"ஆதவன்" தியானம் - 1946
"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )
இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு போலீஸ் காவலர் அவரது உயரதிகாரிக்கு வணக்கம் செலுத்துவது, மாணவன் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவது, ஒரு அலுவலகத்தில் மேலதிகாரிக்கு பணியாளர்கள் வணக்கம் செலுத்துவது, நம்மைவிட மேலானவர்களை நாம் சந்திக்கும்போது அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது இவைகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட முறையில் இருக்கும். உதாரணமாக, நமது உறவினர்களை வரவேற்கும்போது போலீஸ் காவலர் தனது மேலதிகாரிக்கு வணக்கம் செலுத்துவதுபோல வணக்கம் செலுத்தி நாம் வரவேற்பதில்லை.
இந்த உலகத்தில் அவரவர்களுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையினை நாம் செலுத்த கவனமாக இருக்கின்றோம். இதனையே, "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது, ஆளுவோருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அவர்களுக்குக் கொடுங்கள்; தேவனுக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும், மரியாதையையும், வணக்கத்தையும் தேவனுக்குக் கொடுங்கள் என்கின்றார் இயேசு.
அப்போஸ்தலரான பவுலும், "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார்.
நாம் யாருக்கு எந்த அளவு மரியாதையும் வணக்கத்தையும் கடமைகளையும் செய்யவேண்டுமோ அந்த அளவு செய்தால் போதும். ஆனால் இன்று உலகத்தில் பல கிறிஸ்தவர்கள் அரசியல் தலைவர்களுக்குத் தேவனுக்குக் கொடுப்பதுபோல மகிமை கொடுக்கின்றனர். கடந்த தேர்தலின்போது இதனை நாம் வெளிப்டையாகப் பார்க்கமுடிந்தது.
இதுபோல, இளைஞர்கள் திரைப்பட நடிகர்களது படங்களுக்கு கடவுளுக்குக் கொடுப்பதுபோல மரியாதை செலுத்துகின்றனர். தங்களுக்குப் பிடித்த நடிகன் நடித்தத் திரைப்படம் வெளிவரும்போது கடவுளுக்குச் செலுத்துவதுபோல நடிகனின் படத்துக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.
இப்படி தேவனுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுப்பது பாவமான காரியமாகும். தேவன் ஒருவரே மகிமைக்கும் கனத்துக்கும் சொந்தக்காரர்.
ஏலியின் புதல்வர்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் கர்த்தருக்கான பலிப்பொருட்களை தாங்களே முதல்முதலில் எடுத்துக்கொண்டனர். இப்படி கர்த்தருக்கான மகிமையினைச் செலுத்தாமல் போயினர். அப்போது கர்த்தர் கூறியது:- "ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" ( 1 சாமுவேல் 2 : 30 )
நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். இந்த உலக வாழ்க்கையில் தேவனுடையதை இராயனுக்குச் செலுத்திக்கொண்டிருப்போமானால் நம்மைப்பார்த்துக் கர்த்தர் எச்சரித்துக் கூறுகின்றார், "என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்." ஆம், நமது உடலாலும் பொருளாலும் தேவனுக்குச் செலுத்தவேண்டிய மகிமையை தேவனுக்குச் செலுத்துவோம்; மற்றவர்களுக்கு செலுத்தவேண்டிய அளவுக்கு மட்டும் மகிமையினைச் செலுத்துவோம்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"AATHAVAN" Meditation - 1946
June 06, 2026, Saturday
"Render to Caesar the
things that are Caesar’s, and to God the things that are God’s." (Mark
12:17)
In this world, there are
differences in the ways we show respect to others. A police officer saluting
their superior, a student greeting a teacher, employees showing respect to a
manager in an office, or how we greet those who are greater than us when we
meet them—each of these happens in a different manner. For example, when
welcoming our relatives, we do not welcome them by saluting the way a police
officer salutes their superior officer.
We are careful to give
everyone in this world the respect they are due. It is this very concept that
Jesus Christ speaks of when He says, "Render to Caesar the things that
are Caesar’s, and to God the things that are God’s." That is, Jesus is
saying: give the rulers the respect due to them, and give God the honour,
respect, and worship due to God.
The Apostle Paul also says:
"Render to all what is
due them: tax to whom tax is due; custom to whom custom; fear to whom fear; honour
to whom honour." (Romans 13:7)
It is enough if we offer
respect, honour, and duty to whoever deserves it, strictly to that required
measure. But today, many Christians in the world give political leaders the
kind of glory that should only be given to God. We were able to see this
clearly during the recent elections.
Similarly, young people show
respect to the images of movie actors as if they were giving it to God. When a
movie starring their favourite actor is released, they attribute glory to the
actor's picture just like one would offer to God.
Giving others the respect
that belongs to God in this manner is a sinful thing. God alone owns glory and honour.
The sons of Eli did not give
the Lord the honour due to Him; instead, they took the sacrificial offerings
meant for the Lord for themselves first. Thus, they failed to give the Lord His
glory. At that time, the Lord said:
"Therefore, the Lord
God of Israel declares, 'I did indeed say that your house and the house of your
father should walk before Me forever'; but now the Lord declares, 'Far be it
from Me—for those who honour Me I will honour, and those who despise Me will be
lightly esteemed.'" (1 Samuel 2:30)
Let us examine ourselves. If
we are giving God's things to Caesar in this worldly life, the Lord looks at us
and warns us: "For those who honour Me I will honour, and those who
despise Me will be lightly esteemed." Yes, let us give God the glory
due to God with our bodies and our possessions; and let us give glory to others
only to the measure they are due.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment