தியானம் - 2005
"ஆதவன்"ஆகஸ்ட் 05 புதன் 2026
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )
இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் வசனமாகும். அப்போஸ்தலரான பவுல் இந்த வசனத்தில் பிதாவாகிய தேவனை வெறுமனே தேவன் என்று சொல்லாமல், "என் தேவன்" என்று கூறுகின்றார். சிறு பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் பேசும்போது சிலவேளைகளில், "என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று கூறுவார்களே அதுபோல என்று இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆம், பவுல் தேவனைத் தனக்குத் தனிப்பட்ட உரிமையுள்ளவராக என்தேவன் என்று கூறுகின்றார்.
மட்டுமல்ல, தேவனிடம் எல்லா செல்வங்களும் நிறைந்துள்ளன. நமது எந்தத் தேவையையும் பூர்த்திசெய்ய அவரால் முடியும். இதனையே அவர், தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் என்று கூறுகின்றார். அதாவது, எனது தேவன் அளப்பரிய செல்வத்துக்குச் சொந்தக்காரர். அவர் எனது தேவைகளை மட்டுமல்ல, உங்கள் அனைவரது அனைத்துக் குறைகளையும் நிறைவாக்குவார் என்று கூறுகின்றார்.
ஆனால், பிதாவாகிய தேவன் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தானாகக் கொடுக்காமல் தனது குமாரன் மூலமே கொடுக்கின்றார். இது பிதாவாகிய தேவன் தனது குமாரனிடம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடு. இந்த உண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனையே, கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று கூறுகின்றார் பவுல். அதாவது பிதாவாகிய தேவனிடமுள்ள அளப்பரிய செல்வத்தை நாம் கிறிஸ்து இயேசு மூலமே பெறமுடியும்.
இன்று யெகோவா சாட்சிகள் போன்றவர்களும் இதர சில சபைகளும் பிதாவாகிய தேவனுக்கு முன்னுரிமைகொடுத்து அவரிடமே நாம் வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், நாம் பிதாவிடம் நேரடியாக அல்லாமல் அவரது குமாரன் மூலம் வேண்டுதல் செய்யவேண்டும். குமாரனாகிய அவரையே பிதாவானவர் தனது பரலோக செல்வத்துக்கு உரிமையாளராகத் தகுதிப்படுத்தியிருக்கிறார்.
இதனையே, "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9 -11 ) என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்துக்கு வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். பூமியின் கீழுள்ள ஆவிகள்கூட முடங்கும். எனவே அவர் கொடுக்க முயல்வதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கிறவன் பிதாவுக்கும் அன்பாயிருக்கிறான் என்று வேதம் கூறுகின்றது. கிறிஸ்து இயேசுவின் கட்டளைகளை நாம் கைக்கொள்ளும்போது நாம் அவருக்கு அன்பாயிருக்கிறோம் என்று பொருள். "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்." ( யோவான் 14 : 21 ) என்றார் இயேசு கிறிஸ்து.
நமது தேவன் தனக்குள் அடங்கியிருக்கும் ஒப்பற்ற மகிமைச் செல்வத்தை கிறிஸ்துமூலமே உலகிற்கு அளிக்கின்றார் எனும் உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். எனவே நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கும்போது நமது குறைகளை அவர் நிறைவாக்குகின்றார். அந்நிய உபதேசங்களால் அலைக்கழிக்கப்படாமல் கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வோம். அப்போது பிதாவாகிய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Meditation - 2005
"AATHAVAN" | August
05 | Wednesday 2026
"But my God
shall supply all your need according to his riches in glory by Christ
Jesus." — Philippians 4:19
Today’s meditation verse
brings us hope and joy. In this verse, the Apostle Paul does not simply refer
to God the Father as "God," but calls Him "my God." We can
compare this to how young children sometimes talk to their friends, saying, "My
dad told me he’s going to buy me a bicycle." Yes, Paul speaks of God
as someone who belongs to him personally when he says, "my God."
Furthermore, God possesses
all riches. He is capable of fulfilling any need we have. This is what Paul
means when he says, "according to his riches... shall supply all your
need." In other words, "My God is the owner of immeasurable
riches. He will supply not only my needs but all the lacks and needs of every
one of you."
However, God the Father does
not bestow His riches directly by Himself, but through His Son. This is an
expression of the special love that God the Father has for His Son. We must
understand this truth. That is why Paul says, "in glory by Christ
Jesus." This means we can receive the boundless riches of God the
Father only through Jesus Christ.
Today, groups like Jehovah's
Witnesses and certain other churches claim that we should prioritize God the
Father and pray only to Him. But the truth is that we must not approach the
Father directly, but through His Son. The Father has designated the Son as the
rightful possessor of His heavenly treasures.
This is clearly written:
"Wherefore God also
hath highly exalted him, and given him a name which is above every name: That
at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in
earth, and things under the earth; And that every tongue should confess that
Jesus Christ is Lord, to the glory of God the Father."— Philippians
2:9–11
At the name of Christ, every
knee shall bow—of those in heaven, on earth, and under the earth. Even the
spirits beneath the earth must bow. Therefore, no one can stop what He intends
to give.
Furthermore, the Scriptures
declare that whoever loves Christ is also loved by the Father. When we keep the
commandments of Jesus Christ, it means we love Him. Jesus Christ said:
"He that hath my
commandments, and keepeth them, he it is that loveth me: and he that loveth me
shall be loved of my Father, and I will love him, and will manifest myself to
him." — John 14:21
We must realize the truth
that our God bestows His incomparable, glorious riches upon the world only
through Christ. Therefore, when we love Christ, He fulfils all our lacks and
needs. Let us live by keeping the commandments of Christ without being tossed
about by foreign doctrines.
Then, God shall supply all
your need according to his riches in glory by Christ Jesus.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment