DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, May 15, 2026

🦋 Meditation verse - புலம்பல் 2 : 14 / Lamentations 2:14

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1925

📆2026 மே 19, சனி  


"உன் தீர்க்கத்தரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்." ( புலம்பல் 2 : 14 )

தேவன் தனது சித்தத்தை தனது அடியார்களுக்கு வெளிப்படுத்துவதுதான் தீர்க்கத்தரிசனம். இந்தத் தீர்க்கத்தரிசனமானது மக்களது நன்மைக்காக; மக்கள் தங்களது பாவங்களை உணர்ந்து மனம்திரும்பி தேவனுக்கேற்றவர்களாக மாறவேண்டும் என்பதற்காக தேவனால் அருளப்படுகின்ற ஒரு வரமாகும். இப்படி முறையான தெளிவான தீர்க்கத்தரிசனம் இல்லாத இடத்தில மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்.  

"தீர்க்கத்தரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்." ( நீதிமொழிகள் 29 : 18 ) என்று கூறப்பட்டுள்ளது. "இந்த ஆண்டு உனக்கு ஆசீர்வாதமான ஆண்டாக இருக்கும், நீ சொந்தமாக வீடு வாங்குவாய், இந்த ஆண்டு புதிய கார் வாங்குவாய், உனது வேலையில்  மிக உயர்ந்த இடத்துக்குப்போவாய்" என்பது போன்ற தீர்க்கத்தரிசனங்கள் நடைபெறுகின்றதோ  இல்லையோ அனால் கேட்கும் மக்களுக்கு இன்பமாக இருக்கும்.  

ஆனால், தேவன் அருளும் மெய்யான தீர்க்கத்தரிசனம் மனிதர்களைப் பாவ உணர்வடையச் செய்யும். பெரும்பாலும் ஊழியர்கள் இத்தகைய தீர்க்கதரிசனங்களைக் கூறாமல், ஆசீர்வாதத்தையே தீர்க்கத்தரிசனமாகக் கூறுவார்கள்; மக்களும் அதனையே இரசிக்கின்றனர்.  இது இப்போது மட்டுமல்ல, எரேமியா தீர்க்கத்தரிசியின் காலத்திலும் இப்படியே இருந்தது. எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தில், உன் பாவச் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள் என்று கூறுகின்றார்.

தாவீது பாவம் செய்தபோது நாத்தான் தீர்க்கத்தரிசி அவரது பாவத்தை உணர்த்தி அவர் மனம் திரும்பும்படிச் செய்தார்.  ஆம் அன்பானவர்களே, உண்மையான தீர்க்கத்தரிசனம் இருதயத்தின் அந்தரங்கப்பாவங்களை மனிதர்களுக்கு வெளிப்படுத்திக்கொடுத்து அவர்களை மனம்திரும்பச் செய்யும். இப்படி மக்களிடையே மனம்திரும்புதல்  ஏற்படும்போதுதான் ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படும். ஆனால் இன்று ஆசீர்வாதக் கூட்டங்களில் கூடும் மக்களைப் பாத்துவிட்டு நாட்டில் எழுப்புதல் ஏற்பட்டுவிட்டது என்று போலி மாயையை உருவாக்குகின்றார்கள். 

பாவ உணர்வூட்டும் தீர்க்கத்தரிசனம் குறித்து அப்போஸ்தலரான பவுல், பாவம் செய்த ஒருவனைக்குறித்து தீர்க்கத்தரிசனம் கூறும்போது  "அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்." ( 1 கொரிந்தியர் 14 : 25 ) என்று கூறுகின்றார். 

இத்தகைய தீர்க்கத்தரிசனத்தையே தேவன் விரும்புகின்றார். நாமும் பல்வேறு ஆவிக்குரிய வரங்களில் தீர்க்கத்தரிசன வரத்தையே விரும்பவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், "அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கத்தரிசன வரத்தை விரும்புங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 1 )

அபத்தமும் வியர்த்தமுமான தீர்க்கத்தரிசனங்களை நம்பினால் அவை நம்மை பாவச் சிறைக்குள்ளேயே வைத்திருக்கும். எனவே,  அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் நமக்காகத் தரிசித்துத் தீர்க்கத்தரிசனம்  கூறும் ஊழியர்களை நோக்கி ஓடாமல் நமது ஆத்துமாக்களைக் காத்துக்கொள்வோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                           

💥 "AATHAVAN" Meditation – No. 1925

📆 Saturday, May 19, 2026

"Your prophets have seen for you false and foolish visions; and they have not exposed your iniquity so as to restore you from captivity, but they have seen for you false and misleading oracles." (Lamentations 2:14)

Prophecy is the revelation of God's will to His servants. It is a gift bestowed by God for the benefit of the people, intended to make them realize their sins, repent, and transform into a state pleasing to God. In places where such orderly and clear prophecy is absent, people perish or cast off restraint.

As it is written: "Where there is no vision, the people are unrestrained, but happy is he who keeps the law." (Proverbs 29:18,).

Prophecies like, "This year will be a year of blessing for you," "You will buy your own house," "You will buy a new car this year," or "You will reach the highest position in your job," may or may not come to pass, but they are pleasant for people to hear.

However, the true prophecy granted by God convicts humans of their sin. Most ministers today avoid such prophecies and instead deliver "blessings" in the name of prophecy; and the people, too, delight in it. This is not a new phenomenon; it was the same during the time of the Prophet Jeremiah. That is why in today’s meditation verse, he says that they saw false and misleading visions for you, instead of exposing your iniquity to prevent your captivity.

When David sinned, Nathan the prophet exposed his sin and led him to repentance. Yes, dear ones, true prophecy reveals the hidden sins of the heart and brings people to repentance. Spiritual revival occurs only when such repentance takes place among the people. But today, a false illusion of "revival" is created by looking at the crowds gathered at "blessing meetings."

Regarding the prophetic word that brings conviction of sin, the Apostle Paul says of one who has committed a sin: "And thus the secrets of his heart are revealed; and so, falling down on his face, he will worship God and report that God is truly among you." (1 Corinthians 14:25)

This is the kind of prophecy God desires. Apostle Paul instructs us that among the various spiritual gifts, we should especially desire the gift of prophecy. Indeed, he says: "Pursue love, yet desire earnestly spiritual gifts, but especially that you may prophesy." (1 Corinthians 14:1).

If we believe in false and vain prophecies, they will keep us bound within the prison of sin. Therefore, let us protect our souls by not running after ministers who see and speak "false and misleading oracles" for us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                        

No comments: