DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, May 06, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 25 : 12 / Psalm 25:12

 💥"ஆதவன்🌳தியானம் - எண் 1916

📆2026 மே 07, வியாழன் 


"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 )

நமது வாழ்க்கைப் பயணத்தில் இந்த உலகத்தில் நாம் செல்லும் வழிகள் அனைத்தும் பலவேளைகளில் சரியாக இருப்பதில்லை; நாம் எடுக்கும் முடிவுகள் பலவும் சரியாக இருப்பதில்லை. காரணம், நமது அறிவு குறைவுள்ளது. நாம் நமக்குத் தெரிந்த குறைந்த அனுபவங்களையும் அறிவையும் கொண்டு முடிவுகள் எடுக்கின்றோம். எனவேதான் பலவேளைகளில் தவறுகின்றோம்.

ஆம் அன்பானவர்களே, நமது அறிவு குறைவுள்ளது. ஆனால் தேவன் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நிறைவுள்ளவர்கள் ஆகின்றோம். அப்படி  "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." ( 1 கொரிந்தியர் 13 : 10 ) அதுவரை நாம் பலவேளைகளில் தவறிக்கொண்டுதான் இருப்போம். 

சிலருக்கு வாழ்க்கையில் அனைத்தும் வெற்றியாக நடைபெறுவதையும் பலருக்கு எதை எடுத்தாலும் தோல்வியில் முடிவடைவதையும் பார்க்கின்றோம். காரணம், தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவ பிள்ளைகளை மற்றவர்களைப்போல நடத்துவதில்லை. மற்றவர்களுக்கு வெற்றியாக முடிவடையும் காரியங்கள் தேவன் அன்பு செய்யும் மனிதர்களுக்குத் தோல்வியில் முடிவடையும். தொடர்ந்த தோல்வியில், உபத்திரவங்களில்  தேவன் மனிதர்கள் தன்னை முழுமனதுடன்  தேடும்படிச் செய்கின்றார்.  ஆம் அன்பானவர்களே, தேவன் உபத்திரவங்களால் சோதித்து தனக்கான மக்களைத் தெரிவுசெய்கின்றார்.  

இதனையே, "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

பழைய காலங்களில் கடல் பயணம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. பரந்த கடல்வெளியில் திசை அறிவது மிகவும் கடினமாகவே இருந்தது. ஆனால் திசைகாட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டபின்னர் அது சிறிதளவு எளிதாக மாறியது. கடல் பயணத்துக்கு உதவியாக கலங்கரை விளக்குகள் இருந்தன. அவை கடற்கரை குறித்து ஓரளவு அறிவித்தன. ஆனால், இந்தக்காலத்தில் கடல் பயணம் நவீனமாகிவிட்டது. கப்பல்கள் நவீனமாகிவிட்டன. GPS கருவிகள், கம்ப்பியூட்டர் துல்லியமாக இடங்களை பயணம் செய்பவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றன. 

நாம் தேவனில்லாத வாழ்க்கை வாழும்போது பழைய காலத்து மனிதர்கள் கடல் பயணம் செய்ததுபோல வாழ்கின்றோம். ஆனால் தேவனை அறிந்தபின்னர் நவீன காலத்து மக்களைப்போல துல்லியமாக பயணத்தின் இடம், திசை அறிந்தவர்களாக மாறுகின்றோம். காரணம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு இருக்குமானால் அவர் நம்மை நடத்துவார். இதனையே இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் நாம் கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்படி வாழ்வோமானால் தேவனே நமக்கான வழியினைக் காண்பித்து நம்மை நடத்துவார். தொடர்ந்த பிரச்னை, கஷ்டங்கள் வாழ்வில் ஏற்படும்போது நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய செய்தி இதுதான்:-  "தேவன் என்னை நேசிக்கின்றார்; எனவே எனது வாழ்க்கை மாற்றத்தை விரும்புகின்றார்"  

தேவனது சித்தத்தை அறிந்து நம்மைத் திருத்திக்கொள்ள மனதுள்ளவர்களாக இருப்போமானால் தாம் தெரிந்துகொள்ளும் வழியை நமக்குப்  போதிப்பார்; நமது வாழ்க்கையையும் மாற்றுவார். அப்போது, நவீன விஞ்ஞான கருவிகளுடன் நவீன கப்பல்களில் பயணம் செய்வதுபோல நமது வாழ்க்கைப் பயணம் மாறும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

💥 "AATHAVAN" Meditation – No. 1916

📖 May 07, 2026, Thursday

"Who is the man who fears the Lord? He will instruct him in the way he should choose." — Psalm 25:12

In our life’s journey, the paths we take in this world are often not the right ones; many of the decisions we make are flawed. The reason is that our knowledge is limited. We make decisions based on our meagre experiences and restricted understanding. That is why we fail so often.

Yes, dear ones, our knowledge is deficient. We become complete only when God enters into us. As it is written:

"But when the perfect comes, the partial will be done away with." — 1 Corinthians 13:10

Until then, we will continue to stumble in many ways.

We see that for some, everything in life results in success, while for others, whatever they touch ends in failure. The reason is that God does not lead His chosen children in the same way He leads others. Things that might end in success for others may end in failure for those whom God loves. Through continuous failures and tribulations, God causes people to seek Him with their whole heart. Yes, dear ones, God tests His people through the "furnace of affliction" and chooses them for Himself.

We read of this in the Scripture:

"Behold, I have refined you, but not as silver; I have tested you in the furnace of affliction." — Isaiah 48:10

In ancient times, sea travel was an extremely difficult endeavour. It was very hard to discern direction in the vast expanse of the ocean. After the invention of the compass, it became slightly easier. Lighthouses served as aids, giving some indication of the coastline. However, in this modern era, sea travel has been transformed. Ships are sophisticated. GPS devices and computers accurately point out locations to travellers.

When we live a life without God, we live like the ancient mariners. But after knowing God, we become like modern travellers—knowing the exact destination and direction of our journey. The reason is that if we have the fear of the Lord, He will lead us. This is exactly what we read in today’s meditation verse: "Who is the man who fears the Lord? He will instruct him in the way he should choose."

Therefore, it is essential that we live a life fearing the Lord. If we live that way, God Himself will show us the path intended for us and lead us. When continuous problems and hardships arise in life, this is the message we must understand: "God loves me; therefore, He desires a change in my life."

If we are willing to know God's will and correct ourselves, He will instruct us in the way He chooses and transform our lives. Then, our life’s journey will be changed—resembling a voyage on a modern ship equipped with the latest technology.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          




                                                               

No comments: