"ஆதவன்" தியானம் - 1944
"தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" ( யோவான் 5 : 44 )
மகிமை செலுத்துதல் என்பதற்கு மதிப்பளிப்பது அல்லது கவுரவப்படுத்துதல் என்று பொருள் கொள்ளலாம். அரசர்களை குடிமக்கள் மகிமைக்குரியவர்கள் என்று கருதுவதுண்டு. அதுபோல, அரசர்களும் தங்களது நாட்டில் சாதனை புரிந்தவர்களை கவுரவப்படுத்துவதுண்டு. பொதுவாக மக்கள் பலரும் இப்படி மற்றவர்களால் மதிப்பளிக்கப்படுவதை விரும்புகின்றனர். இதற்கு உண்மையான காரணம் அவர்களது பெருமை. மெய்யான மகிமைக்கு தேவன் மாத்திரமே சொந்தக்காரர். நாம் அவரை மகிமைப்படுத்தினால் அவர் நம்மை மகிமைப்படுத்துவார்.
இன்றைய தியான வசனம் தன்னை விசுவாசிக்காத யூதர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறுவதாகும். பெதஸ்தா குளக்கரையில் 38 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த மனிதனை இயேசு கிறிஸ்து குணமாக்கியதை யூதர்கள் விரும்பவில்லை. காரணம், இயேசு கிறிஸ்து இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததுதான். எனவே யூதர்கள் அவரை விசுவாசிக்கவும் இல்லை. இதனால் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து "தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" என்று கேட்கின்றார்.
இயேசு கிறிஸ்துக் கேட்கும் இந்தக் கேள்விக்குரிய உள்ளார்ந்த பொருள், ஓய்வுநாளை நீங்கள் கடைப்பிடிக்கின்றீர்கள் என்பதனை மற்றவர்கள் அறிந்து உங்களைக் கனப்படுத்தவேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்; இப்படி மற்றவர்களிடம் மதிப்பு பெறவேண்டும் என்று எண்ணும் நீங்கள் எப்படி நான் செய்ததை விசுவாசிக்கமுடியும்? என்பதுதான். ஆம், தேவனை நாம் அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் முதலில் நாம் நமது சுய பெருமையினை விடவேண்டியது அவசியம். எல்லோரும் என்னை மதிக்கவேண்டும் என்று நாம் பெருமைகொண்டு மனிதர்களது மதிப்பினைத்தேடி ஓடிக்கொண்டிருப்போமானால் தேவனை வாழ்வில் அறியமுடியாது.
ஆம் அன்பானவர்களே, தேவனே நம்மை உயர்த்தவேண்டும்; அவரே நம்மை மகிமைப்படுத்தவேண்டும். நமது பதவியோ, பணமோ, அதிகாரமோ நம்மை மகிமைப்படுத்தும் என்று எண்ணி ஓடிக்கொண்டிருப்போமானால் நாம் தேவனை அறியமுடியாது. பல திருச்சபைகளில் மேலான பதவிகளை வகித்து திருச்சபையை வழிநடத்தும் தலைவர்கள் தங்களை அறியாமல் இந்தப் பெருமைக்குள் அகப்பட்டுக்கொள்கின்றனர். அதாவது, அவர்கள் தேவனால் வரும் மகிமையைவிட தங்களது பதவியைப்பார்த்து மனிதர்கள் தங்களை மதிக்கவேண்டும் என எண்ணுகின்றனர். எனவே அவர்களால் தேவனை வாழ்வில் அறிய முடிவதில்லை.
பெருமையை விட்டு, தன்னைத்தான் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான் எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப நம்மைத் தாழ்த்தும்போது மட்டுமே நாம் தேவனை அறிந்து வாழ்வில் உயர்த்தப்படமுடியும். ஆம், "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 )
ஒருவேளை இப்படி மனிதர்களுக்குமுன் நம்மை நீதிமான்கள்போலக் காட்டி மனிதர்கள்முன் நாம் மேன்மையடையலாம் ஆனால் இப்படி மகிமையைத் தேடுவதை தேவன் அருவருகின்றார். இதனையே நாம் "அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 ) என்று வாசிக்கின்றோம்.
சுய மகிமையை நாடாமல், தேவன் நம்மை உயர்த்தும்படி அவரது கரங்களுக்குள் அடங்கியிருக்காவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 ) மற்றவர்களால் மகிமையடையும்படி ஆர்வமுடன் ஓடி தேவனுக்குமுன் அருவருப்படையாமல் பொறுமையாக அவர் நம்மை மகிமைப்படுத்தக் காத்திருப்போம்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"AATHAVAN"
Meditation - 1944
Thursday, June 04, 2026
"How can you believe,
when you accept glory from one another and you do not seek the glory that is
from the one and only God?" — John 5:44
To glorify someone can be
understood as honouring or showing respect to them. Citizens often regard kings
as glorious figures. Similarly, kings honour those who achieve great things in
their nation. Generally, many people desire to be honoured by others in this
manner. The true reason behind this is their pride. God alone is the rightful
owner of true glory. If we glorify Him, He will honour us.
Today’s meditation verse is
spoken by Jesus Christ to the Jews who did not believe in Him. The Jews did not
like that Jesus healed a man who had been bedridden for 38 years by the Pool of
Bethesda. The reason was that Jesus performed this miracle on the Sabbath.
Therefore, the Jews did not believe in Him. Because of this, Jesus looked at
them and asked:
"How can you believe,
when you accept glory from one another and you do not seek the glory that is
from the one and only God?" (John 5:44)
The deeper meaning behind
this question asked by Jesus Christ is this: "You want others to know
that you keep the Sabbath so that they will honour you. When you are so focused
on gaining respect from others, how can you believe in what I have done?"
Yes, if we are to know God and accept Him, it is essential that we first lay
down our self-pride. If we are prideful, running after human recognition and
demanding that everyone respect us, we cannot truly know God in our lives.
Yes, dearly beloved, it is
God who must lift us up; He is the one who must honour us. If we run around
thinking that our position, money, or authority will bring us glory, we will
never know God. Many leaders who hold high positions and guide churches
unknowingly fall into this trap of pride. That is to say, rather than seeking
the glory that comes from God, they desire people to respect them because of
their status. Consequently, they are unable to truly know God in their lives.
We can only know God and be
lifted up in life when we humble ourselves, in accordance with the words of
Jesus that whoever humbles himself will be exalted. Yes, Scripture says:
"Humble yourselves in
the presence of the Lord, and He will exalt you." (James 4:10)
Perhaps we can present
ourselves as righteous before men and gain prominence in their eyes, but God
detests such seeking of glory. We read about this here:
"And He said to them,
'You are those who justify yourselves in the sight of men, but God knows your
hearts; for that which is highly esteemed among men is detestable in the sight
of God.'" (Luke 16:15)
Instead of seeking
self-glory, the Bible instructs us to remain submissive under God's hand so
that He may lift us up.
"Therefore, humble
yourselves under the mighty hand of God, so that He may exalt you at the proper
time." (1 Peter 5:6)
Rather than running eagerly
to gain glory from others—only to become detestable before God—let us patiently
wait for Him to honour us.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment