💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1932
"நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை." ( உன்னதப்பாட்டு 1 : 6 )
இன்றைய தியான வசனம் இந்த உலகத்தில் மற்றவர்களால் அற்பமாக எண்ணப்பட்டு புறக்கணிக்கப்படும் ஆவிக்குரிய ஒரு பெண் (மணவாட்டி) கூறுவதாக உள்ளது.
தனது இழிவான நிலைகுறித்து அவள் கூறுகின்றாள். வெய்யிலில் வேலை செய்து என் உடல் கருப்பாக மாறிவிட்டது; அப்படி வேலை செய்ய வைத்தது வேறு யாருமல்ல, என் தாயின் பிள்ளைகள் என்கின்றாள் அவள். அதாவது அவளது உடன்பிறந்த சகோதர சகோதரிகள். தனது சொந்த வேலைகளைகூடச் செய்யவிடாமல் அவளைக் கட்டாயப்படுத்தித் தங்களுக்குத் திராட்சைத்தோட்டக் காவல்காரியாக வைத்தார்கள். வெய்யிலில் உழைத்து உழைத்து அவளது தேகம் கருத்துப்போனது. ஆனால் என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை; அதனைக் காக்க அவர்கள் என்னை விடவில்லை என்கின்றாள் அவள்.
இதுபோலவே ஆவிக்குரிய மக்கள் பலர் உலகத்தில் தங்கள் குடும்பத்தினராலும் சமூகத்தினராலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அடிமைகள்போல நடத்தப்படுகின்றனர். ஆனால் தேவன் அவர்களது உள்ளான மனதினை அறிவார். இன்றைய தியான வசனத்தில் அவள் தன்னைப் புறக்கணிக்கும் மக்களுக்குத் தனது வேதனையை வெளிப்படுத்திக் கூறுகின்றாள், "நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்".
வெளி அழகைப்பார்த்து, எனது ஏழ்மை நிலையைப்பார்த்து என்னை ஒதுக்காதீர்கள் என்று அவள் கூறுகின்றாள். ஆம் அன்பானவர்களே, தேவன் வெளி அழகையோ செல்வத்தின் திரட்சியையோ பார்த்து நம்மை நேசிப்பதில்லை. அவர் மனிதர்களின் இருதயத்தைப் பார்க்கின்றார். "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்".(1 சாமுவேல் 16 : 7) என்று நாம் வாசிக்கவில்லையா?
ஒடுக்கப்பட்ட இந்தப்பெண் இந்த உண்மையினை அறிந்திருந்தாள். எனவே அவள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றாள், "எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்." ( உன்னதப்பாட்டு 1 : 5 ) அதாவது உலகிற்கு நான் கருப்பாக அழகற்றவளாக இருக்கலாம், ஆனால் என் தேவனுக்குமுன் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றாள்.
மற்றவர்களை அற்பமாக எண்ணி அவர்களைப் புறக்கணிப்பது, குறிப்பாக அவர்களது பொருளாதாரக் குறைவு, உடல் அமைப்பு, நிறம் இவற்றைக்கொண்டு மற்றவர்களைப் புறக்கணிப்பதைத் தேவன் வெறுக்கின்றார். அவரே அனைத்து ஆத்துமாக்களையும் உண்டாக்கியவர். அவர் தனக்கான மக்களை அழகிப்போட்டி நடத்தியோ ஆணழகன் போட்டி நடத்தியோ தேர்வு செய்வதில்லை. மாறாக, இருதயத்தைக் கவனித்துப்பார்த்தே தேர்வுசெய்கின்றார்.
இப்படி மற்றவர்களை அற்பமாக எண்ணி அவமதிப்பவர்கள் தங்களது பாவ நிலைக்கு தேவனிடம் மன்னிப்பைக் கேட்கவேண்டியது அவசியம். அதுபோல, இன்று இத்தகைய அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகியிருப்பீர்களென்றால் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கையில் பின்மாற்றமின்றி தொடர்ந்து விசுவாசத்துடன் இந்தப்பெண் கூறுவதுபோல கூறிக்கொள்ளுங்கள் "நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்" என்று. ஆம் தேவனுக்குமுன் நெருக்கமான இத்தகைய வாழ்க்கை வாழும் நாமே அழகானவர்கள்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
💥 "AATHAVAN" 🌳
Meditation — No. 1932
📆 Saturday, May 23, 2026
"Do not stare at me
because I am swarthy, for the sun has burned me. My mother’s sons were angry
with me; they made me caretaker of the vineyards, but I have not taken care of
my own vineyard." — Song of Solomon 1:6
Today’s meditation verse
reflects the words of a spiritual woman (the bride) who is looked down upon and
rejected by others in this world.
She speaks of her humbled,
lowly state. Her skin has grown dark from working under the scorching sun. And
those who forced her to work this way were none other than her "mother’s
sons"—meaning her own siblings. They compelled her to guard their
vineyards, leaving her with no time to even attend to her own responsibilities.
Labouring endlessly under the sun, her complexion darkened. She laments, "but
I have not taken care of my own vineyard," because they simply did not
allow her the opportunity to do so.
In the same way, many
spiritual people in this world are oppressed by their own families and society.
They are treated like slaves. But God knows their innermost heart. In today's
verse, she pours out her grief to the people who reject her, saying, "Do
not stare at me because I am swarthy [dark]."
She is pleading, "Do
not cast me aside based on my outward appearance or my poverty." Yes,
dearly beloved, God does not love us based on outward beauty or the abundance
of wealth. He looks at the human heart. Do we not read:
"...for God sees not as
man sees, for man looks at the outward appearance, but the Lord looks at the
heart." — 1 Samuel 16:7
This oppressed woman knew
this truth well. Therefore, she declares with joy:
"I am black but lovely,
O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of
Solomon." — Song of Solomon 1:5
In other words, she
confidently proclaims that though she may appear dark and unattractive to the
world, before her God, she is beautiful just as she is.
God detests it when people
look down on others and reject them—especially when that rejection is based on
their financial lack, physical appearance, or skin colour. He is the Creator of
all souls. He does not choose His people by holding beauty pageants or physical
fitness contests. Instead, He chooses them by examining their hearts.
Those who look down upon and
insult others in this manner must ask God for forgiveness for their sinful
state. Likewise, if you are experiencing such insults and rejection today, do
not fall back in your walk with God. Continue forward in faith and declare
confidently, just as this woman did: "I may be dark, but I am
lovely." Yes, we who live a close, intimate life before God are the
ones who are truly beautiful.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment