DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, May 24, 2026

🦋 Meditation verse - மீகா 6 : 10, 11 / Micah 6:10–11

 💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1937

📆2026 மே 28, வியாழன் 


"துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?" ( மீகா 6 : 10, 11 )

மனம்திரும்புதலை தேவன் அதிகமாக விரும்புகின்றார். மனம்திரும்பும் மக்களிடம் அதிக அன்பு காட்டுகின்றார். பாவ இருளில் இருக்கும் மனிதர்களை விடுவித்து நித்திய ஒளியிடம் வழிநடத்தவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். 

ஆனால், ஒருவர் கர்த்தரிடம் மனம்திரும்பி வருகின்றாரென்றால் அவர் பூரணமாக மனம்திரும்பி வரவேண்டியது அவசியம். தங்களை பிரச்சனைகளும், நோய்களும் துரத்தி வாட்டும்போது அவற்றிலிருந்து தப்பிக்க மனம்திருப்பிச் சில நல்ல செயல்களைச்  செய்துவிட்டு அதன்பின்னர் பழைய வாழ்க்கையினைத் தொடர்வதையும்  தேவன் முற்றிலும் விரும்புவதில்லை. 

நமது பழைய பாவ வாழ்க்கை முற்றிலும் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டியது அவசியம்.  இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, உன் வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பணமும், அருவருக்கப்படத்தக்க அளவு குறைந்த கள்ள மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவா? கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இன்னும் உன் வீட்டில் இருக்கும்போது, உன்னைத் சுத்தமுள்ளவர்களென்று நான் எண்ணுவேனோ? என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

கள்ளத் தராசு, எடைகுறைந்த படிக்கற்கள், போன்றவை  ஒருவரது துன்மார்க்கத்தனத்துக்கு உருவகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவர் துன்மார்க்கத்துக்குக் காரணமான குணத்தையோ,  தொடர்ந்து துன்மார்க்கத்தைச் செயல்படுத்த ஏதுவான கருவிகளையோ  முற்றிலும் தன்னைவிட்டு அகற்றாமல் வைத்துக்கொண்டு ஆலயத்தில்வந்து ஜெபிப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வேன்? உங்கள் ஜெபத்தை சுத்தமுள்ள ஜெபம் என்று நான் எப்படி எண்ணுவேன் என்கின்றார் பரிசுத்தமான கர்த்தர். 

இதனையே ஏசாயா நூலிலும் நாம் வாசிக்கின்றோம்:- "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" ( ஏசாயா 1 : 15,16 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சகேயு எனும் மனிதன் சந்தித்தபோது அவன் முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டான். ஆயக்காரனாகிய அவனது வீட்டில் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள் அதிகம் இருந்தன. இயேசு கிறிஸ்து அவன் வாழ்வில் இடைப்பட்டபின்னர் அவன் அவை அனைத்தையும் அகற்றிவிடத் தீர்மானித்தான். எனவே, "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்". ( லுூக்கா 19 : 8 ) 

இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி அவன் துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களையும் தன்னிடமிருந்த கள்ளத்தராசு கள்ளப் படிக்கற்கள் போன்ற குணத்தையும் விட்டுவிடத்  தயாரானபோது, "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது தேவைக்காக மட்டும் நாம் தேவனிடம் நடிக்கமுடியாது. முற்றிலும் நம்மிடமுள்ள துர்க்குணங்கள் முற்றிலுமாக நம்மைவிட்டு அகற்றப்படவேண்டியது அவசியம். குறைந்த மரக்காலும் கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் நம்மிடம் இன்னும் இருக்கும்போது, நம்மை அவர் சுத்தமுள்ளவர்களென்று எப்படி எண்ணமுடியும் ? சகேயுவைபோல அவை அனைத்தையும் விட்டுவிடும்போதுதான் மெய்யானத் தேவ  ஆசீர்வாதத்தினை நாம் பெற்று மகிழ முடியும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

💥 “AATHAVAN” 🌳 Meditation – No. 1937

📆 Thursday, May 28, 2026

“Is there yet a man in the wicked house, along with treasures of wickedness and a short measure that is cursed? Can I justify wicked scales and a bag of deceptive weights?” — Book of Micah 6:10–11 (NASB)

God greatly desires repentance. He shows abundant love toward those who truly turn back to Him. The Lord Jesus Christ came into this world to deliver mankind from the darkness of sin and to lead them into eternal light.

However, when a person comes to the Lord in repentance, that repentance must be genuine and complete. God does not desire people who turn to Him only temporarily in order to escape from problems, suffering, or sickness, perform a few good deeds, and then return again to their old sinful lifestyle.

Our old sinful nature must be completely removed from us. Today’s meditation verse clearly says: “Are there not still treasures gained by wickedness in your house? Are there not dishonest measures, deceitful scales, and false weights still remaining with you? How then can I consider you pure?” says the Lord God.

Dishonest scales and false weights symbolize a person’s wickedness and corruption. How can the Holy Lord accept the prayers of someone who continues to hold on to sinful habits or keeps the instruments that enable sinful practices, while outwardly coming to the temple and praying? How can such prayers be considered pure before God?

We read the same truth in the book of Book of Isaiah:

“So, when you spread out your hands in prayer, I will hide My eyes from you; Yes, even though you multiply prayers, I will not listen. Your hands are covered with blood. Wash yourselves, make yourselves clean; Remove the evil of your deeds from My sight. Stop doing evil.” — Isaiah 1:15–16 (NASB)

When a man named Zaccheus encountered our Lord Jesus Christ, his life was completely transformed. As a tax collector, his house was filled with treasures gained through unrighteous means, just as today’s meditation verse describes. But after Jesus entered his life, Zaccheus decided to remove all those things.

Therefore,

“Zaccheus stopped and said to the Lord, ‘Behold, Lord, half of my possessions I am giving to the poor, and if I have defrauded anyone of anything, I will give back four times as much.’” — Gospel of Luke 19:8 (NASB)

When he became willing to forsake both the treasures gained through wickedness and the deceitful nature within him,

“Jesus said to him, ‘Today salvation has come to this house, because he, too, is a son of Abraham.’” — Luke 19:9 (NASB)

Yes, beloved, we cannot pretend before God merely for the sake of our needs. The sinful attitudes and corrupt practices within us must be completely removed. As long as the dishonest measure, the deceitful scales, and the false weights still remain with us, how can God consider us pure?

Only when we forsake them completely, like Zaccheus, can we truly rejoice in the genuine blessings and salvation of God.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments: