DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, May 23, 2026

🦋 Meditation verse - லுூக்கா 16 : 11 / Luke 16:11

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1935

📆2026 மே 26, செவ்வாய்        


"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" ( லுூக்கா 16 : 11 )
 
எல்லா மனிதர்களும் தங்களிடம் பணி  செய்பவர்களும் தங்களோடு பழகுபவர்களும் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனால் இப்படி விரும்பும் பெரும்பாலான மனிதர்களும் தாங்களும்  அப்படி உண்மையுள்ளவர்களாக வாழவேண்டுமென்று எண்ணுவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு மனிதர், "பொய் சொல்பவர்களை எனக்குக் கண்டாலே பிடிக்காது....நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வேன், என்னிடம் பொய் சொல்வதை மட்டும் பொறுத்துக்கொள்ளமாட்டேன்" என்று அடிக்கடிக் கூறுவார்.  ஆனால் இந்த மனிதர் வாயைத்திறந்தாலே பொய்யாகத்தான் இருக்கும்; அவரது தொழிலையும் பல்வேறு பொய்களைச்சொல்லியே நடத்திக்கொண்டிருக்கின்றார்.

நாம் கவனித்துப்பார்த்தால் புரியும், ஒருவர் தனக்கு ஏதாவது பொருளாதார இலாபம் இருப்பதால்தான் பொய்க்கூறுகின்றார். அதாவது குறுக்கு வழியில் செல்வந்தனாகிவிடவே அப்படிப் பொய்வழியைத் தேடுகின்றார். ஆனால் தேவன் கூறுகின்றார்,  "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28 : 20 ) என்று.

ஆம் அன்பானவர்களே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா உலகக் காரியங்களிலும் நாம் உண்மையல்லவர்களாக வாழவேண்டியது  அவசியம். சிறிய காரியத்தில் உண்மையாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் உண்மையுள்ளவனாக இருப்பான். இதனையே இன்றைய தியான வசனத்தின் முன்பு இயேசு கூறுகின்றார், "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்." ( லுூக்கா 16 : 10 ) என்று. 

நமக்குக் கொடுக்கப்பட்டது சிறிய உலக வேலையாக இருந்தாலும் அந்த வேலையில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். வேலைக்காரர்கள் எப்படித் தங்கள் எஜமானனுக்குப் பணிசெய்யவேண்டும் என்பதனை அப்போஸ்தலரான பவுல், "மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்." ( எபேசியர் 6 : 6 ) என்றும் "மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்." ( எபேசியர் 6 : 8 ) என்றும் கூறுகின்றார். அதாவது, நாம் செய்யும் உலகவேலையின் எஜமான் கர்த்தரே என்று எண்ணி நாம் வேலைசெய்யவேண்டும்.

இப்படிக் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களையே   தேவன் தனது பணிக்காகப் பயப்படுத்துகின்றார். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்." ( 1 தீமோத்தேயு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

ஆலயங்களுக்குச் சென்று ஆராதிப்பதிலும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதிலும், காணிக்கைகள் கொடுப்பதிலும் காட்டக்கூடிய ஆர்வத்தைப் பலரும் உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வதற்குக் கொடுப்பதில்லை. தேவசந்நிதியில் சென்று சேர இதுவே தகுதி. "துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த உலகத்தில்கூட பல நிறுவனக்களில் உண்மையுள்ள ஊழியர்களையே கண்டறிந்து உயர் பதவிகளில் அமர்த்துகின்றனர். அப்படி இருக்கும்போது தேவன் எப்படி உண்மையில்லாத மனிதர்களுக்கு மேலான பரலோக ஆசீர்வாதங்களைக் கொடுக்கமுடியும்? ஆம், உண்மையில்லாத பொய்யர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் நரகமே. ".........பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்" ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 ) 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     

💥 "AATHAVAN" 🌳 Meditation - No. 1935

📆 Tuesday, May 26, 2026

"Therefore, if you have not been faithful in the use of unrighteous wealth, who will entrust the true riches to you?" — Luke 16:11 (NASB)

Everyone desires that those who work for them and those they interact with be faithful and honest. However, most people who hold this expectation do not think about living faithfully themselves.

I know a person who frequently says, "I absolutely despise liars... I can tolerate anything, but I cannot tolerate someone lying to me." Yet, almost every time this man opens his mouth, a lie comes out, and he runs his entire business based on various falsehoods.

If we observe closely, we will realize that a person usually lies for some financial gain. That is, they seek the path of deceit just to get rich quick through shortcuts. But God says:

"A faithful man will abound with blessings, but he who makes haste to be rich will not go unpunished." — Proverbs 28:20 (NASB)

Yes, dearly beloved, it is essential for us to live faithfully in all worldly matters entrusted to us. A person who is faithful in small things will also be faithful in large things. Jesus states this right before today's meditation verse:

"He who is faithful in a very little thing is faithful also in much; and he who is unrighteous in a very little thing is unrighteous also in much." — Luke 16:10 (NASB)

Even if what is given to us is a small, ordinary worldly job, let us be faithful in that work. Concerning how servants should serve their masters, the Apostle Paul writes:

"...not by way of eyeservice, as men-pleasers, but as slaves of Christ, doing the will of God from the heart." — Ephesians 6:6 (NASB)

And further:

"With good will render service, as to the Lord, and not to men..." — Ephesians 6:7 (NASB) (Note: Evaluated as verse 7 in the NASB alignment)

This means we must work with the mindset that the Lord Himself is the ultimate Master of the worldly work we do.

God uses precisely those who are faithful in these small things for His own work. The Apostle Paul reflects on this, saying:

"I thank Christ Jesus our Lord, who has strengthened me, because He considered me faithful, putting me into service..." — 1 Timothy 1:12 (NASB)

Many people do not give the same enthusiasm to living a faithful life as they do to attending church services, participating in prayer meetings, or giving offerings. Yet, faithfulness is the very qualification required to draw near to God's presence. We read:

"...let us draw near with a sincere heart in full assurance of faith, having our hearts sprinkled clean from an evil conscience and our bodies washed with pure water." — Hebrews 10:22 (NASB)

Even in this world, many companies identify faithful employees and promote them to high positions. That being the case, how can God entrust greater, heavenly blessings to unfaithful people? Indeed, the place designated for unfaithful liars is hell:

"...and all liars, their part will be in the lake that burns with fire and brimstone, which is the second death." — Revelation 21:8 (NASB)

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments: