வேதாகமத் தியானம் - எண்:- 1,419
'ஆதவன்' 💚டிசம்பர் 27, 2024. 💚வெள்ளிக்கிழமை
"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." ( யோவான் 14: 1)
இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுகின்றார். ஒருவேளை நாம் இன்று பல்வேறுவித எண்ணங்களால் கலங்கிக்கொண்டிருக்கலாம். நமது பிரச்சனைகள், நோய்கள், கடன் பாரங்கள் நம்மை அழுத்தி என்ன செய்வோம் என ஏங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு நம்மைப் பார்த்துக் கூறுகின்றார், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக."
தொடர்ந்து இந்த வசனத்தில் அவர் கூறுகின்றார், "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." என்று. அதாவது பிதாவிலும் என்னிலும் உங்கள் உள்ளமானது விசுவாசம் கொள்ளட்டும் என்கின்றார். நமது உள்ளமானது கலக்கமடைய முக்கிய காரணம் பயம். நாம் பிரச்சனைகளையும் சூழ்நிலைகளையும் கண்டு பயந்து பயத்துக்குள்ளாகி கலங்கி நிற்கின்றோம்.
அப்போஸ்தலரான யோவான் எழுதுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." (1 யோவான் 4 : 18) என்று. ஆம், சூழ்நிலைகளைப் பார்த்து பயந்து கொண்டிருக்கின்றோமென்றால் இன்னும் நாம் தேவன்மேலுள்ள அன்பில் பூரணப்படவில்லையென்று அர்த்தம். அவர்மேல் பூரண அன்பு கொள்ளும்போது எப்படியும் தேவன் என்னை இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பார் எனும் உறுதி நமக்குள் ஏற்படுவதால் கலக்கங்கள் நம்மைவிட்டு அகன்றுவிடும்.
தனது பெண்பிள்ளையின் திருமணச் செலவுக்காக ஒருதாய் ஒருவரிடம் பணஉதவி கேட்டிருப்பாரானால் அந்த நபர் தருகிறேன் என்று கூறியிருந்தாலும் அவர் கூறியபடி அந்தப் பணம் கைக்கு வரும்வரை அந்தத் தாயின் மனமானது கலங்கிக்கொண்டிருக்கும். காரணம் பயம். ஒருவேளை அந்த நபர் தான் கூறியபடி பணத்தைத் தரவில்லையானால் என்னச்செய்வோம் என்று எண்ணிக் கலங்கிநிற்கின்றாள் அவள். ஆனால் பணத்தை வாக்களித்து கொண்டுவருவேன் என்றவர் வெளிநாட்டில் பணிபுரியம் அந்தப் பெண்ணின் கணவனோ தகப்பனோ என்றால் அவள் வீணாகக் கலங்கமாட்டாள். காரணம் தகப்பன் எப்படியும் கைவிடமாட்டார் என்று நம்புவதுதான் காரணம்.
இதுபோலவே நாம் தேவனை அன்பான தகப்பனாக எண்ணி அவரோடு தொடர்பில் இருப்போமானால் எந்தச் சூழ்நிலையும் நம்மைக் கலக்கமடையச் செய்யாது. காரணம், அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். எனவே அன்பானவர்களே, தேவனோடுள்ள நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்தும்போது நமது விசுவாசம் உறுதிப்படும். தேவ ஐக்கியத்தில் நாம் வளரவேண்டியதன் அவசியம் இதுதான். தேவ ஐக்கியம் நமது பயத்தைத் தள்ளி விசுவாசத்தை வலுப்படுத்தும். நமது உள்ளம் கலங்காதிருக்க நமது சொந்த தகப்பனாக தாயாக தேவனோடு உறவுகொண்டு வாழும் ஆவிக்குரிய நிலையை அடைந்திட முயற்சிப்போம். அதற்கு நமது ஜெபங்களில் உலகப் பொருள் ஆசீர்வாதங்களை முன்னிலைப்படுத்தாமல் அவரை அடைந்துகொள்வதையே முன்னிலைப்படுத்துவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,419
AATHAVAN 💚
December 27, 2024 💚
Friday
"Let not your heart be
troubled: ye believe in God believe also in me." (John 14:1)
In today’s meditation verse,
our Lord Jesus Christ gives us comforting words. Perhaps we are troubled by
various thoughts today. Our problems, illnesses, and burdens of debt may press
us, leaving us wondering what to do. Yet, the Lord Jesus tells us, "Let
not your heart be troubled."
He further says, "Ye
believe in God, believe also in me." He invites us to place our trust in
the Father and in Him. The primary reason for our troubled hearts is fear. We
are often distressed and afraid when we see our problems and circumstances.
The apostle John writes, "There
is no fear in love; but perfect love casteth out fear: because fear hath
torment. He that feareth is not made perfect in love." (1 John 4:18) This
means that if we are gripped by fear, we have not yet been perfected in our
love for God. When we have perfect love for Him, we gain the assurance that God
will surely deliver us from difficult situations, and our anxieties fade away.
Consider the example of a
mother who asks for financial help to meet the expenses of her daughter's
wedding. Even if the person promises to give her the money, her heart remains
troubled until she receives it. Fear grips her, wondering, "What if he doesn’t
fulfill his promise?" But if the promise comes from someone close to her,
like her husband or father working abroad, she won’t be troubled. Why? She
trusts that her father will never abandon her.
Similarly, when we relate to
God as a loving Father and maintain a close relationship with Him, no situation
can disturb us. "There is no fear in love; but perfect love casteth out
fear." Therefore, dear ones, when we strengthen our unity with God, our
faith becomes firm. Growing in unity with God is essential because it drives
away fear and strengthens our faith.
To keep our hearts from being
troubled, we must strive to live in a spiritual state where God becomes our
Father and Mother. Let us focus on building a relationship with Him,
prioritizing His presence in our prayers over worldly blessings.
Devotional Message
by: Brother M. Geo Prakash
No comments:
Post a Comment