DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, April 03, 2026

🦋 Meditation verse - பிலிப்பியர் 3 : 2 / Philippians 3:2

  "விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1885

🔆 2026 ஏப்ரல் 06, திங்கள்    


"நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்." ( பிலிப்பியர் 3 : 2 )

மனுக்குலத்தின் பாவங்களையும் சாபங்களையும் போக்கி அவர்களை நித்தியஜீவனுக்குத் தகுதிப்படுத்திட ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து பட்டப்பாடுகள் மனுக்குலம் அறியாத ஒன்றல்ல. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாடுகளின் வழியாக தனது சுய இரத்தத்தைச் சிந்தி உண்டாக்கிய மீட்பினை நாம் சில வெளியரங்கமான சடங்குகளை மேற்கொள்வதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று  போதிப்பவர்களை நாய்கள் என்று கோபத்தில் கூறுகின்றார் பவுல் அப்போஸ்தலர். இப்படிப் போதித்தவர்கள் பிலிப்பிய சபை விசுவாசிகளை அன்று குழப்பத்தில் ஆழ்த்தினர்.

நாய்கள் எச்சிகளையும் கெட்டுப்போன உணவினையும் உட்கொள்ளும் குணமுள்ளவைகள். பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் மனிதர்களை மீட்பதற்குப் போதுமானவையாக இல்லாததால்தான் இயேசு கிறிஸ்து பூமியில் வந்து பாடுபடவேண்டியிருந்தது. இப்போது கிறிஸ்துவின் கிருபையால்தான் நாம் மீட்கப்படுகின்றோம். அந்தக் கிருபையினை நாம் மறுதலித்து இன்னும் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும்  மீட்படைய பழைய ஏற்பாட்டு முறைமைகளையும் ஒருசில உடலை வருத்தும்  சடங்காச்சாரங்களையும்  வலியுறுத்திக்கொண்டும் அவைகளைச் செய்துகொண்டும் இருப்போமானால் நாம் நாய்களைப்போல பழைய கெட்டுப்போன உணவினை உண்பவர்கள் என்று பொருள்.

எனவே, அத்தகைய போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அந்தப் பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்,  அத்தகைய போதனைகளைப் போதிக்கும் சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். சுன்னத்துக்காரர்கள் (மீட்படைய விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி போதிப்பவர்கள்) என்பதற்கு, உடலை வருத்தும் ஒருசில முறைமைகளைச் செய்யும்படி கூறுபவர்கள் என்று நாம் இன்று பொருள்கொள்ளலாம். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனமாக அவர் கூறுகின்றார், "ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்." ( பிலிப்பியர் 3 : 3 ) ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட நாம்தான் தேவனுக்குமுன் விருத்தசேதனமுள்ளவர்கள். 

புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் கிருபையின் அடிப்படையிலானது. இதனைப் புரிந்துகொள்ளாமல் இன்னும் பாவமன்னிப்புக்காக, சாப நிவிர்த்திக்காக தேவையில்லாத பரிகாரங்களை நாம் செய்துகொண்டும் அவைகளை நம்பிக்கொண்டும் இருப்போமானால் கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்குகின்றோம் என்று பொருள்.  எனவேதான் பவுல் அப்போஸ்தலர், "நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்கின்றார். பழைய கட்டளைகளே போதுமென்றால் கிறிஸ்து மரிக்கவேண்டிய அவசியேமேயில்லை. 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் கிருபையினை நம்பாமலும் விசுவாசிக்காமலும் இருந்துகொண்டு இன்னும் நாம் பழைய ஏற்பாட்டு முறைமைகளையும், போதனைகளையும் அவை கூறுவதுபோல சில சடங்காச்சாரங்களையும்  போதித்துக்கொண்டும் அவற்றின்மேல் நம்பிக்கைக் கொண்டவர்களாகவும் வாழ்வோமென்றால் நாமும் தேவனுடைய பார்வையில் நாய்கள்தான். இப்படி இருப்போமானால் நாம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கமுடியாது.  

இப்படி இருப்பது சூனியம் செய்தல், விபச்சாரம், கொலைபாதகம், விக்கிரகாராதனை போன்ற பாவங்களைச் செய்வதுபோன்றது. எனவேதான் வேதம் தெளிவாகக் கூறுகின்றது, "நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 15 )  என்று.  "நாய்கள்" என்று அப்போஸ்தலரான பவுல் கூறிய வார்த்தையினையே இங்கு தேவன் யோவானுக்கும் வெளிப்படுத்தி எச்சரிக்கின்றார். 

பாவம்,  சாபம் இவைகளிலிருந்து விடுபடகிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகிய கிருபையினைச் சார்ந்துகொள்ளாமல் உடலை வருத்தும் தேவையில்லாத முறைமைகளை கடைபிடிப்போமானால் அவற்றிலிருந்து விடுபடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

"Inside the Seeds" 🌳                                                                📖 Aathavan Bible Meditation – No. 1885

🔆 Monday, April 06, 2026

"Beware of the dogs, beware of the evil workers, beware of the false circumcision;" (Philippians 3:2)

The sufferings that the Lord Jesus Christ underwent to remove the sins and curses of humanity and to qualify them for eternal life are not unknown to mankind. However, Apostle Paul, in righteous anger, refers to those as "dogs" who teach that the redemption Christ accomplished by shedding His own blood through His sufferings can be obtained by performing certain outward rituals. Such teachers were throwing the believers of the Philippian church into confusion in those days.

Dogs have the nature of consuming scraps and spoiled food. It was because the Old Testament laws were insufficient to redeem humanity that Jesus Christ had to come to earth and suffer. Now, we are redeemed only by the grace of Christ. If we deny that grace and continue to emphasize or perform Old Testament legalisms and certain body-afflicting rituals to seek deliverance from sin and curses, it means we are like dogs eating old, spoiled food.

Therefore, Apostle Paul warns: beware of such teachers, beware of those evil workers, and beware of those of the "false circumcision" who promote such teachings. Today, we can interpret "those of the circumcision" as those who insist on performing certain physical rituals or self-afflicting practices.

This is why, following today’s meditation verse, he states in the very next verse: "for we are the true circumcision, who worship in the Spirit of God and glory in Christ Jesus and put no confidence in the flesh," (Philippians 3:3). Yes, dearly beloved, we who have accepted and believed in Christ are the truly circumcised before God.

The New Testament is based on the grace of Christ. Without understanding this, if we continue to perform and rely on unnecessary penances for the forgiveness of sins or the removal of curses, it means we are making the grace of Christ void. That is why Apostle Paul says: "I do not nullify the grace of God, for if righteousness comes through the Law, then Christ died needlessly." (Galatians 2:21). If the old commandments were sufficient, there would have been no necessity for Christ to die.

Dearly beloved, if we live without trusting or believing in the grace of Christ, and instead continue to teach and place our confidence in Old Testament systems and rituals, we too are "dogs" in the sight of God. If we remain in this state, we cannot enter into eternal life.

Existing in such a state is likened to committing sins such as sorcery, immorality, murder, and idolatry. Therefore, the Scripture clearly states: "Outside are the dogs and the sorcerers and the immoral persons and the murderers and the idolaters, and everyone who loves and practices lying." (Revelation 22:15). The same word "dogs" used by Apostle Paul is revealed here by God to warn John as well.

Let us abandon unnecessary rituals that afflict the body and instead depend entirely on the grace produced by the blood of Christ to be delivered from sin and curses.

Message by: Bro. M. Geo Prakash                                                                                     

No comments: