தியானம் - 2011
தன்னைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று தேவன் பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், அவர் தன்னை அறியவேண்டும் எனும் உணர்வுள்ளவன் பூமியில் உண்டுமா என்று பார்த்துகொண்டேயிருக்கின்றார்.
ஆனால் பெரும்பாலான மக்கள் அவரைத் தேடுவதற்குப்பதில் அவரிடமிருந்து என்ன கிடைக்கும் என்றே தேடிக்கொண்டிருக்கிறார்கள். தேவனை அறியவேண்டும் எனும் மெய்யான உணர்வோடு தேடுகிற மனிதர்களுக்கு மட்டுமே அவர் வெளிப்படுவார். "தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்" ( மத்தேயு 7 : 7 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? அவர் காணாமல்போன பொருட்களைக் கண்டுபிடிக்க நம்மைத் தேடச் சொல்லவில்லை. மாறாக, இதுவரை அறியாமலிருக்கும் அவரைத் தேடச் சொல்கின்றார்.
கடவுள் என்று ஒருவர் உண்டா? அப்படியானால் உண்மையான கடவுள் யார்? என்பதை அறிய எல்லா மத நூல்களையையும் படித்து இறுதியில் தேவனை அறிந்துகொண்டதாகப் பலர் கூறுகின்றனர். இந்து குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் அவர்கள் தனது சாட்சியைக் கூறும்போது, தேவனை அறிய பல மத நூல்களையும் தான் கற்றதாகவும் இறுதியில் வேதாகமத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டுவரும்போது, "உன்னுடனே பேசுகிற நானே அவர் " (யோவான் - 4 : 26) எனும் வசனத்தைப் படித்தபோது தேவனால் உணர்த்தப்பட்டுத் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாகக் கூறுவார். ஆம், இதுபோல உண்மையாய்த் தேவனைத் தேடும் எவருக்கும் அவர் வெளிப்படுவார்.
அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாக, மகளாகப் பிறந்துவிட்டு கிறிஸ்தவ முறைமைகளை பின்பற்றுவதால் தேவனை அறிந்தவர்களல்ல. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்காணிக்கும் தேவன் இப்படித் தன்னைத் தேடுகின்ற மனிதர்களுக்கு இரட்சிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றார். "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." ( சங்கீதம் 70 : 4 )
தங்களது மத வைராக்கியத்தை விட்டு மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு தன்னைத் தேடுபவர்கள் மேல் தேவன் பிரியம் வைக்கின்றார். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." ( சங்கீதம் 149 : 4 )
சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்கள் பிறப்பால் ஒரு சீக்கியர். சிறு வயதிலேயே தாயை இழந்த அவர் தகப்பனின் அரவணைப்பில் வளர்ந்தார். இளைஞனானபோது துன்பங்கள் தொடர்ந்திட அவைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்குமுன், பொதுவான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்.
எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல், "நான் தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொள்ளப் போகின்றேன்.... உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், அவர் என்னை மன்னிக்கட்டும்...தற்கொலை செய்வது பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன....எனவே உண்மையான தேவன் ஒருவர் உண்டு என்றால் அவர் என்னை மன்னிக்கட்டும்" என்று பொதுவாக ஜெபித்துவிட்டு எழுந்தபோது கிறிஸ்து அவருக்கு வெளிப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவர் பிறகு கிறிஸ்துவின் அபோஸ்தர்களது அனுபவித்த அனுபவத்துடன் வல்லமையான ஊழியரானார்.
ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 ) எனும் வசனத்தின்படி தேவனை அறியவேண்டுமெனும் எண்ணத்துடன் முழு மனதுடன் தேடினால் தேவனைக் கண்டு கொள்ளலாம். மட்டுமல்ல, நொறுங்குண்ட இருதயம் தேவனைக் கண்டுகொள்ளும். "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." (சங்கீதம் 34:18)
பரலோகத்திலிருந்து கண்ணோக்கும் தேவன் நம்மைக் காணட்டும்.நமது உள்ளத்தின் ஆர்வம், உடைந்த உள்ளம் இவையே நாம் தேவனைக் கண்டுகொள்ள உதவும்.
Meditation - 2011
"AATHAVAN" –
August 11, Tuesday 2026
"God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God." (Psalm 53:2)
Today’s meditation verse tells us that God is looking down from heaven to see if there is anyone with understanding who seeks Him. Yes, He is continually watching to see if there is anyone on earth with the earnest desire to know Him.
However, instead of seeking Him, most people are seeking what they can get from Him. God will reveal Himself only to those who seek Him with a genuine desire to know Him. Did not Jesus Christ say, "Seek, and ye shall find" (Matthew 7:7)? He did not tell us to seek lost objects; rather, He asks us to seek Him, whom we have not yet known.
Many people testify that in their quest to know whether God exists and who the true God is, they read all religious scriptures and ultimately came to know God. My friend, Brother Sornakumar, who was born in a Hindu family, shares his testimony of how he studied scriptures of various religions to know God. As he continued reading the Bible, when he came across the verse, "I that speak unto thee am he" (John 4:26), he was convicted and touched by God, and surrendered himself to Christ. Yes, in the same way, God will reveal Himself to anyone who truly seeks Him.
Dearly beloved, just because we are born as sons or daughters to Christian parents and follow Christian rituals, it does not mean we know God. We must understand this.
God, who watches over humanity from heaven, grants the experience of salvation to such people who seek Him. "Let all those that seek thee rejoice and be glad in thee: and let such as love thy salvation say continually, Let God be magnified." (Psalm 70:4)
God delights in those who set aside religious zeal and seek Him with the desire to know the true God. "For the LORD taketh pleasure in his people: he will beautify the meek with salvation." (Psalm 149:4)
Sadhu Sundar Singh, who lived at the beginning of the last century, was a Sikh by birth. Having lost his mother at an early age, he grew up under his father's care. As a young man, continuous afflictions overwhelmed him, and unable to endure them, he decided to commit suicide. He resolved to wake up early in the morning and lie on the railway tracks near his home. Before doing so, he offered a general prayer.
Without naming any specific deity, he prayed generally: "I am going to end my life by committing suicide... If there truly is a God, let Him forgive me... All religions say that suicide is a sin... Therefore, if there is a true God, let Him forgive me." When he arose after praying, Christ revealed Himself to him. The man who attempted suicide later became a powerful servant of God with an experience like that of the Apostles of Christ.
Yes, according to the verse, "And ye shall seek me, and find me, when ye shall search for me with all your heart" (Jeremiah 29:13), if you search with a whole heart and a desire to know God, you will find Him. Moreover, a broken heart will find God: "The LORD is nigh unto them that are of a broken heart; and saveth such as be of a contrite spirit." (Psalm 34:18)
May the God who looks down from heaven behold us. The longing of our inner heart and a broken spirit—these are what help us find God.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment