DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, May 17, 2026

🦋 Meditation verse - லேவியராகமம் 18 : 3, 4 / Leviticus 18:3-4

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1929

📆2026 மே 20, புதன்     


"நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்." ( லேவியராகமம் 18 : 3, 4 )

ஒருமுறை ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம், "பிரதர், தேவன் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர் என்று கூறுகின்றீர்கள் ஆனால் பழைய ஏற்பாட்டில் எகிப்தில் அந்த மக்களைக் கொன்று அழித்தது, இஸ்ரவேலரைக் கொண்டு பல போர்கள் மூலம் கானான் தேசத்து மக்களை, குறிப்பாக பெண்கள் குழந்தைகளை  இரக்கமின்றி கொல்லச்சொன்னது போன்ற செயல்களைப் பார்க்கும்போது தேவன் இரக்கமுள்ளவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேட்டார்.

நான் அவரிடம் சொன்னேன், "உங்கள் வீட்டுப் பழைய பொருட்கள் போடும் இடத்தில் நல்லபாம்பு (Cobra) ஒன்று பல நூறு குட்டிகளைப் போட்டுள்ளதை நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்?   ஐயோ, இந்தக் குட்டிகள்  பாவம், இப்போதுதான் பிறந்துள்ளன என்று அவற்றைக் கொல்லாமல் விடுவீர்களா? எல்லாவற்றையும் கொன்று அழிப்பீர்களல்லவா?  இதுபோலவே, பாவத்தைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணரான பரிசுத்த தேவன் இருக்கின்றார். அருவெறுப்பான பாலியல் பாவங்களை அவர் வெறுக்கின்றார்.  அருவெறுப்பான பாவ சந்ததி வாழக்கூடாது என்று விரும்புகின்றார்."

"நண்பரே, லேவியராகமம் 18:6-23 முதலான வசனங்களில் எகிப்து தேசத்தாரும் கானானியரும் செய்த இத்தகைய பாலியல் முறைகேடான பாவங்களைக்குறித்துத்  தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவேதான் தேவன் அந்தச் சந்ததியையே அழித்தார்." என்றேன்.  

ஆம், "இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததனாலே தேசம் தீட்டாயிற்று." ( லேவியராகமம் 18 : 26 ) எனவே, நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

தேவன் நம்மை மற்ற மக்களைப்போல நடத்தவில்லை. காரணம், நாம் தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்ட மக்கள் இனம். எனவே, "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்." ( லேவியராகமம் 20 : 26 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

இதுபற்றி அந்த நண்பரிடம்  நான் கூறியபோது அவர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டு, "பிரதர், இவையெல்லாம் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள், நீங்கள் இவற்றை இந்தக்காலத்தில் கூறக்கூடாது" என்றார். நான் அவரிடம், "இவை புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ள கட்டளைகள்தான். அப்போஸ்தலரான பவுல் கூறுவதை வாசித்துப்பாருங்கள் என்று கீழ்வரும் பகுதியைக் காண்பித்தேன்:-

"அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும்,              சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 9,10 )

ஆம் அன்பானவர்களே, பரம கானானுக்குள் நாம் நுழைந்திட பரிசுத்தமாக நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கவேண்டியது அவசியம். எனவே, நாம் எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அழிந்துபோன  கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், கர்த்தருடைய  நியாயங்களின்படி செய்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு பரிசுத்தமாக நடப்போம். நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ அவர் நம்மை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்துள்ளார்.  

எகிப்து, கானான் மக்களைப்போல அல்லாமல் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாழும் நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின்மூலம் இந்தப் பாவங்களிலிருந்து முழுமையான விடுதலை உண்டு. எனவே இத்தகைய பாவங்கள் நம்மிடம் இருக்குமானால் கிறிஸ்துவிடம் அவற்றை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                     

💥 "AATHAVAN" Meditation – No. 1929

📆 Wednesday, May 20, 2026

“You shall not do what is done in the land of Egypt where you lived, nor shall you do what is done in the land of Canaan where I am bringing you; you shall not walk in their statutes. You are to perform My judgments and keep My statutes, to live in accord with them; I am the Lord your God.” — Leviticus 18:3-4 (NASB)

Once, a Christian friend asked me, "Brother, you say that God is loving and merciful. But when we look at the Old Testament—how He killed and destroyed people in Egypt, and how He commanded the Israelites through various wars to mercilessly kill the people of Canaan, especially women and children—how can we say God is merciful?"

I replied to him, "If you found out that a cobra had given birth to hundreds of offspring in the place where you keep old, discarded things in your house, what would you do? Would you leave them alone, thinking, 'Oh, poor things, these babies were just born'? Won’t you destroy and eliminate them all? Similarly, there is a Holy God whose eyes are too pure to look at evil. He detests abominable sexual sins. He wills that a corrupt generation of sin should not continue to exist."

"My friend," I continued, "verses like Leviticus 18:6-23 clearly describe the abominable sexual perversions committed by the people of Egypt and Canaan. That is precisely why God destroyed that generation."

Yes, the Scripture says:

"...for the men of the land who have been before you have done all these abominations, and the land has become defiled." — Leviticus 18:27 (NASB) (Note: Verse 26 in Tamil numbering)

Therefore, the Lord God commands us not to act according to the practices of the land of Egypt where we once lived, nor according to the practices of the land of Canaan where He is leading us, nor to walk in their customs, but to practice His judgments and keep His statutes.

God does not treat us like other people. The reason is that we are a people set apart for God. Therefore, the Lord God says:

"Thus, you are to be holy to Me, for I the Lord am holy; and I have set you apart from the peoples to be Mine." — Leviticus 20:26 (NASB)

When I shared this with that friend, he laughed scoffingly and said, "Brother, these are all Old Testament commandments. You shouldn't be preaching these things in this day and age."

I told him, "These commandments are repeated in the New Testament as well. Read what the Apostle Paul says," and I showed him the following passage:

"Or do you not know that the unrighteous will not inherit the kingdom of God? Do not be deceived; neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminate, nor homosexuals, nor thieves, nor the covetous, nor drunkards, nor reviles, nor swindlers, will inherit the kingdom of God." — 1 Corinthians 6:9-10 (NASB)

Yes, dearly beloved, to enter the Heavenly Canaan, it is absolutely essential that we preserve both our bodies and our hearts in holiness. Therefore, let us not do according to the deeds of the Egyptians, nor according to the deeds of the perished Canaanites. Let us not walk according to their customs, but let us practice the judgments of the Lord, keep His commandments, and walk in holiness. He has set us apart from other peoples so that we may live as children of God.

Unlike the people of Egypt and Canaan, we who live in the New Testament era have complete deliverance from these sins through the blood of the Lord Jesus Christ. Therefore, if any such sins are found in us, let us confess them to Christ and seek His forgiveness.

✍️ Bro. M. Geo Prakash

No comments: