"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1896
"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )
நமது தேவனுக்கு இன்றைய தியான வசனம், "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயரைக் கொடுத்துள்ளது. ஆம் அன்பானவர்களே, அவரை நாம் பற்றிக்கொள்வோமானால் அவரது பெயருக்கேற்ப நமது வாழ்வில் ஏற்படும் எந்தத் தடையாக இருந்தாலும் அவருக்குமுன் நீங்கிப்போகும். அப்படி நீங்கும்போது அவரது மக்களாகிய நாம் எளிதில் வாழ்வின் தடைகளைக் கடந்து அவரோடுகூட உட்பிரவேசித்துக் கடந்துபோகலாம்.
இதற்கு ஆதாரமாக வேதாகமச் செய்திகள் பல உண்டு. குறிப்பாக, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குப்பின் அப்போஸ்தலர்கள் சந்தித்த வேதனைகள், துன்பங்கள் பல. ஆனாலும் தடைகளை நீக்கிப்போடுகிறவர் அனைத்துத் தடைகளையும் நீக்கி அவர்களை தொடர்ந்து பலப்படுத்தினார்.
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அப்போஸ்தலர்கள் வாழ்வில் செய்த மூன்று முக்கிய காரியங்களை (தடைகளை) நாம் வேதாகமத்தில் பார்க்கின்றோம். முதலில், அனைத்து அப்போஸ்தலர்களும் கைதுசெய்யப்படுகின்றனர். "அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். " ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 17-20 ) என்று வாசிக்கின்றோம். ஆம், தடைகளை நீக்கிப்போடுகிறவர் இப்படி அவர்கள்முன் சென்றார்.
இதுபோலவே, ஏரோது இராஜா பேதுருவைக் கொலைசெய்ய எண்ணி, கைதுசெய்து சிறைச்சாலையில் அடைத்துவைத்தான். ஆனால், பேதுரு கொலைசெய்யப்டும் நாளுக்கு முந்தின நாள் இரவு சிறைச்சாலையின் கதவுகள் அற்புதமாகத் திறந்து, பேதுருவின் கட்டுகள் அகன்று அவர் அற்புதமாக சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 12:5 -10)
மேலும், கைதுசெய்யப்பட்ட அப்போஸ்தலரான பவுலும் சீலாவும் பிலிப்பி நகரின் சிறையில் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டவர்களாக காவல்படுத்தப்பட்டிருந்தனர். "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 )
ஆம் அன்பானவர்களே, கட்டுக்கள், சங்கிலிகள், சிறைச்சாலையின் கதவுகள் இவை எதுவும் அப்போஸ்தலர்களைத் தடுத்து அவர்களது வழியை மறிக்கமுடியவில்லை. காரணம், தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோனார்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போனார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோனார்.
இதே வல்லமையுள்ள தேவன் இன்றும் ஜீவனுள்ளவராக இருப்பதால் அவர் நமக்கும் இதுபோலவேச் செய்ய வல்லமையுள்ளவராக இருக்கின்றார். எனவே, நமது வாழ்வில் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள், கட்டுக்கள், வியாதிகள் இவைகளைக்குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமது இராஜாவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வோமென்றால், நமது வாழ்வின் தடைகளை அவர் மாற்றிப்போட வல்லவராகவே இருக்கின்றார்.
அன்பானவர்களே, துன்பங்களையும், பாடுகளையும் கடந்து சென்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டமுடியும்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் வாழ்வில் இப்படித் துன்பங்களையும் தடைகளையும் கடந்து சென்றவர்தான். எனவே அவர்தான் நமக்குமுன் சென்று தடைகளை நீக்கி வாசலைத் திறந்து நம்மை பரலோகத்தில் உட்பிரவேசிக்கச் செய்யமுடியும்.
இதனால்தான் எபிரெய நிருப ஆசிரியர், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 15-16 ) என்று கிறிஸ்துவை நாம் சேருவதற்கு அறிவுறுத்துகின்றார்.
தடைகளை நீக்கிப்போடுகிறவர் நமக்கு முன்பாக நடந்துபோவதை நாம் விசுவாசக் கண்கொண்டு பார்க்கமுடியுமானால் அவரோடுகூட உட்பிரவேசித்து தடைகளைக் கடந்து போகமுடியும். ஆம், நமது இராஜா நமக்கு முன்பாகப் போவார், கர்த்தர் நமது முன்னணியில் நடந்துபோவார்; எனவே நாம் தடைகளைக் கடந்து செல்ல முடியும். விசுவாசிப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்,
"Inside the Seeds" 🌳
AATHAVAN Scripture Meditation
– No. 1896
Friday, April 17, 2026
"The breaker goes up
before them; they break out, pass through the gate and go out by it. So, their
king goes on before them, and the Lord at their head." (Micah 2:13)
Our meditation today gives our
God a powerful name: "The Breaker" (The One who breaks through
barriers). Yes, dear ones, if we hold fast to Him, every obstacle in our lives
will vanish before Him, consistent with His name. When these barriers are
removed, we, as His people, can easily cross the hurdles of life and enter in
alongside Him.
The Bible provides numerous
accounts of this truth. Specifically, after the resurrection of our Lord Jesus
Christ, the Apostles faced immense agony and suffering. Yet, the One who breaks
through barriers removed every obstacle and continually strengthened them. We
see three major instances in the New Testament where "The Breaker"
acted in their lives:
The High Priest and the
Sadducees, filled with jealousy, arrested the Apostles and put them in public
jail.
"But during the night an
angel of the Lord opened the gates of the prison, and leading them out, he
said, 'Go, stand and speak to the people in the temple the whole message of
this Life.'" (Acts 5:19-20) Indeed, the One who removes barriers
went before them.
Similarly, King Herod intended
to kill Peter and kept him imprisoned. However, on the night before he was to
be executed, the prison gates miraculously opened, his chains fell off, and he
was wonderfully set free. (Acts 12:5-10)
When Paul and Silas were
arrested and fastened in stocks in the inner prison of Philippi:
"But about midnight Paul
and Silas were praying and singing hymns of praise to God, and the prisoners
were listening to them; and suddenly there came a great earthquake, so that the
foundations of the prison house were shaken; and immediately all the doors were
opened and everyone’s chains were unfastened." (Acts 16:25-26)
Beloved, no chains, no
shackles, and no prison doors could stop the Apostles or block their path. Why?
Because the Breaker went up before them; their King passed before them, and the
Lord was at their head.
Since this same powerful God
is alive today, He is just as capable of doing the same for us. Therefore, we
do not need to worry about the obstacles, problems, bondages, or sicknesses in
our lives. If we accept the Lord Jesus Christ as our King and consecrate our
lives to Him, He is mighty to transform and remove every barrier.
Only those who have walked
through suffering and trials can truly lead others. Our Lord Jesus Christ also
passed through such suffering and obstacles. Therefore, He is the One who can
go before us, remove the barriers, open the gate, and lead us into the Heavenly
kingdom.
This is why the author of
Hebrews encourages us to draw near to Christ:
"For we do not have a
high priest who cannot sympathize with our weaknesses, but One who has been
tempted in all things as we are, yet without sin. Therefore, let us draw near
with confidence to the throne of grace, so that we may receive mercy and find
grace to help in time of need." (Hebrews 4:15-16)
If we can see with the eyes of
faith that the Breaker is walking before us, we can pass through every obstacle
with Him. Yes, our King will go before us; the Lord will be at our lead. We
shall overcome. Let us believe.
Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment