DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, May 28, 2026

🦋 Meditation verse - 1 பேதுரு 3 : 10, 11 / 1 Peter 3:10-11

 💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1940

📆2026 மே 31, ஞாயிறு    


"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்." ( 1 பேதுரு 3 : 10, 11 )

இந்த உலகத்தில் வாழும் அனைவருமே உலகத்தில் பல ஆண்டுகள் சிறப்பாக வாழவேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுப்பதுண்டு. தங்களது உடல்நலத்தைப் பேணிக்காப்பதற்காக பல்வேறு உணவு முறைமைகளையும் உடற்பயிற்சிகளையும் பலரும் செய்கின்றனர். 

இவை அனைத்தும் நல்ல செயல்பாடுகள்தான். ஆனால், பலரும் உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதிற்குக் கொடுப்பதில்லை. இன்று பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களது பல நோய்களுக்கு அவர்களது உணவு முறை மட்டுமல்ல, அவர்களது மனதளவிலான சில செயல்பாடுகளும் காரணம் என்று கூறுகின்றனர். கோபம், எரிச்சல், பொறாமை, வஞ்சக எண்ணம் போன்றவை மனிதர்களது பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எதிர்மறையான மேற்படி எண்ணங்களும் செயல்பாடுகளும் உடலைப் பாதிப்பதுபோல நேர்மறையான மனச்செயல்பாடுகள் உடலில் நல்ல நிணநீர்களைச் சுரக்கச்செய்து உடல் நோய்களை மாற்றுகின்றன. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்", என்றும்  வீடுகளுக்குச் செல்லும்போது "சமாதானம் உண்டாவதாக" என்று வாழ்த்துங்கள் என்றும்  கூறவில்லையா? இதனைத்தான் இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் கூறுகின்றன.      

அதாவது, எவ்வளவுதான் நல்ல உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சிகள் செய்தாலும் மனமானது சரியாக இல்லையானால் நாம் வாழ்வில் நீடித்த வாழ்வையும் நல்ல நாட்களையும் காண முடியாது. இன்றைய தியான வசனம் கூறுவதுபோல  நல்ல வாழ்நாளை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு விலகவேண்டும். நன்மை செய்து, சமாதானத்தைத் தேடவேண்டும். 

இந்தச் சத்தியத்தை பக்தனாகிய  யோபு நன்கு அறிந்திருந்தார். எனவேதான்  அவர், "எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்" ( யோபு 21 : 17 ) என்று கூறுகின்றார். ஆம், இப்படிப்  பொல்லாப்புச்செய்து, நாவையும் உதடுகளையும் கபடத்தால் உடுத்தி பொருள் சேர்க்கும் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும். 

ஆம் அன்பானவர்களே, நமது உடலும், மனமும் ஒன்றாகச் செயல்படவேண்டியது அவசியம். நமது மனம் நினைப்பதை நாவும் உதடுகளும் பேசவேண்டும்.  இவை மாறுபட்டு இருக்குமானால் நாம் கபடர்கள் என்று பொருள். எனவேதான் சங்கீத ஆசிரியர், "உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்." (சங்கீதம் 34:13) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும், "ஜீவனை விரும்பி" எனும் வார்த்தைக்கு  நித்திய ஜீவனை விரும்புவதையும் பொருளாகக் கொள்ளலாம். ஆம், "நீ நித்திய ஜீவனை அடைந்திட விரும்புவாயென்றால், பொல்லாப்புக்கு உன் நாவையும், கபடத்துக்கு உன் உதடுகளையும் விலக்கிக் காத்துக்கொள்" என்றும் பொருள். 

ஆம் அன்பானவர்களே, உடலை நாம் பேணுவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது மனத்தினைப் பேணுவதற்கும் கொடுக்கவேண்டியது அவசியம்.  மனித போதனைகள் இதனை நாம் செயல்படுத்திட உதவாது. காரணம் பல நீதிநூல்களும் இவற்றைத்தான் கூறுகின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். நமது சுயத்தால் நாம் இப்படி மாறிட முடியாது. எனவே, தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம். 

"கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்"(சங்கீதம் 141:3) என்று உண்மையான ஆர்வத்துடன் ஜெபிப்போம்.  நீடித்த ஜீவனையும் நல்ல நாட்களையும் அப்போதுதான் நாம் பெறமுடியும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

💥 "AATHAVAN" 🌳 Meditation - No. 1940

📆 May 31, 2026, Sunday

"For, 'The one who desires life, to love and see good days, must keep his tongue from evil and his lips from speaking deceit. He must turn away from evil and do good; He must seek peace and pursue it.'" — 1 Peter 3:10-11

Everyone living in this world desires to live a long, excellent life. People make various efforts toward this goal. Many follows different diets and exercise routines to preserve their physical health.

While these are all good practices, many do not give the same importance to the mind as they do to the body. Today, various medical research studies state that many human illnesses are caused not just by diet, but also by certain psychological behaviours. Scientists note that anger, irritation, jealousy, and deceitful thoughts are the root causes of various human diseases.

Just as these negative thoughts and actions adversely affect the body, positive mental activities stimulate the secretion of healthy fluids (hormones/endorphins) in the body, transforming physical ailments. Did not our Lord Jesus Christ command us to "do good to those who do evil" and to greet homes by saying, "Peace be to this house"? This is exactly what modern scientific studies are now pointing out.

In other words, no matter how much good food we consume or how much we exercise, if our mind is not right, we cannot see longevity and good days in our life. As today's meditation verse states, whoever desires a good lifespan and wants to see good days must guard their tongue from evil, keep their lips from deceit, and turn away from wickedness. One must do good and seek peace.

The devout Job knew this truth very well. That is why he says:

"How often is the lamp of the wicked put out, or does their disaster fall on them? Does He apportion destruction in His anger?" — Job 21:17

Yes, the lamp of the wicked—those who commit evil and gather wealth by clothing their tongue and lips with deceit—will be put out.

Yes, beloved, it is essential that our body and mind function as one. What our mind thinks, our tongue and lips must speak. If these are divided, it means we are deceitful. That is why the Psalmist counsels us:

"Keep your tongue from evil and your lips from speaking deceit." — Psalm 34:13

The phrase "desires life" mentioned in this verse can also be interpreted as desiring eternal life. Yes, it means: "If you desire to attain eternal life, guard your tongue from evil and your lips from deceit."

Yes, beloved, it is absolutely essential to give the same importance to nurturing our mind as we do to caring for our body. Human teachings alone cannot help us practice this, even though many books of morality say the same things. As human beings, we are weak. We cannot transform this way by our own strength. Therefore, it is essential to surrender our lives to God.

Let us pray with true earnestness:

"Set a guard, O Lord, over my mouth; Keep watch over the door of my lips." — Psalm 141:3

Only then can we receive a long life and good days.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments: