேவனைத் தேடுவார்கள்.   ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, 'நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" என்று. 

பெரும்பாலானவர்கள் ஏதாவது துன்பம் நெருக்கடி வாழ்வில் ஏற்படும்போது மட்டும் தேவனைத் தேடுவார்கள். எப்படியாவது பிரச்சனையிலிருந்து விடுதலையாகவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். இன்றைய வசனம் கூறுகின்றது, அப்படி தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் வருவதற்கு முன்னும் உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை

"இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை." ( பிரசங்கி 12 : 7 )

பலரும் "வாழ்க்கை வாழ்வதற்கே"  என்று கூறிக்கொண்டு தான்தோன்றித்தனமாக வாழ்கின்றனர். இளமைக்காலம் இன்பத்தை அனுபவிக்க வேண்டிய காலம் என்று எண்ணிக்கொள்கின்றனர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பரிசுத்தவானாகிய சாது சுந்தர்சிங் அவர்கள்  இளமையை இன்பமாக பாவ வாழ்க்கையில் செலவழித்துவிட்டு இறுதிக்காலத்தில் தேவனைத் தேடுவதைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்:-

"நன்றாகப்  பழுத்த மாம்பழத்தை  நன்கு ரசித்து ருசித்துத் தின்றுவிட்டு இறுதியில் மாங்கொட்டையில் ஒட்டியிருக்கும்  சிறிதளவு சதையினை இன்னொருவருக்கு நாம் கொடுக்க முன்வருவோமா?" ஆனால் மனிதர்கள் பலரும் இப்படியே செழுமையான தங்கள் இளமைப் பருவத்தைக்  குடும்பத்துக்காக செலவழித்து, வாழ்க்கையை நன்கு அனுபவித்துவிட்டு கொட்டையோடு ஒட்டிய சதையைக் கொடுப்பதுபோலத் தங்களது இறுதிநாட்களை தேவனுக்குக் கொடுக்க முயல்கின்றனர்."

அன்பானவர்களே, இன்றைய வசனத்தைக் கூறியுள்ள பிரசங்கி இறுதியில் 14 வது வசனத்தில் நமக்கு எச்சரிக்கைபோலக்  கூறுகின்றார், "ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்." ( பிரசங்கி 12 : 14 )

ஆம், "வாலிபத்தை தேவனற்ற வாழ்க்கையாக வாழ்ந்து பாவத்தில் உழன்று வாழ்பவர்களே, அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்." என்கின்றார் அவர். 

இதனை வாசிக்கும் பலருக்கும் இளமை காலம் முடிந்து நடுத்தர வயது வந்திருக்கலாம். ஆனால் இப்போதே நாம் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து புதிய வாழ முயலுவோம். முதுமைவரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. மட்டுமல்ல, நமது பிள்ளைகளையும் தேவனை அறியும் அறிவில் வளரச்  செய்வோம். இன்றைய சமுதாயச்  சூழலில், சமூக ஊடகங்கள் பாவத்துக்கு நேராக மனிதர்களை இழுக்கும் நிலைமையிலிருந்து தப்பிக்க தேவனை அறியும் அறிவில் குழந்தைகளை வளர்ப்பது நமது  முக்கியமான கடமையாகும்.  வாலிப வயதிலேயே குழந்தைகளை தேவனை அறிய வைப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்                                                       
                  IN THY YOUTH 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,070                      💚 January 02, 2024 💚 Tuesday 💚

"Remember now thy Creator in the days of thy youth, while the evil days come not, nor the years draw nigh, when thou shalt say, I have no pleasure in them;' (Ecclesiastes 12: 1)

Usually, people show more interest in devotional activities and seeking God only in their old age. When there is strength in the body, they will work for the family and accumulate wealth and pleasures, and in the last days of weakness, they will seek God. But today's verse says, 'Remember your Creator in your youth.'

Most of the people seek God only when some suffering or crisis occurs in their life. Their goal is to somehow get rid of the problem. Today's verse says, remember your Creator in your youth before such evil days come, and before the years come when you say, 'I have no pleasure in them.

"Then shall the dust return to the earth as it was: and the spirit shall return unto God who gave it." (Ecclesiastes 12: 7)

Many people claim that "life is for living" and live a life as they want. Youthful age is considered to be the time to enjoy pleasure. Sadhu Sundersingh, a saint who lived in the last century and passed away, said the following about those who spend their youthful days in pleasures, in sinful life and seek God in their last days:-

"Would we give a well-ripened mango after eating it up to the end and give it to someone else with the little bit of flesh that is stuck to the mango at the end?" But many men try to give their last days to God, having spent their rich youth in family, enjoying life well, and giving the flesh attached to the nut to God."

Beloved, the preacher who spoke today's verse warns us at the end in verse 14, "For God shall bring every work into judgment, with every secret thing, whether it be good, or whether it be evil." (Ecclesiastes 12: 14)

Yes, "God will bring into judgment every private matter, whether good or evil, who live a godless youth and labor in sin."

Most of the people reading this may have passed their youth and reached middle age. But now we surrender ourselves to God and try to live anew. We don't need to wait for old age. Not only that, let's make our children grow in the knowledge of knowing God. In today's social environment, it is our important duty to raise children in the knowledge of God to escape from the situation where social media pulls people towards sin. Let's make children know God at an early age.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

  

No comments: