DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, May 04, 2026

🦋 Meditation verse - யோவான் 12 : 48 / John 12:48

💥"ஆதவன்🌳தியானம் - எண் 1914

📆2026 மே 05, செவ்வாய்     


"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர திணிக்கக்கூடாது. வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. அப்படி ஒருவர் கிறிஸ்தவராக வருவாரென்றால் அவர் பெயர் கிறிஸ்தவராகவே இருப்பார். இன்று சிலர் திருமணத்துக்காக இப்படி மதம் மாறி கிறிஸ்தவர்கள் ஆகின்றனர். 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 ) ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி அனைவருக்கும் ஒன்றுதான்.  அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது மற்றவர்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கே அதிகம் பொருந்தும். 

நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இல்லையானால் நாம் நியாத்தீர்ப்புநாளில் அவர் முன் தைரியமாக நிற்கமுடியாது. 


✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

💥 "AATHAVAN" 🌳 Meditation - No. 1914

Date: May 05, 2026, Tuesday


"He who rejects Me and does not receive My sayings, has one who judges him; the word I spoke is what will judge him at the last day." (John 12:48)

Accepting or rejecting Christ is an individual's personal choice. However, it is the duty of Christians to proclaim Christ to everyone. This is because Jesus Christ gave this as a command before He ascended to heaven. We read in Mark 16:15-16:

"And He said to them, 'Go into all the world and preach the gospel to all creation. He who has believed and has been baptized shall be saved; but he who has disbelieved shall be condemned.'"

Our duty is solely to preach. This is what Christians do; they do not "convert" people. Only a few insignificant workers, who lack scriptural knowledge or experience yet claim to be doing ministry, make mistakes in this regard. The words of the Lord Jesus should be sown, not imposed. We cannot bring anyone into Christ by force. If someone becomes a Christian in such a way, they remain a Christian in name only. Today, some become Christians by converting solely for the sake of marriage.

In today’s meditation verse, this is what Jesus Christ says: "Sow My words. The word I have spoken will judge the one who does not receive it." Yes, the Word of God is living and powerful. It is capable of piercing a person's heart and penetrating their soul, thoughts, actions, and body. We read this in the Epistle to the Hebrews:

"For the word of God is living and active and sharper than any two-edged sword, and piercing as far as the division of soul and spirit, of both joints and marrow, and able to judge the thoughts and intentions of the heart." (Hebrews 4:12)

Regardless of a person's religion, the conscience is the same for everyone. That itself is the sign that one God created all people.

The Apostle Paul describes this:

"in that they show the work of the Law written in their hearts, their conscience bearing witness and their thoughts alternately accusing or else defending them." (Romans 2:15)

Indeed, the laws of the Lord are written in the hearts of all human beings.

The Lord's Word is righteous and transcends religions. That is why Jesus Christ says, "He who rejects Me and does not receive My sayings, has one who judges him; the word I spoke is what will judge him at the last day." This is exactly why we proclaim the Gospel to everyone.

When we reject Christ and fail to believe His words, we cannot live righteously. His Word alone has the power to lead us on the right path.

The statement—"the word I spoke is what will judge him at the last day"—applies even more to those who claim to be Christians but live lives of disobedience to the Word, rather than to those who have never known Him.

We are duty-bound to examine ourselves: Is our life in accordance with the Word of Christ? If not, we will not be able to stand boldly before Him on the Day of Judgment.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments: