தியானம் - 2031
"ஆதவன்" ஆகஸ்ட் 31 திங்கள் 2026
"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." ( யாக்கோபு 1 : 27 )
தேவன் விரும்பும் உண்மையான மேலான பக்தி என்ன என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது.
மனிதர்களது எண்ணங்களும் தேவனது எண்ணங்களும் வேறுவேறானவை. அவரது வழிகள் மனித வழிகளல்ல. "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" ( ஏசாயா 55 : 8 ) என்று நாம் வாசிக்கவில்லையா?
தேவபக்தி என்று மக்கள் எண்ணிக்கொள்வதிலும் இப்படியே தேவனுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆம் அன்பானவர்களே, பொதுவாக மனிதர்கள் ஒரு சில காரியங்களைச் செய்து தாங்கள் தேவன் விரும்பும் பக்திச் செயல்களை நிறைவேற்றிவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆலய ஆராதனைகளில் தவறாமல் கலந்துகொள்வது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது, வேதாகமத்தை வாசிப்பது, காணிக்கைக் கொடுப்பது போன்ற செயல்களை மனிதர்கள் பக்திச் செயல்களாக எண்ணிக்கொள்கின்றனர்.
ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு வித்தியாசமான காரியங்களைப் பக்திசெயல்பாடுகளாகக் குறிப்பிடுகின்றார். முதலில் உலகத்தால் கறைபடாதபடிக்கு ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கின்றார் அவர். அதாவது, முதலில் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்துகொண்டு தர்ம காரியங்களையும் செய்யவேண்டும். அதனையே, "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது" என்று கூறுகின்றார். இப்படிச் செய்வதே மேலான பகுதியாகும் என்று அவர் கூறுகின்றார்.
அதாவது நமது ஆவிக்குரிய வாழ்க்கை வெறும் ஆலய வழிபாடுகளுடன் நின்றுவிடக்கூடாது, மாறாக நமது வழிபாடு நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். மட்டுமல்ல, ஏழைகள், விதவைகள், அனாதைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யவேண்டும். இப்படிச் செய்வதே, பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
இந்தக்காரியத்தில் இன்று நாம் இரண்டுவித மக்களை உலகத்தில் பார்க்கின்றோம். ஒரு பிரிவினர் ஏழைகளுக்கு உதவி செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு நலஉதவிகளை ஏழைகளுக்குச் செய்கின்றனர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் பல்வேறு பாவகாரியங்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இன்னொருபிரிவினர் பக்திச் சடங்குகளில் மூழ்கி வாழ்ந்துகொண்டு இரக்கமற்றவர்களாக எளியவர்களைப் புறக்கணித்து வாழ்கின்றனர். இவை இரண்டுமே தவறு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
முதலில் நல்லது செய்யுமுன்பே நாம் நல்லவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதாவது, முதலில் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, அப்படிக் காத்துக்கொண்டு திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கவேண்டும். இப்படிக் செய்வதே மேலான பக்தியாகும்.
இதனையே ஏசாயா தீர்க்கத்தரிசி மூலமும் தேவன் கூறுகின்றார்:- "உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்." ( ஏசாயா 1 : 16, 17 )
தேவன் விரும்பும் உண்மையான மேலான பக்தி என்ன என்பதனை உணர்ந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை மாற்றிக்கொள்வோம்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Meditation - 2031
"AATHAVAN" | August
31 Monday 2026
"Pure religion
and undefiled before God and the Father is this, To visit the fatherless and
widows in their affliction, and to keep himself unspotted from the world."
— James 1:27
Today’s meditation verse
explains to us what true and noble godliness (pure religion) desired by God
really is.
The thoughts of humans and
the thoughts of God are entirely different. His ways are not human ways. Have
we not read, "For my thoughts are not your thoughts, neither are your
ways my ways, saith the LORD" (Isaiah 55:8)?
Similarly, there is a vast
difference between God and man regarding what people consider to be godliness.
Yes, beloved, generally humans think that by doing a few things, they have
fulfilled the acts of devotion that God desires. People consider attending
church services without fail, taking part in prayer meetings, reading the Holy
Bible, and giving offerings as acts of godliness.
However, in today’s
meditation verse, the Apostle James points out very different things as acts of
true godliness. First, he states that one must keep oneself unspotted from the
world. That means, primarily in our personal lives, it is essential for us to
be holy. While living such a holy life, we must also perform acts of charity.
That is what he describes as "visiting the fatherless and widows in their
affliction." He affirms that doing this is the higher form of devotion.
In other words, our
spiritual life should not stop merely with church worship; rather, our worship
must reflect holiness in our personal lives. Not only that, we must help the
oppressed—such as the poor, widows, and orphans. Doing so is pure and undefiled
religion before God the Father.
In this matter, we see two
types of people in the world today. One group performs various welfare acts for
the poor under the banner of helping them, yet in their personal lives, they
indulge in various sinful deeds. The other group lives immersed in religious
rituals while remaining heartless and neglecting the needy. Today’s meditation
verse shows us that both of these attitudes are wrong.
First, before doing good, it
is essential that we are good. That is, one must first keep oneself
unspotted from the world. Furthermore, while keeping oneself pure, one must
visit the fatherless and widows in their affliction. Doing this is the noble
and true godliness.
God speaks this same
principle through the Prophet Isaiah as well:
"Wash you, make you
clean; put away the evil of your doings from before mine eyes; cease to do
evil; Learn to do well; seek judgment, relieve the oppressed, judge the
fatherless, plead for the widow." — Isaiah 1:16, 17
Let us understand what true,
noble godliness desired by God really is, and let us transform our spiritual
lives accordingly.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment