Thursday, August 06, 2026

🦋 Meditation verse - வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 / Revelation 15:3

 தியானம் - 2008

"ஆதவன்"ஆகஸ்ட் 08 சனி 2026


"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )

நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.  அவருடைய அனைத்துச் செயல்களும் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக அவரையே சார்ந்து வாழ்வோமானால் எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். அன்றாடம் தேவன் நமது வாழ்வில் செய்யும் அதிசயமான காரியங்கள் அவர்மேல் நமக்கு உறுதியான விசுவாசத்தை ஏற்படுத்தும். நாம் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டல்ல, மாறாக தேவனது அதிசய செயல்களை நாமே அனுபவித்து அவரை விசுவாசிக்கமுடியும். 

நாம் தேவனை விசுவாசித்து அவரிடம் ஜெபிக்கும்போது பலவேளைகளில் தேவன் நமது ஜெபத்துக்குப் பதில்தந்து  செயல்பட நாம் அவருக்கு நேரம் கொடுப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும். அப்போது  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

ஆவிக்குரிய வாழ்வு வாழும் அனைவருக்குமே இத்தகைய அனுபவம் இருக்கும். இதுபோல, இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார் என்று அவர் நம்புவார். மட்டுமல்ல, இன்று எந்த   அதிசய முறையில் தேவன் பதிலளிக்கப்போகின்றார்  என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் அவர் பெற்றிருந்தார். 

ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர். அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தார். ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் விசாரித்தபோது அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  இந்த வழியாகப் பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து வாசலின் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். என்ன செய்வது என்று தடுமாறியபோது உங்களது ஆசிரமத்தின்  பெயர் பலகையினைப்  பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

ஆம் அன்பானவர்களே, அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை இதுபோன்ற அதிசயங்கள் அவரது வாழ்வில் நடந்தன.  

ஆம், கர்த்தரது செயல்கள் ஆச்சரியமுமானவைகள்; அவருடைய  வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். நீதி வாழ்க்கை வாழ்ந்து அவர்மேல் விசுவாசத்தோடு வாழ்வோமானால் இதுபோன்ற அதிசயங்கள் நமது வாழ்விலும் நடக்கும்.   

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2008

"AATHAVAN" | August 08 | Saturday 2026

"Great and marvellous are thy works, Lord God Almighty; just and true are thy ways, thou King of saints." (Revelation 15:3, KJV)

Our God is the Lord God Almighty. All His works are great and marvellous. If we believe in Him and live depending firmly upon Him, we can experience His presence and miraculous guidance every single day. The wonderful things God does daily in our lives build a firm faith in Him. We do not have to believe in Him based merely on what others say; rather, we can believe by personally experiencing His miraculous works ourselves.

When we believe in God and pray to Him, many times we do not give Him enough time to answer and work. Yes, dear friends, when a problem or a need arises, we look to God and pray. But after asking, we must wait on Him to answer that prayer. When we wait, the way He answers our prayer will be truly marvellous. We need that personal experience of tasting His goodness.

Everyone living a spiritual life will have such experiences. Similarly, we can learn many things about a man of God named George Müller (1805–1898), who lived in England, and about his great faith. He did not merely pray in faith; after praying, he wholeheartedly believed that God would answer the prayer no matter what. Not only that, he possessed the grace and the eager anticipation to wait and see in what miraculous way God was going to answer him that day.

He supported thousands of orphan children through pure prayers of faith, receiving help directly from God. Here is just one of the many incidents that took place in his life:

Once, he had no money to buy milk for the morning breakfast of the children in his orphanage. In England, milk and bread are generally the staple food. Müller woke up early in the morning and laid his need before God. Tears streamed from his eyes as he prayed: "Lord, according to Thy Word, I am supporting these children. Today, I do not even have money to buy milk for them. Loving Lord, take charge of this need Yourself. I surrender these children at Thy feet; protect them from hunger."

At that moment, there was a knock at his prayer room door. Müller got up and opened it. A man was standing there. Upon inquiring, the man said, "Sir, I drive a milk van. Every day I carry milk along this route to the neighbouring town. Today, the axle of my van broke right in front of your orphanage gate. To repair the vehicle, I must reduce its weight by unloading all the milk. As I wondered what to do, I saw the signboards of your orphanage. Since it was nearby, I came to you. Please bring large vessels and take all the milk." Müller immediately knelt down and gave thanks to God.

Yes, dear friends, on that day, the children at his orphanage received far more milk than usual. In this manner, God miraculously provided for many of the orphanage’s needs time and again. We cannot brush this off as a mere coincidence or a stroke of luck—because these miracles happened in his life not just once, but repeatedly.

Yes, the works of the Lord are marvellous, and His ways are just and true. If we live righteous lives and walk in faith toward Him, such miracles will happen in our lives as well.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 / Revelation 15:3

  தியானம் - 2008 " ஆதவன் " ஆகஸ்ட் 08  சனி 2026 "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியம...