Saturday, August 22, 2026

🦋 Meditation verse - ஓசியா 14 : 9 / Hosea 14:9

 தியானம் - 2024

"ஆதவன்" ஆகஸ்ட் 24  திங்கள் 2026


"இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்." ( ஓசியா 14 : 9 )

தேவன் தனது பிள்ளைகளுக்கு வைத்துள்ள வழிகள் மேலானவைகள், ஆனால் இடுக்கமானவைகள். இந்த இடுக்கமான வழியிலேயேதான் நமது ஆவிக்குரிய பயணம் அமையவேண்டும். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்."  ( மத்தேயு 7 : 13-14 ) என்று கூறினார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? என்று கேள்வியெழுப்புகின்றது.  

நீதிவாழ்க்கை வாழ்பவர்களுக்கு கர்த்தரின் நீதிவழிகள் கடினமாகத் தெரியாது. ஆனால் துன்மார்க்கர்களுக்கு அப்படியல்ல, அந்த நீதியின் வழிகள் அவர்களுக்கு இடறுதலுக்குரிய வழியாகவே இருக்கும். அவர்களுக்கு நாம் நேர்வழியைப் போதித்தாலும் அதனை உணர்ந்துகொள்ளமாட்டார்கள். எனவேதான் அவர்களை இன்றைய தியான வசனம் பாதகர்கள் என்று கூறுகின்றது.  அவர்கள் எந்த நீதி வழியையும் அறியாமல் படுபாதக செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள். 

இத்தகைய துன்மார்க்க பாதகர்களைக் கட்டுப்படுத்தவே பலவித சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு எத்தனை பெரிய இரக்கம் காண்பித்தாலும் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஆம், "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

ஆனால், கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள் என்று இன்றைய தியான வசனம்கூறுகின்றபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ள நீதிமான்களாகிய நாம்  அவரது வழிகளில் நடக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆவியானவர் நம்மை அந்த வழியில் நடத்துகின்றார். எனவேதான் "ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்." (உபாகமம் 8:6) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 
 
ஆம் அன்பானவர்களே, இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவர்களாகவும் இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவர்களாகவும் நாம் வாழவேண்டியது அவசியம்.  கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் வேரூன்றி வளரவேண்டியது அவசியம். ஆவியானவர் நமக்கு அவற்றைத் தெளிவுபடுத்தி நம்மை அந்த வழியில் நடத்தவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் தேவ ஞானத்தில் வளர்ந்து பாதக செயல்களுக்கு விலகிடமுடியும். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2024

“AATHAVAN” – August 24, Monday, 2026

“Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them? for the ways of the LORD are right, and the just shall walk in them: but the transgressors shall fall therein.” Hosea 14:9 (KJV)

The ways that God has ordained for His children are higher and better, yet they are narrow and demanding. It is along this narrow way that our spiritual journey must be lived. Our Lord Jesus Christ Himself said:

“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” — Matthew 7:13–14 (KJV)

This is precisely what today’s meditation verse asks: “Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them?”

For those who live a righteous life, the righteous ways of the Lord will not appear difficult or burdensome. But it is not so with the wicked. The ways of righteousness become a stumbling block to them. Even when the right path is taught to them, they fail to understand or accept it. That is why today’s meditation verse refers to them as transgressors. Without knowing or following the ways of righteousness, they do not hesitate to commit even the most grievous acts of wickedness.

It is to restrain such wicked and transgressive people that various laws have been enacted. Yet, however much mercy and kindness are shown to them, they often refuse to change their ways. Indeed, the Scripture says:

“Let favour be shewed to the wicked, yet will he not learn righteousness: in the land of uprightness will he deal unjustly, and will not behold the majesty of the LORD.” — Isaiah 26:10 (KJV)

But, as today’s meditation verse declares, “the ways of the LORD are right, and the just shall walk in them.” We, who have been redeemed by the precious blood of Christ and made righteous through Him, are called to walk in His ways. The Holy Spirit leads us along this path. Therefore, the Word of God instructs us:

“Thou shalt keep therefore the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.” — Deuteronomy 8:6 (KJV)

Yes, dear beloved, it is essential that we live as people who are wise enough to understand these things and prudent enough to discern them. The Word of the Lord must take root in us and grow within our hearts. It is equally essential that the Holy Spirit enlighten our understanding and lead us in the right way.

Only then can we grow in the wisdom of God and turn away from sinful and transgressive ways. Let us surrender ourselves completely to the guidance of the Holy Spirit and pray that He may lead us continually in the ways of the Lord.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 14 : 9 / Hosea 14:9

  தியானம் - 2024 " ஆதவன் " ஆகஸ்ட் 24   திங்கள் 2026 "இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன...