DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, May 18, 2026

🦋 Meditation verse - மத்தேயு 6 : 6 / Matthew 6:6

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1930

📆2026 மே 21, வியாழன்      


"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 )

இன்றைய தியானத்தில் ஜெபத்தைக்குறித்தச் சில முக்கியமான  சிந்தனைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தருகின்றார். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஆலய வழிபாடுகள், ஆராதனைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து தனி ஜெபத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர்.  ஆலய வழிபாடுகளும் ஆராதனைகளும் தேவை என்றாலும் தனிமையின் அந்தரங்க ஜெபமே நம்மைத் தேவனோடு ஐக்கியப்படுத்தும்; நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை வலுப்படுத்தும்; பாவத்தை மேற்கொள்ளும் பலத்தை தனி ஜெபத்தின்மூலம் மட்டுமே நாம் பெறமுடியும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆலயங்களுக்குச் சென்றார். பல பண்டிகைகளில் கலந்துகொண்டார். ஆனால் அதே  வேளையில்  பிதாவோடு தனி ஜெபத்தில் அதிகநேரம் செலவிட்டார். "அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்." ( மாற்கு 1 : 35 ) என்று வாசிக்கின்றோம். ஆம், வனாந்தரம் தொந்தரவில்லாத இடம். மற்றவர்களின் இடையூறற்ற இடம். 

தனி ஜெபத்தை வேதம் ஏன் வற்புறுத்துகின்றது என்றால், தனி ஜெபத்தில் நாம் தேவனோடு தனிப்பட்டத் தொடர்பில் இருக்கின்றோம். அதாவது ஒரு நண்பனோடு உரையாடுவதுபோல நாம் தேவனோடு உரையாடுகின்றோம். இந்த ஐக்கியம் ஆலய வழிபாடுகளிலும் ஆராதனைகளிலும் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதில்லை. இத்தகைய நமது தனிப்பட்ட ஜெபம் மற்றவர்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. அது தேவனுக்கும் நமக்குமிடையில் மட்டும் இருக்கவேண்டியது. எனவேதான் இன்றைய தியான வசனத்தில், "ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு" என்று இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். 

நமது ஆலய ஆராதனையும் வழிபாடுகளில் நாம் கலந்துகொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்டையாகத் தெரியும். ஆராதனைகளில் நாம் ஓன்று சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துகின்றோம். ஆனால் நமது தனி ஜெபம் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும். தனி ஜெபத்தை அந்தரங்கத்தில்பார்க்கிற பிதா வெளியரங்கமாய் நமக்குப்  பலனளிப்பார். எல்லா பரிசுத்தவான்களும் தனி ஜெபத்துக்கு அதிக நேரம் ஒதுக்கியவர்களே.

மேலும் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார், "அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" ( மத்தேயு 6 : 7 ) என்று.

நாம் ஜெபிக்கும்போது நமக்குத் தெரிந்த வசனங்களையெல்லாம் சொல்லிச் சொல்லித்தான் ஜெபிக்கவேண்டுமென்று அவசியமில்லை.  "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்." ( மத்தேயு 6 : 8 ) எனவே, நமது இருதயம் தூய்மையாக இருந்து ஒரு பிள்ளைத்  தாய் தகப்பனிடம் உரிமையோடும் அன்போடும் பேசுவதுபோல நாம் தேவனிடம் பேசி அவரோடு ஐக்கியமாக இருந்து ஜெபித்தால் போதும்.  

பொதுவாகக் குடும்பங்களில் வயதான பெரியவர்களிடம் நேரம் ஒதுக்கிப்  பலரும் பேசுவது கிடையாது.  அத்தகைய முதியவர்கள் மனவேதனையுடன் இருப்பார்கள். இதுபோலவே வெறும் ஆலய ஆராதனைகளிலும் வழிபாடுகளிலும் கலந்துகொண்டு நாம் தனி ஜெபத்தைப் புறக்கணித்து வாழும்போது தேவனை மனவேதனை அடையச் செய்கின்றோம். தனி ஜெபமே தேவ ஐக்கியத்தை வளர்க்கும். 

ஆம் அன்பானவர்களே, அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கித் தனிமையில் ஜெபிக்கும்போது  அந்தரங்கத்தில் பார்க்கிற நமது பிதா வெளியரங்கமாய் நமக்குப் பலனளிப்பார். இதுவரை தனி ஜெபத்தை மறந்து வாழ்ந்தவர்களாக இருந்தால் அதற்காக நேரம் ஒதுக்கி ஜெபிக்கப் பழகுவோம்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

💥 "AATHAVAN" Meditation – No. 1930

📆 May 21, 2026, Thursday

"But as for you, when you pray, go into your inner room, close your door and pray to your Father who is in secret, and your Father who sees what is done in secret will reward you." (Matthew 6:6, NASB)

In today’s meditation, the Lord Jesus Christ provides us with some vital insights regarding prayer.

Today, most Christians give priority to church services and corporate worship, while living a life that completely forgets personal, solitary prayer. Although church gatherings and worship services are necessary, it is the secret prayer of solitude that truly unites us in fellowship with God. It strengthens our relationship with Him. We can obtain the strength to overcome sin only through personal prayer.

Our Lord Jesus Christ visited the temples and attended various festivals. Yet, at the exact same time, He spent a vast amount of time in solitary prayer with the Father. We read:

"In the early morning, while it was still dark, Jesus got up, left the house, and went away to a secluded place, and was praying there." (Mark 1:35, NASB)

Indeed, the wilderness is a place free from distractions—a place uninterrupted by others.

The Bible emphasizes personal prayer because, in it, we are in a direct, one-on-one connection with God. It means we converse with God just as we would chat with a friend. This deep, intimate fellowship is rarely achievable during corporate church services and congregational worship.

This personal prayer of ours does not need to be known to others; it is meant to remain strictly between God and us. That is why, in today's meditation verse, Jesus Christ instructs: "But as for you, when you pray, go into your inner room, close your door and pray to your Father who is in secret."

Our church attendance and participation in worship services are visible to everyone. In corporate worship, we join hands to glorify God together. However, our personal prayer is known only to us and God. The Father, who sees our personal prayer in secret, will reward us openly. All the great saints of God were individuals who dedicated substantial time to solitary prayer.

Furthermore, following today's meditation verse, Jesus Christ goes on to say:

"And when you are praying, do not use meaningless repetition as the Gentiles do, for they suppose that they will be heard because of their many words." (Matthew 6:7, NASB)

When we pray, it is not necessary to repeatedly recite every scripture verse we know just for the sake of it.

"So do not be like them; for your Father knows what you need before you ask Him." (Matthew 6:8, NASB)

Therefore, if our hearts are pure and we communicate with God with the freedom, intimacy, and love of a child speaking to their mother or father—dwelling in fellowship with Him—that is more than enough.

Generally, in families, many people do not set aside time to sit and talk with the elderly. Such elders often live with a heavy, aching heart. Similarly, when we merely attend church services and ceremonies but completely neglect personal prayer in our lives, we grieve the heart of God. It is solitary prayer alone that nurtures true fellowship with God.

Yes, dearly beloved, when we pray in solitude to the Father who is in secret, our Father who sees in secret will reward us openly. If you have been living a life that has forgotten personal prayer until now, let us practice setting aside dedicated time for it.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          
 

No comments: