DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, May 12, 2026

🦋 Meditation verse - ஓசியா 13 : 4 / Hosea 13:4

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1922

📆2026 மே 13, புதன்       


"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை." ( ஓசியா 13 : 4 )

இஸ்ரவேலரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இன்றைய நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் நிழலாட்டமாக இருக்கின்றன. இன்றைய தியான வசனம் கூறும் சத்தியத்தையே இன்று நாம் விபரமாக அறியவுள்ளோம்.  

நன்றி மறந்த குணம் என்பது மனிதர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அவர்கள் தங்களுக்கு உதவியவர்களை வெகு சீக்கிரத்தில் மறந்துவிடுகின்றனர். எவ்வளவு உதவிகள் செய்திருந்தாலும் சிலர் தங்களுக்கு  உதவிகளை அடியோடு மறந்துவிடுவதுண்டு. மட்டுமல்ல, உதவியவர்களுக்கு எதிராகவும் செயல்படுவதுண்டு.  தெருநாய்க்கு நாம் ஒரு பிஸ்கெட் துண்டைப் போட்டால்கூட அது நம்மை மறப்பதில்லை. ஆனால் மனிதர்கள் பலவேளைகளில் நாய்களைவிட மோசமானவர்களாக இருக்கின்றனர். இப்படி நாம்  நன்றிகெட்டு  வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து அவர்களைப்  பாலும் தேனும் வழியும் கானானுக்கு வழிநடத்தி அந்தத்  தேசத்தை அவர்களுக்கு உரியதாக்கினார். ஆனால் இஸ்ரவேலரோ தேவனது இந்த இரக்கத்தையும் வல்லமையையும் மறந்தவர்களாக குறுகிய காலத்தில் வேறு தெய்வங்களை வழிபடத்  துவங்கினர். 

இதுபோலவே இன்று நம்மை தேவன் பாவமாகிய எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து  விடுத்துள்ளார். நமது பழைய  பாவ வாழ்க்கை என்பது இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமைகளாக இருந்தது போன்றதாகும்.  அத்தகைய பாவ வாழ்க்கையிலிருந்து தேவன் நம்மை மீட்டுள்ளார்.  தேவன் கிருபையினால் நம்மை அந்தப் பாவ வாழ்க்கையிலிருந்து மீட்டு நம்மை ஆவிக்குரிய மக்களாக வழிநடத்தி வருகின்றார். 

அன்று இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு வனாந்தரம் வழியாக தேவன் வழிநடத்தினார்.  இன்றும் அதுபோல மகிழ்ச்சியான பாவ வாழ்கையிலிருந்து நாம் மீட்கப்படும்போது வனாந்தர வாழ்க்கைபோல நமக்குச் சில கடினமான வாழ்க்கைச் சவால்கள் ஏற்படலாம். ஆனால் தேவன் நாம் பரம கானானை அடைவதற்கு; நமது நல்ல எதிர்காலத்துக்கு அப்படி நடத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்." ( ஓசியா 13 : 5 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

ஆனால் இப்படி மீட்கப்பட்டு வனாந்தரம் வழியாக நடத்தப்பட்டு கானானுக்குள் பிரவேசித்த இஸ்ரவேல் மக்கள்  கொஞ்ச நாட்களுக்குள் தேவனைவிட்டுப் பின்மாறி வேறு தெய்வங்களை வழிபட்டதுபோல இன்றும் தேவனால் இரட்சிக்கப்பட்ட மக்கள் பலர் சிறிதுநாட்களுக்குள் பழைய பாவ வாழ்க்கையினை ருசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அவற்றையே வேறு தேவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. சிலருக்கு அந்த வேறு தெய்வங்கள் என்பது பணமாக, பதவியாக, பெண்ணாசையாக, அதிகார வெறியாக இருக்கலாம். நம்மைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனை மறந்து இத்தகைய வேறு தேவர்களை நீ அறிய வேண்டாம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இப்படி வேறு தேவர்களை நாம் ஆராதித்துக் கொண்டிருப்போம் என்றால் நாம் மீண்டும் அடிமைகளாவோம். ஆம் அன்பானவர்களே, அன்று இப்படி வேறு தேவர்களை ஆராதித்த இஸ்ரவேலர்கள் பாபிலோனியர்களுக்கும் அசீரியர்களுக்கும்  அடிமைகளாயினர். தேவனது எருசலேம் ஆலயம் தகர்க்கப்பட்டு தேவனது மகிமை அவர்களைவிட்டுப் போயிற்று. நாமும் நம்மை பாவத்திலிருந்து மீட்டு வழிநடத்தும் தேவனது பரிசுத்த வழிகளை விட்டு விலகுவோமென்றால் நமது ஆவிக்குரிய வாழ்க்கை தகர்ப்பட்டு தேவ மகிமை நம்மைவிட்டு அகன்றுபோகும். 

ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை என்கின்றார் தேவனாகிய கர்த்தர். வேறு தேவர்கள் என்பது வேறு மத கடவுளர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, நாம் தேவனை விட யாருக்கெல்லாம், எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கின்றோமோ அவை அனைத்தையும் குறிக்கின்றது. அப்படி அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது நாம் நம்மை மீட்டத் தேவனை விட்டு வேறு தேவர்களை அறிகின்றோம் என்று பொருள். 

நமது வாழ்க்கையின் இக்கட்டான வேளையில் தேவனை விட்டு நாம் முன்னுரிமை கொடுக்கும் வேறு எதுவும், யாரும் நமக்கு உதவிட முடியாது. எனவே, தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே வாழ்க்கையில் முன்னுரிமை கொடுத்து வாழ்வோம். ஆம் அன்பானவர்களே, "என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

💥 "AATHAVAN" Meditation – No. 1922

📆 Wednesday, May 13, 2026

"Yet I have been the Lord your God since the land of Egypt; and you were not to know any god except Me, for there is no saviour besides Me." (Hosea 13:4)

The events in the lives of the Israelites serve as a shadow and a reflection of our spiritual lives today. In today's meditation, we will explore in detail the truth found in this verse.

The trait of ungratefulness is prevalent among human beings. People often quickly forget those who have helped them. No matter how much assistance they have received, some completely erase those deeds from their memory. Furthermore, they sometimes even work against their benefactors. If we throw a piece of biscuit to a stray dog, it never forgets us. Yet, in many instances, humans behave worse than dogs. Today’s verse admonishes us not to live with such ingratitude.

God liberated the Israelites from the bondage of Egypt, led them toward Canaan—a land flowing with milk and honey—and made that land their own. However, the Israelites soon forgot God’s mercy and power and began to worship other gods.

In the same way, God has delivered us today from the "Egypt" of sin. Our old life of sin was much like the Israelites being slaves to the Egyptians. God, in His grace, has redeemed us from that life and is leading us as a spiritual people.

Just as God led the Israelites through the wilderness after redeeming them from Egypt, we too may face difficult life challenges—similar to a wilderness—when we are rescued from a "pleasurable" life of sin. However, God leads us this way for our good future and so that we may reach the Heavenly Canaan. Following our main verse, the Lord God says:

"I cared for you in the wilderness, in the land of terrible drought." (Hosea 13:5)

After being redeemed, led through the wilderness, and entering Canaan, the Israelites backslid within a short time and worshipped other gods. Similarly, many people today who have been saved by God begin to "taste" their old sinful life again after a while.

These old habits and desires are what the verse refers to as "other gods." For some, these "other gods" might be money, position, lust, or a thirst for power. Today’s meditation warns us: Do not acknowledge such gods, and do not forget the God who freed you from the slavery of sin.

If we continue to worship these other gods, we will become slaves once again. Dearly beloved, when the Israelites worshipped other gods, they became captives to the Babylonians and Assyrians. God’s Temple in Jerusalem was destroyed, and His glory departed from them. If we deviate from the holy ways of the God who redeemed and leads us, our spiritual life will be shattered, and the glory of God will depart from us.

Therefore, the Lord God says: "You were not to know any god except Me, for there is no saviour besides Me."

"Other gods" do not only refer to the deities of other religions. Rather, it refers to anyone or anything to which we give priority over God. When we prioritize these things, it means we are "knowing" other gods and forsaking our Redeemer.

In the critical moments of our lives, nothing and no one we have prioritized over God will be able to help us. Therefore, let us live giving priority to the Lord God alone.

"There is no saviour besides Me," says the Lord God.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments: