DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, May 02, 2026

🦋 Meditation verse - ஏசாயா 29 : 13 / Isaiah 29:13

 💥"ஆதவன்🌳தியானம் - எண் 1913

📆2026 மே 04, திங்கள்    


"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ( ஏசாயா 29 : 13 )

இன்று ஆலயங்களிலும், கிறிஸ்தவ கூடுகைகளிலும், கன்வென்க்ஷன்களிலும்  கூட்டத்துக்கு குறைவில்லை. எங்கும் பல ஆயிரம் மக்கள் கூடுகின்றனர். இதனால் இன்று  நாட்டில் எழுப்புதல் வந்த்துவிட்டது என்று சில ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கூட்டமும் ஜெபங்களும் உண்மையில் மக்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிதான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

அன்பானவர்களே, இன்று ஆலயங்களில் கூடும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்மையில் தேவனுக்காக கூடுபவர்களாக இருப்பார்களானால் மிகப்பெரிய வாழ்க்கை மாற்றத்தை நாம் இவர்களிடம் காண முடியும். அது நாட்டிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களது உலகத் தேவைகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் கூடுகின்ற மக்களாகவே   இருக்கின்றனர். எனவே, ஆலய ஆராதனைக்குப்பின் இவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி மற்ற மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர். மட்டுமல்ல, பல்வேறு ஏமாற்று, பித்தலாட்டம், கையூட்டு வாங்குவது போன்ற செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். 

இது இன்று நேற்றல்ல, எசாயா தீர்க்கத்தரிசியின் காலத்திலேயே இருந்த நடைமுறைதான். அன்றும் மக்கள் தேவனுக்கென்று மாடுகளையும் ஆடுகளையும் பலியிட்டனர், காணிக்கைகள் செலுத்தினர், தேவ சந்நிதியில் தூபம் காண்பித்து  ஆராதித்தனர். ஆனால் அவர்களது வாழ்க்கையோ கேடுகெட்டதாகவே இருந்தது.

இதனையே ஏசாயா,  "மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது." ( ஏசாயா 66 : 3 ) என்று கூறுகின்றார். 

மேற்படி வசனத்தில் ஏசாயா, இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள் என்கின்றார். அதாவது அவர்கள் இப்படிப் பலி செலுத்தினாலும் தேவ வழியையல்ல, தங்களது மனதின் வழியையே தெரிந்துகொள்கின்றார்கள் என்கின்றார். மேலும்,  இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது என்கின்றார். ஆம், இத்தனை பலிகளையும் ஆராதனைகளையும் காணிக்கைகளையும் செலுத்தியும் தொடர்ந்து தங்கள் பாவ வழிகளிலேயே விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர் என்கின்றார்.

ஆம் அன்பானவர்களே, மக்கள் வாயினால் கர்த்தரிடம் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் ஆராதிக்கின்றார்களேத் தவிர அவர்கள் இருதயம் கர்த்தருக்குத் தூரமாகவே இருக்கின்றது. அவர்கள் பயபக்தியுடன் ஆலயங்களில் வந்து வழிபட்டாலும் அது தேவனை அறிந்ததனால் வந்த தேவ பயமல்ல, மாறாக மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. அதாவது சிறு குழந்தைகளாக இருக்கும்போதே பெற்றோர்கள் கடவுள் பயத்தைபற்றிச் சொல்லிக்கொடுத்ததால் பயப்பட்டு ஆராதிக்கின்றார்கள். 

இதற்கு மாறாக உண்மையாகவே தேவனை அறிந்த மனிதர்களுக்கு ஆவியானவரே தேவனைப்பற்றிய அறிவை உணர்த்துவார். அவர்கள் வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக அல்லாமல் தேவனை ஆத்துமபூர்வமாக அறிந்து ஆராதிப்பவர்களாக இருப்பார்கள். அப்படி ஆராதிப்பவர்களிடம் மட்டுமே சாட்சியுள்ள வாழ்க்கையும் இருக்கும். 

வெறுமனே வாயினால் ஆராதித்து வாழாமல் தேவனை மெய்யாக அறிந்து உணர்ந்து அன்பு செலுத்துபவர்களாக வாழும்போது நமது ஆராதனை வித்தியாச ஆராதனையாக இருக்கும். அத்தகைய ஆராதனை செய்யும்போது நமது வாழ்க்கையும் மாறுபட்ட வாழ்க்கையாக இருக்கும். தேவனை அறிந்து, அவரையே வாழ்வில் பெற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக வாழ்வோம்; அதற்காகவே அவரை ஆராதிப்போம். 

 ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

💥 "AATHAVAN" Meditation – No. 1913

📆 Monday, May 04, 2026

"Then the Lord said, 'Because this people draws near with their words and honours Me with their lip service, but they remove their hearts far from Me, and their reverence for Me consists of tradition learned by rote.'" (Isaiah 29:13)

Today, there is no shortage of crowds in churches, Christian gatherings, and conventions. Thousands of people gather everywhere. Because of this, some ministers claim that a revival has come to the country. However, it is clearly evident that these crowds and prayers have not actually brought about a significant change in the personal lives of the people.

Dearly beloved, if all the Christians gathering in churches today were truly gathering for God, we would see a massive transformation in their lives. That, in turn, would have created a great change in the nation. But the majority of people gather only for their worldly needs and blessings. Therefore, after the church service, they live just like any other person, without any change in their lives. Furthermore, they are often found engaging in various acts of deception, fraud, and bribery.

This is not a new phenomenon; it was a practice that existed even in the days of the Prophet Isaiah. Back then, people sacrificed bulls and sheep to God, offered tithes, and worshipped by burning incense in the presence of God. Yet, their lives remained corrupt.

Regarding this, Isaiah says:

"But he who kills an ox is like one who slays a man; he who sacrifices a lamb is like the one who breaks a dog’s neck; he who offers a grain offering is like one who offers swine’s blood; he who burns incense is like the one who blesses an idol. As they have chosen their own ways, and their soul delights in their abominations." (Isaiah 66:3)

In the above verse, Isaiah notes that they "have chosen their own ways." This means that even though they offer these sacrifices, they do not choose God's way, but rather the way of their own hearts. Moreover, he says their "soul delights in their abominations." Yes, despite offering all these sacrifices, rituals, and offerings, they continue to take pleasure in their sinful paths.

Indeed, dearly beloved, people draw near to the Lord with their mouths and worship with their lips, but their hearts remain far from Him. Although they come to churches and worship with an appearance of reverence, it is not a fear of God that comes from truly knowing Him; rather, it is a "tradition learned by rote" (human commandment). That is, they worship out of a fear instilled by parents who taught them about the fear of God since they were small children.

In contrast, for those who truly know God, the Holy Spirit Himself will impart the knowledge of God. They will not be mere "worship-only Christians," but will be those who know and worship God with their whole soul. A witnessed (testifying) life exists only among such worshippers.

When we live not by merely worshipping with our mouths, but by truly knowing, perceiving, and loving God, our worship will be a distinct kind of worship. When we engage in such worship, our lives will also be transformed. Let us live with the desire to know God and to possess Him in our lives; let us worship Him for that very reason.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

                 

No comments: